Chennai weather latest updates: தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். குறிப்பாக தண்ணீர் தட்டுப்பாடு தமிழகத்தை உலுக்கியது. இந்நிலையில் மழை சற்று ஆறுதலை அளித்திருக்கிறது.
இதற்கிடையே சென்னை வானிலை மையம் நேற்று இரவு ஒன்பது மணிக்கு வெளியிட்ட அறிக்கையில், "தமிழகத்தில் குறிப்பிட்ட சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை வானிலை
சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதோடு சென்னையின் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸாக இருக்கும் என்றும், அதிகபட்சமாக 35 டிகிரி செல்சியஸாக பதிவாகும்" என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதோடு, தமிழ்நாடு வெதர்மேன், "இன்று வடசென்னை பகுதிகளில் மழை பெய்யும் என்றும் தினமும் மாலை மற்றும் முன்னிரவில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும்" அவரது முகநூலில் தெரிவித்துள்ளார்