கடந்த சில நாட்களுக்கு முன் வங்கதேசம் மற்றும் மியான்மர் ஆகிய இடங்களை மோக்கா புயல் தாக்கியது. 240 கிலோமீட்டர் வேகத்தில் கடந்த இந்த புயல் அப்பகுதிகளை கடுமையாக தாக்கியது.
இந்த மோக்கா புயல் தமிழ்நாட்டை தாக்காத காரணத்தால், தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய மேகங்களை இது இழுத்து சென்றுள்ளது. இதனால் தமிழ்நாட்டிற்கு கோடை மழை முற்றிலுமாக குறைந்து வெயில் அதிகரித்தது.
இதைப்பற்றியும் தற்போது தமிழகத்தில் அதிகரிக்கும் வெப்பத்தை பற்றியும் வெதர்மேன் பிரதீப் ஜான் தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:
"சென்னையில் மீண்டும் இன்று அதிகாலை கடல் காற்று வீசும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் நகரின் மேற்கு பகுதிகள் மற்றும் புறநகர் பகுதிகள் தொடர்ந்து சூடாக இருக்கும். ஏனென்றால் கடல் காற்று அங்கு செல்ல நேரம் எடுக்கும்
இதனால் அந்த பகுதிகள் சூடாக இருக்கும். 40டிகிரி செல்ஸியஸ் பின்வரும் மாவட்டங்களில் பதிவாகி உள்ளது. கரூர், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விருதுநகர், மதுரை மற்றும் து.மலையின் சில பகுதிகள், டுட்டியின் சில பகுதிகள், நெல்லை மாவட்டத்தின் சில பகுதிகள்.
சென்னை, வேலூர், திருத்தணி பெல்ட் & கரூர் ஆகியவற்றின் புறநகர்ப் பகுதிகள் சூடான பகுதிகளின் லிஸ்டில் அதாவது ஹாட் சார்ட்களில் முதலிடத்தைப் பிடிக்கும்", என்று சென்னை வானிலை குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் போஸ்ட் செய்துள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil