வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில்,
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் வட கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், தென் கடலோர மாவட்டங்களில் மிதமான மழையும், நெல்லை, தூத்துக்குடி, இராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.
05.01.21: தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், கள்ளக்குறிச்சி, அரியலுர் மாவட்டகள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும், உள் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
06.01.21: தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், தேனி, நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
07.01.21 : தமிழகம், புதுவை மற்றும் காரைகால் பகதிகளில் ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
08.01.21 : தமிழகம், புதுவை மற்றும் காரைகால் பகதிகளில் ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மீனவர்களுக்கு எச்சரிக்கை ஏதுமில்லை "என்று தெரிவித்தது.
Clouds approaching Tamilnadu coast . Rain(at times heavy) possible over many places in south and central Tamilnadu till Puducherry latitude. #Chennai and northern districts may get lite to moderate showers. pic.twitter.com/Q8NiB6kNi3
— Chennai Weather (@chennaiweather) January 4, 2021
மத்திய பாகிஸ்தான் மற்றும் அதனையொட்டியுள்ள பகுதிகள், தென்மேற்கு ராஜஸ்தான் மற்றும் அதனையொட்டியுள்ள பகுதியில் புயல் மேலடுக்கு சுழற்சி காணப்படுகிறது. இதன் காரணமாக வடமேற்கு இந்தியாவில் ஜனவரி 5ம் தேதி வரை இடி, மின்னலுடன் மிதமானது முதல் தீவிர மழை பெய்யும். பஞ்சாப், ஹரியானா, சண்டிகர் மற்றும் தில்லி, மேற்கு உத்தரப் பிரதேசம் மற்றும் வடக்கு ராஜஸ்தானில் 3 மற்றும் 4ம் தேதிகளிலும், ஜம்மு காஷ்மீர், லடாக், முசாபராபாத், இமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய பகுதிகளில் ஜனவரி 4 மற்றும் 5ம் தேதிகளில் மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் முன்னதாக தெரிவித்தது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.