சென்னை டூ டெல்டா: மழை வெளுக்கும் மாவட்டங்கள் இவைதான்!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகத்தில் சென்னை முதல் டெல்டா மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழை பெய்வதற்கு வாய்ப்புள்ள மாவட்டங்களை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகத்தில் சென்னை முதல் டெல்டா மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழை பெய்வதற்கு வாய்ப்புள்ள மாவட்டங்களை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
tamil nadu weather report, heavy rain expected in chennai, tamil nadu weather, தமிழ்நாடு, வானிலை ஆய்வு மையம், வானிலை அறிவிப்பு, தமிழகத்தில் கன மழை, சென்னை, கடலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், வேலூர், கன மழை, இடி மின்னல், heavy rain in cuddalore, rain, thunder rain,nagai, thanjavur, thiruvannamalai, villupuram, vellore, perambalur

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகத்தில் சென்னை முதல் டெல்டா மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழை பெய்வதற்கு வாய்ப்புள்ள மாவட்டங்களை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Advertisment

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு  சென்னை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், கடலூர் டெல்டா மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக சென்னை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர் ஆகிய மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, கடலூர், நாகப்பட்டினம், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், தமிழகத்தில் ஏனைய கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும், உள் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடிமின்னலுடன் கூடிய கன மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment
Advertisements

ஜனவரி 6ம் தேதி நீலகிரி, கடலூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடிமின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும் என்றும் கடலோர மாவட்டங்களான சென்னை மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும், உள் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே போல, ஜனவரி 7ம் தேதி தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் பெரும்பாலான பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய மிதமான மழையும், ஒரு சில பகுதிகளில் கன மழையும் பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதே நேரத்தில், கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்களுக்கு வானிலை எச்சரிக்கை எதுவுமில்லை என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"
Weather Chennai Weather Report Tamilnadu Weather

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: