சென்னைவாசிகளே வெளியே வந்துறாதீங்க - அனல் காற்று அபாயம் : மழையும் சில இடங்கள்ல இருக்காம்
Tamil nadu weather update : சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு வறண்ட வானிலையே நிகழும் என்றும் அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் இருக்கும்
Tamil nadu weather update : சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு வறண்ட வானிலையே நிகழும் என்றும் அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் இருக்கும்
சென்னை, கரூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இன்று அனல் காற்று வீசும் என்பதால், பொதுமக்கள் வெளியே வருவதை போதுமான வரை தவிர்க்குமாறு சென்னை மண்டல வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.
Advertisment
தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் காரணமாக பலபகுதிகளில் கடுமையான வெப்பம் நிலவி வருகிறது. இன்னும் சில தினங்களில் அக்னி நட்சத்திரம் நிறைவடைய உள்ள நிலையில், வெயிலின் கொடுமை குறைந்தபாடில்லை. மாநிலத்தின் பலபகுதிகளில் வெப்பநிலை சதமடித்து வருகிறது.
சென்னையில் இயங்கிவரும் மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இன்று அனல் காற்று வீசும். குறிப்பிட்ட நேரத்தில் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.
Advertisment
Advertisements
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, கரூர் மாவட்டங்களில் காலை 11.30 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை,மக்கள் வெளியே வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இந்த அனல் காற்று, இன்னும் 2 நாட்களுக்கு நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரூர், வேலூரில் உச்சம் : கரூர்,வேலூர் மாவட்டங்களில் வெப்பநிலை அதிகபட்சமாக 41.8 டிகிரி செல்சியஸ் ஆக பதிவாகி உள்ளது.
மழைக்கு வாய்ப்பு : மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், திருச்சி, திருப்பத்தூர், மதுரை, தேனி, கோவை, நீலகிரி, நெல்லை, கன்னியாகுமரி, திண்டுக்கல், புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர் , ராமநாதபுரம், தென்காசி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு வறண்ட வானிலையே நிகழும் என்றும் அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil