Advertisment

தமிழகத்தில் 15 மாவட்டங்களில் அதி கனமழை எச்சரிக்கை: டிசம்பர் 9-ம் தேதி வரவிருக்கும் புயல்!

டிசம்பர் 9ஆம் தேதி தமிழகத்தில் 15 மாவட்டங்களில் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

author-image
WebDesk
New Update
தமிழகத்தில் 15 மாவட்டங்களில் அதி கனமழை எச்சரிக்கை: டிசம்பர் 9-ம் தேதி வரவிருக்கும் புயல்!

TN Rain

Tamil Nadu Weather Report Today: தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. புதுவை, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது.

Advertisment

நேற்று தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காலை தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலைகொண்டுள்ளது. இது மேற்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று மாலை தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையக்கூடும்.

publive-image

பிறகு மேலும் மேற்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை (டிசம்பர் 7ஆம் தேதி) மாலை புயலாக வலுவடையக்கூடும். இது மேலும் மேற்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து டிசம்பர் 8 மற்றும் 9ஆம் தேதிகளில் வடதமிழகம்- புதுவை, மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளை ஒட்டி நிலவக்கூடும்.

இன்று மற்றும் நாளை (டிசம்பர் 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில்) தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

டிசம்பர் 8ஆம் தேதி தமிழக கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களிலும், உள்தமிழக மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

தமிழகத்தில் உள்ள திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.

மேலும், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

டிசம்பர் 9ஆம் தேதி தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

தமிழகத்தில் உள்ள திருவள்ளூர், சென்னை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

மேலும், வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருச்சிராப்பள்ளி, கரூர், புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

டிசம்பர் 10ஆம் தேதி தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

தமிழகத்தில் உள்ள திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

மேலும், கிருஷ்ணகிரி, தருமபுரி, ஈரோடு, சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் ஆகிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

அந்தமான் கடல் பகுதிகள்: சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோமீட்டர் வேகத்தில் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்தில் இன்று வீசக்கூடும்.

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகள்: சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் இடையிடையே 65 கிலோமீட்டர் வேகத்தில் இன்று வீசக்கூடும். மேலும், காற்றின் வேகம் படிப்படியாக உயர்ந்து டிசம்பர் 7ஆம் தேதி மணிக்கு 50 முதல் 60 கிலோமீட்டர் வேகத்தில் இடையிடையே 70 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். பிறகு காற்றின் வேகம் படிப்படியாக குறைந்து டிசம்பர் 8ஆம் தேதி மணிக்கு 40 முதல் 45 கிலோமீட்டர் வேகத்தில் இடையிடையே 55 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

தமிழக- புதுவை மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகள், வட இலங்கை கடலோரப்பகுதிகள்: சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்தில் டிசம்பர் 8ஆம் தேதி காலையோ தொடங்கி காற்றின் வேகம் படிப்படியாக உயர்ந்து மாலை முதல் டிசம்பர் 9ஆம் தேதி மாலை வரை மணிக்கு 50 முதல் 60 கிலோமீட்டர் வேகத்தில் இடையிடையே 70 கிலோ மீட்டர் வேகத்திலும், டிசம்பர் 9ஆம் தேதி மாலை முதல் டிசம்பர் 10ஆம் தேதி காலை வரை மணிக்கு 70 முதல் 80 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

பிறகு காற்றின் வேகம் படிப்படியாக குறைந்து டிசம்பர் 10ஆம் தேதி மாலை மணிக்கு 50 முதல் 60 கிலோமீட்டர் வேகத்தில் இடையிடையே 70 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளை செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu Weather Chennai Weather Report Weather Forecast Report
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment