/tamil-ie/media/media_files/uploads/2019/08/z1688.jpg)
Chennai weather news, Chennai weather news today, Tamil Nadu weather, Tamil Nadu news weather, weather news in Tamil, Chennai weather forecast,
Weatherman about Rain Chance in Tamil Nadu: தமிழகத்தில் மழை நிலவரம் குறித்து தமிழ்நாடு வெதர்மேன் என்றழைக்கப்படும் பிரதீப் ஜான் தனது பேஸ்புக் பக்கத்தில், "தமிழகத்தில் வெப்பச் சலன மழை தொடருகிறது. காஞ்சி, திருவள்ளூர், சென்னை ஆகியவற்றை உள்ளடக்கிய KTC பகுதியில் மீண்டும் மழையை நாம் பார்க்கப் போகிறோம். நகரின் சில பகுதிகள் மற்றும், புறநகர் பகுதிகளில் மழை கிடைக்கும். பாண்டி, கடலூர் மற்றும் விழுப்புரம் ஆகிய பகுதிகளிலும் மழைப் பொழிவு இருக்கும்.
மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, டெல்டா உள்ளிட்ட பகுதிகளில் மீண்டும் மழை இருக்கும். அதேபோல், திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம் ஆகிய பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது.
பெங்களூருவில் தொடர்ந்து மழை பெய்யும் என்பதால், சேலத்திலும் நிச்சயம் மழை பெய்யும் என்பது உறுதி.
கிருஷ்ணகிரி - தருமபுரி ஆகிய பகுதிகளிலும் கண்டிப்பாக மழை இருக்கிறது" என்று தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.