மோக்கா புயல்; 11 மாவட்டங்களில் மழை: சென்னை வானிலை மையம் அறிக்கை

இன்று 11.05.2023, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

இன்று 11.05.2023, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
monsoon

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது.

Advertisment

நேற்று (10.05.2023) தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று (11.05.2023) காலை 05.30 மணி அளவில் "மோக்கா" புயலாக வலுப்பெற்று இன்று காலை 08.30 மணி அளவில் போர்ட் பிளேயரில் இருந்து சுமார் 510 கிலோ மீட்டர் மேற்கு- தென்மேற்கே நிலைகொண்டுள்ளது.

இதனால், இன்று 11.05.2023, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

தமிழகத்தில் நீலகிரி, கோயம்பத்தூர், தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, ஈரோடு, சேலம் மற்றும் நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

Advertisment
Advertisements

12.05.2023 முதல் 15.05.2023 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். சென்னையில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ் ஒட்டியே இருக்கும்.

மீனவர்களுக்காக எச்சரிக்கை:

அந்தமான் கடல் பகுதிகள்: 11.05.2023 மற்றும் 12.05.2023: சூறாவளிக்காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 70 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகள்: 11.05.2023: சூறாவளிக்காற்று மணிக்கு 65 முதல் 75 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 85 கிலோமீட்டர் வேகத்திலும் நிலவுகிறது; மாலை முதல் காற்றின் வேகம் மணிக்கு 80 முதல் 90 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 100 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

12.05.2023 மாலை வரை: காற்றின் வேகம் மணிக்கு 100 முதல் 110 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 120 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். அதன்பிறகு காற்றின் வேகம் படிப்படியாக குறைந்து 13.05.2023 அன்று மணிக்கு 55 முதல் 65 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 75 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

தென்மேற்கு வங்கக்கடல் (தென்கிழக்கு வங்கக்கடல் ஒட்டிய பகுதிகள்):

11.05.2023: சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகள்: 11.05.2023 காலை சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோமீட்டர் வேகத்திலும், 11.05.2023 மாலை முதல் மணிக்கு 80 முதல் 90 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 100 கிலோமீட்டர் வேகத்திலும், 12.05.2023 காலை முதல் மணிக்கு 110 முதல் 120 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 135 கிலோமீட்டர் வேகத்திலும், 13.05.2023 காலை முதல் மணிக்கு 130 முதல் 140 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 155 கிலோமீட்டர் வேகத்திலும், 13.05.2023 மாலை முதல் 14.05.2023 காலை வரை மணிக்கு 140 முதல் 150 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 165 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். அதன்பிறகு காற்றின் வேகம் படிப்படியாக குறையக்கூடும்.

வட கிழக்கு வங்கக்கடல் பகுதிகள்: 12.05.2023 அன்று சூறாவளிக்காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 70 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

அதன்பிறகு காற்றின் வேகம் படிப்படியாக உயர்ந்து 13.05.2023 காலை மணிக்கு 80 முதல் 90 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 100 கிலோமீட்டர் வேகத்திலும், 13.05.2023 மாலை முதல் 14.05.2023 காலை வரை மணிக்கு 140 முதல் 150 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 165 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். அதன்பிறகு காற்றின் வேகம் படிப்படியாக குறையக்கூடும்.

வடமேற்கு வங்கக்கடல் பகுதிகள்: 13.05.2023 காலை முதல் 14.05.2023 காலை வரை மணிக்கு 55 முதல் 65 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 75 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். அதன்பிறகு காற்றின் வேகம் படிப்படியாக குறையக்கூடும்.

மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளை செல்ல வேண்டாமென்று அறிவுறுத்த படுகிறார்கள்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu Weather Forecast Report

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: