TN Weather: வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதால், இந்த வார இறுதியில் தமிழகம் முழுவதும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நவம்பர் 21ஆம் தேதி தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளது என்பதால், ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நவம்பர் 20ஆம் தேதியில் இருந்து நவம்பர் 22ஆம் தேதி வரை தமிழ்நாடு மற்றும் தென் ஆந்திர கடலோரப் பகுதிகளில் மழை பெய்யும் என்று தனியார் வானிலை கணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நேற்று (நவம்பர் 17ஆம் தேதியன்று) தென்கிழக்கு வங்காள விரிகுடா மற்றும் அதை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் ன் தெரிவித்தது.
இது வருகின்ற நவம்பர் 19ஆம் தேதி அன்று, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளது.
இதுவே வடகிழக்கு பருவமழை தொடங்கிய பிறகு உருவாகும் இரண்டாவது குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையாகும். அடுத்த இரண்டு நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதிகபட்சம் வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் என்றும் குறைந்தபட்சம் வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸ் என்று குறிப்பிட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil