/tamil-ie/media/media_files/uploads/2019/06/template-2019-06-14T185438.665.jpg)
Tamil Nadu Weather News, வானிலை, chennai weatherman, weather chennai
Chennai Rain News And Tamil Nadu Weather Forecast: தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மழை பெய்து மக்களை மகிழ்வித்து வருகிறது. சென்னையைப் பொறுத்தவரை, மாநகருக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர் பிடிப்பு பகுதிகளில் கடந்த 24 மணிநேரத்தில் லேசான மழை பெய்து உள்ளது.
தஞ்சையில் ஏழு மாதங்களாக கடுமையான வறட்சி நிலவி வந்த நிலையில், ஒரத்தநாடு, அய்யம்பேட்டை, திருக்காட்டுப்பள்ளி, திருவையாறு, அம்மாபேட்டை, நாஞ்சிக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் மூன்று மணி நேரத்திற்கு மேலாக மழை நீடித்தது. இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். தவிர விருதுநகர் மாவட்டம் திருச்சுழி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் நல்ல மழை பெய்தது.
/tamil-ie/media/media_files/uploads/2019/05/rain-warning-300x167.jpg)
Chennai Weather News: இன்றைய வானிலை
சென்னையைப் பொறுத்தவரை, மாநகருக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர் பிடிப்பு பகுதிகளில் கடந்த 24 மணிநேரத்தில் லேசான மழை பெய்து உள்ளது. சோழவரம் ஏரி நீர் பிடிப்பு பகுதிகளில் 3 மில்லி மீட்டர், புழல் 12 மி.மீ., செம்பரம்பாக்கம் 10 மி.மீ. மற்றும் கொரட்டூர் அணைக்கட்டு பகுதிகளில் 3 மி.மீ., தாமரைப்பாக்கத்தில் 13 மி.மீ., என்ற அளவில் மழை பதிவாகி உள்ளது.
இந்நிலையில் சென்னை வானிலை மையம் நேற்றிரவு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, ”கடலூர், நாகை, திருவாரூர், அரியலூர், தஞ்சை ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும். மேற்கூறியுள்ள மாவட்டங்களின் ஒரு சில இடங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும், வெப்பநிலை அதிகபட்சமாக 38 டிகிரி செல்சியசாக பதிவாகும்” என அதில் கூறப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.