Tamil Nadu Weather Forecast Updates: தமிழகத்தின் பரவாலன இடங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில், “நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், திருநெல்வேலி, விருதுநகர் மற்றும் கன்னியாக்குமரி ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், மதுரை ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
வெப்பம்
திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, விழுப்புரம், கடலூர், திருச்சி, பெரம்பலூர், கரூர், தஞ்சை, திருவாரூர், மதுரை மற்றும் புதுச்சேரியில் வழக்கத்தை விட 2 முதல் 4 டிகிரி செல்ஸியஸ் வரை வெப்பம் அதிகரிக்கக் கூடும்.
சென்னை
சென்னையைப் பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். வெப்பநிலை குறைந்தபட்சம் 30 டிகிரி செல்ஸியஸாகவும், அதிகபட்சம் 39 டிகிரி செல்ஸியஸாகவும் இருக்கும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.