Tamil Nadu Weather Today Chennai Rains Monsoon 2019 Forecast latest updates : வெகுநாட்களுக்குப் பிறகு, அதாவது 197 நாட்களுக்குப் பிறகு தமிழகத்தின் தலைநகரான சென்னையில் மழை கொஞ்சம் நேரம் பெய்து மக்களின் மனதினை குளிர்வித்தது. ஆனால் தமிழ்நாடு வெதர்மேன் ப்ரதீப் ஜான் கூறியது போன்று தான், இது நமக்கான பருவமழை அல்ல. மிகவும் குறைவான மழைப் பொழிவையே இந்த பருவத்தில் நாம் பெற இயலும்.
எனவே கூடுமான வரையில் கிடைக்கும் மழையை சேமித்து வைத்துக் கொள்ளுங்கள். அளவுக்கு அதிகமாக தண்ணீர் விரையம் செய்யாதீர்கள். நீரின் அவசியத்தை இந்த இடைப்பட்ட காலம் நமக்கு நன்றாகவே உணர்த்தியுள்ளது. மேலும் அடுத்த வருட இறுதிக்குள் சென்னையில் நிலத்தடி நீர் முற்றிலுமாக இருக்காது என்று நிதி அயோக் தெரிவித்திருக்கும் அதிர்ச்சி தகவலையும் மனதில் கொண்டு மரம் வளர்ப்போம். மழை நீரை பாதுகாப்போம்.
இன்றைய வானிலை
சென்னை வானிலை அறிக்கை நேற்று நள்ளிரவு வெளியிட்ட வானிலை அறிக்கையில் கூறப்பட்டிருக்கும் முக்கிய தகவல்கள் இதோ உங்களுக்காக.
கனமழைக்கான வாய்ப்புகள் அதிகம் உள்ள பகுதிகள்
இன்று தமிழகத்தில் நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி போன்ற மேற்குதொடர்ச்சி மலைத் தொடர்களுக்கு அருகே அமைந்திருக்கும் பகுதியில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக அறிவித்துள்ளது சென்னை வானிலை ஆராய்ச்சி மையம்.
நேற்று அதிக அளவு மழை பெய்த இடங்கள்
- குன்னூர் (உதகை) - 3 செ.மீ. மழை பதிவானது
- கோவையின் சின்னக்கல்லாறு மற்றும் தேனியின் பெரியகுளம் பகுதியில் 2 செ.மீ மழை பதிவானது
- சோலையாறு, கீழ் கோதையாறு ஆகிய இடங்களில் 1 செ.மீ. மழை பதிவானது.
சென்னை வானிலை
சென்னையில் காலையில் இருந்தே வானம் மேக மூட்டத்துடன் தான் காணப்படுகிறது. இன்றைய நாள் முழுவதும் இது நீடிக்கும். பல்வேறு இடங்களில் இன்று மழைக்கான வாய்ப்புகள் உள்ளன.
நேற்றைய வெப்பநிலையில் இருந்து 1 டிகிரி செல்சியஸ் வெப்பம் கீழ் இறங்கியுள்ளது.
அதிகபட்ச வெப்பநிலையாக 40 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகக் கூடும். குறைந்தபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸாக பதிவாகும்.
மேலும் படிக்க : Chennai Rains : ‘அடுத்த 6 நாட்களுக்கு மழை தான்; வெப்பத்துக்கு இனி குட்பை சொல்லுங்க’ – தமிழ்நாடு வெதர்மேன்