சென்னையில் நன்றாக மழை பெய்யும் என்றும் தென் கேரளா, கன்னியாகுமரியில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வெதெர்மேன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கோடை வெப்பம் அதிகரித்து வந்த நிலையில், தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மழைபெய்தது. இந்நிலையில் தமிழகத்திற்கு உள்ள 4 மாவட்டங்களில் 2 நாட்களுக்கு ரெட் அலர்ட் நீட்டிக்கப்பட்டுள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு வெதர்மேன் அவரது முகநூல் பக்கத்தில் அவர் பகிர்ந்த பதிவில் ” இன்றைய அதிகாலை நிலவரப்படி சென்னை ( காஞ்சிபுரம், திருவள்ளூர்,. செங்கல்பட்டு, சென்னை ) பகுதியில் அங்கொன்றும், இங்கொன்றுமாக புயல் ஏற்பட்டுள்ளது . மேலும் கடலில் புயல்கள் வரிசையாக நிற்பதால், சென்னையில் பல்வேறு இடங்களில் மழை பெய்யக்கூடும். இதனால் சென்னையில் இருப்பவர்கள் ரெயின் கோட்டை எடுத்துச்செல்ல இன்று மறக்க வேண்டாம்.
தென் கேரளா, கன்னியாகுமரியில் இன்று கனமழை பெய்ய வாயுப்புள்ளது. நீலகிரி மற்றும் வால்பாறையிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.நேற்று தமிழகத்தின் உள்மாவட்டங்களின் பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்ததும் போல் இன்றும் பெய்ய வாய்ப்புள்ளது” என்று அவர் தெரிவித்துள்ளார்.