தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழை மற்றும் குறைந்த வெப்பநிலையில் காரணத்தால், வானிலை ஆய்வாளர் பாலச்சந்திரன் தனது கணிப்பை தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது: "தமிழகத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணத்தால், 16 மாவட்டங்களில் போதிய அளவு பருவமழை பதிவாகவில்லை. நவம்பர் 25 முதல் டிசம்பர் 8 வரை தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை குறைவாக பதிவாகும் வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் நவ. 17 முதல் 23 ஆம் தேதி வரை வடகிழக்கு பருவமழை இயல்பை விட குறைவாக பெய்ததால், 22 மாவட்டங்களில் வெகு குறைவாக மழை பதிவாகியுள்ளது.
வருகின்ற, நவம்பர் 25 முதல் டிசம்பர் 8 வரை தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை குறைவாக பதிவாக வாய்ப்பு உள்ளது," என்று வானிலை ஆய்வாளர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
கேரள கடலோர பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக, நவம்பர் 25ஆம் தேதி முதல் நவம்பர் 29ஆம் தேதி, தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30-31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil