scorecardresearch

16 இடங்களில் 3வது நாளாக சதம் அடிக்கும் வெயில்: 18-ம் தேதி வரை நீடிக்கும்; வானிலை மையம் எச்சரிக்கை

ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பிலிருந்து 2- 4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் என்று தெரிவித்துள்ளனர்.

Tamil News
Tamil News Updates

தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு இயல்பை விட வெயில் அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இன்று முதல் வருகின்ற 18ஆம் தேதி வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பிலிருந்து 2- 4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் என்று தெரிவித்துள்ளனர்.

இன்று வெயில் சதம் அடித்த மாவட்டங்கள்: திருச்சி, தஞ்சை, கடலூர், ஈரோடு, கரூர், பரமத்தி, நாகப்பட்டினம், நாமக்கல், சேலம் மற்றும் பாளையங்கோட்டை என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Tamil nadu weather forecast report heat 16th may 2023