Advertisment

Weather Highlights: 11, 12-ம் தேதிகளில் தமிழகத்தில் கன மழைக்கு வாய்ப்பு

வியாழன் முதல் மூன்று நாட்களுக்கு 9 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என தெரிவிக்கும் வகையில் சென்னைக்கு ஆரஞ்சு எச்சரிக்கையை IMD விடுத்துள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Weather Highlights: 11, 12-ம் தேதிகளில் தமிழகத்தில் கன மழைக்கு வாய்ப்பு

TN Weather

Tamil Nadu orange alert: தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், இன்று (நவம்பர் 9ஆம் தேதி) முதல் நவம்பர் 12ஆம் தேதி வரை வடமேற்கு திசையில் தமிழகம் மற்றும் புதுச்சேரி கடற்கரையை நோக்கி நகரும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Advertisment

தமிழகத்தில் ஒருசில மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்ட நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், தமிழ்நாட்டில் எந்தெந்த மாவட்டங்களில் இன்று மழை பெய்யும் என்கிற தகவல்களை இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil



  • 17:09 (IST) 09 Nov 2022
    தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

    தமிழகத்தில் உள்ள கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.



  • 15:40 (IST) 09 Nov 2022
    தமிழகம், புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும்

    தமிழகத்தில் புயலுக்கு எந்த வாய்ப்பும் இல்லை. நவம்பர் 11,12-ஆம் தேதிகளில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அடுத்த 48 மணி நேரத்திற்குள் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறும்.

    தமிழகம்,புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில், நவம்பர் 9,10-ஆம் தேதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய கூடும் என்று வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் கூறுகிறார்.



  • 14:59 (IST) 09 Nov 2022
    காற்றழுத்தத் தாழ்வு பகுதி வலுப்பெறும்

    தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவாகிக்கொண்டிருந்த வளிமண்டல சுழற்சி வலுப்பெற்று குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருமாறியது.

    அடுத்த 48 மணி நேரத்திற்குள் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறும். நவம்பர் 12ம் தேதிக்குள் வடமேற்கு தமிழ்நாடு, புதுச்சேரி கடற்கரையை நோக்கி நகர்ந்து வரக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.



  • 14:13 (IST) 09 Nov 2022
    மீனவர்கள் கவனத்திற்கு: வானிலை நிலவரம்

    இன்று மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகள், தென் தமிழக கடலோரப்பகுதிகள், இலங்கை கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.



  • 13:30 (IST) 09 Nov 2022
    கரையை ஒடி வரும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி

    அடுத்த 48 மணி நேரத்தில், வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வலுப்பெற்று கரையை ஒடி வரக்கூடும். இதனால், தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளது. சில பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. நவம்பர் 13ஆம் தேதி வரை மழை பெய்யக்கூடும்.



  • 12:39 (IST) 09 Nov 2022
    சென்னையில் கனமழை தீவிரமடையும்

    சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் வரும் நாட்களில் கனமழை தீவிரமடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து, கடலூர், விழுப்புரம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஆனால், ஒரு சில இடங்களில் கனமழை பதிவாகக்கூடும்.



  • 12:00 (IST) 09 Nov 2022
    இந்த 6 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரம் மழை

    தமிழகத்தில் உள்ள நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், நெல்லை, புதுக்கோட்டை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.



  • 11:30 (IST) 09 Nov 2022
    மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள் கவனத்திற்கு!

    கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், மேலும் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களில் கனமழை தொடர்ந்து தீவிரமாகும் வாய்ப்புள்ளது.



  • 10:43 (IST) 09 Nov 2022
    தமிழகத்தில் 4 மாவட்டங்களில் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை பெய்யும் வாய்ப்பு

    மதுரை, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை பெய்யும் வாய்ப்புள்ளது. திருச்சிராப்பள்ளி மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் தொடர் மழை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    வருகின்ற நவம்பர் 11 மற்றும் 12 ஆம் தேதிகளில் டெல்டா பகுதிகளில் மழை தீவிரமடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



  • 09:58 (IST) 09 Nov 2022
    தமிழகத்தில் 7 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்

    தமிழகத்தில் உள்ள கன்னியாகுமரியில் மிதமான முதல் கனமழைக்கு வாய்ப்புள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் வரும் நாட்களில் தொடர்ந்து கனமழை நீடிக்கும். கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், கரூர், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் இரவு நேரங்களில் மிதமான முதல் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது.

    தமிழகத்தில் உள்ள திருப்பூர் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



  • 09:53 (IST) 09 Nov 2022
    ராமநாதபுரத்தில் கனமழை தீவிரமடையும் வாய்ப்பு

    இன்று மற்றும் நாளை (நவம்பர் 10ஆம் தேதியன்று) ராமநாதபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது.

    ராமேஸ்வரம், மண்டபம் போன்ற பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. சாயல்குடி, கீரனுர் போன்ற பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. வரும் நாட்களில் மேலே குறிப்பிட்ட இடங்களில் மழை தீவிரமடையும் வாய்ப்புள்ளது.



  • 09:45 (IST) 09 Nov 2022
    தமிழகத்தில் 4 மாவட்டங்களில் மழையின் தீவிரம் அதிகரிக்கும்

    தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது. அதிகாலையில் இருந்து தமிழகத்தில் உள்ள நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் மழை பதிவாகி வருகிறது.

    மேலும், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் மழையின் தீவிரம் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.



Tamil Nadu Chennai Weather Forecast Report
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment