Tamil Nadu Weather Forecast: தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், தமிழகத்தின் 14 மாவட்டங்களில் கனமழை பெய்யும் வாய்ப்பு உள்ளது.
கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தேனி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று குறிப்பிட்டுள்ளனர்.
தமிழகத்தின் தலைநகரமான சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு ஒருசில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.
வடகிழக்கு பருவமழை தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அக்டோபர் 29ஆம் தேதியான இன்று துவங்கியுள்ளது.
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடற்பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இந்த கனமழையானது நவம்பர் 2ஆம் தேதி தொடர்ந்து பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil