தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் 12 முதல் 20 செ.மீ. வரை மழைப்பொழிவு பதிவாகக் கூடுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரம் தமிழகத்தில் 23, 24, 25 ஆகிய தேதிகளில் அதன் அதி கனமழைக்கான எச்சரிக்கையை திரும்பப் பெற்றது.
கேரளா, தெற்கு உள்கர்நாடகா பகுதிகளில் தென்மேற்குப் பருவ மழை தீவிரமடைந்துள்ளது.
இந்த நிலையில், மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது
அதன்படி, நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்ட மலை பகுதிகளில் இன்று ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகள் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை(ஜூன் 23)ல் நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலை பகுதிகளில் ஒரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும் பெய்யக்கூடும்.
திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகள் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
ஜூன் 24ல் கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
மேலும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று மாலை அல்லது இரவு வேளையில், இடி,மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது, என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
குமரிக்கடல் , மன்னாா் வளைகுடா மற்றும் அதனையொட்டிய தென்தமிழக கடலோரப்பகுதிகளில் ஜூன் 22-25 வரை மணிக்கு 55 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். இதனால் மீனவா்கள் இப்பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அப்டேட்
திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி ஆகிய 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு சென்னை வானிலை ஆய்வு மையம் தற்போது அறிவித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“