scorecardresearch

இந்த தேதிகளில் தென் மாவட்டங்களுக்கு மழை: வானிலை ஆய்வு மையம் அறிக்கை

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

இந்த தேதிகளில் தென் மாவட்டங்களுக்கு மழை: வானிலை ஆய்வு மையம் அறிக்கை
Tamil Nadu Rains

Tamil Nadu Weather: தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது.

தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக,

டிசம்பர் 29ஆம் தேதி மற்றும் 30 ஆம் தேதி: தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வட உள்தமிழக மாவட்டங்களில் காலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

டிசம்பர் 31ஆம் தேதி முதல் ஜனவரி 2ஆம் தேதி வரை: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31-32 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23-24 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Tamil nadu weather forecast report by rmc 29th december 2022 till new year 2023