அடுத்த 4 நாட்கள் இந்த மாவட்டங்களில் மழை: சென்னை வானிலை ஆய்வு மையம்

வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் விளக்கம் அளித்துள்ளது.

வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் விளக்கம் அளித்துள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
tamil nadu weather forecast

தமிழகத்தின் பெரும்பாலான பகுதியில் அடுத்த 4 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Advertisment

வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் விளக்கம் அளித்துள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 38- 39 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28- 29 டிகிரி செல்சியஸ் அளவை ஒட்டியே இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீனவர்களுக்காக எச்சரிக்கை:

Advertisment
Advertisements

25.05.2023 முதல் 27.05.2023 வரை: மன்னார் வளைகுடா மற்றும் தமிழக- ஆந்திரா கடலோரப் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

26.05.2023 மற்றும் 27.05.2023: இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளை செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu Weather Forecast Report

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: