Tamil Nadu Weather Forecast Updates: தமிழ்நாட்டில் தற்போது பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று கன்னியகுமாரி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. குறிப்பாக கொட்டாரத்தில் 62.4 மி.மீ மழை பெய்தது. இதனால் அம்மாவட்ட மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் கல்பாக்கம் மற்றும் சுற்றுவட்டார இடங்களில் மிதமான மழை பெய்தது. அதோடு மாமல்லபுரம், திருப்போரூர், திருக்கழுக்குன்றம் உள்ளிட்ட இடங்களிலும் மிதமான மழை பெய்தது. கொடைக்கானல் சுற்று வட்டார பகுதியிலும் சாரல் நீடித்தது.
இந்நிலையில், சென்னை வானிலை மையம் நேற்றிரவு 9 மணிக்கு வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில், “விருதுநகர், கன்னியாகுமரி, நீலகிரி, கோவை, தேனி மற்றும் திருநெல்வேலியில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். குறிப்பாக நீலகிரி, கோவை, தேனி மற்றும் திருநெல்வேலியில் கனமழை பெய்வதற்கான வாய்ப்புள்ளது.
Tamil Nadu Weatherman: டெல்டா மக்களுக்கு சந்தோஷ செய்தி, சென்னையில் 9-ம் தேதி டமால்.. டுமீல்..!
சென்னையைப் பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும்” என்று கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருவதால், வெப்பம் தணிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.