சென்னையை நோக்கி வருகிறது அடுத்த புயல்… வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த வெதர்மென்

டிசம்பர் 14 மற்றும் 15ம் தேதி வரை தமிழகத்தில் வறண்ட வானிலையே காணப்படும்

By: Updated: December 8, 2018, 05:14:40 PM

Tamil Nadu weather Update : சென்னையில் இருப்பவர்களுக்கு பெரும் கவலை என்பதே இந்த டிசம்பர் மாதம் தான். டிசம்பர் மாதத்தின் பாதி நாட்கள் சென்றவுடன், எப்போது என்ன பிரச்சனை வரும், எங்கே புயல் வரும், எங்கே மதகு திறக்கப்படும் என்று காத்துக் கொண்டு தான் இருப்பார்கள்.  சென்னையை நோக்கி வருகிறது அடுத்த புயல். சென்னையை தாக்க வரும் புதிய புயல். சென்னைவாசிகளே உஷார் போன்ற செய்திகளும் வதந்திகளும் பரவி வருகிறது. இவை அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் தமிழ்நாடு வெதர்மென்.

Tamil Nadu weather Update :

அவருடைய முகநூல் பக்கத்தில் “மிட் டிசம்பர் வரும் வரையில் அனைவரும் காத்திருக்க வேண்டும். மியான்மரைத் தாக்கும், ஒடிசாவைத் தாக்கும், மற்றும் ஆந்திராவைத் தாக்கும் என்று கூறி இறுதியில் தமிழகத்தை நோக்கி தான் புயல்கள் நகரும். ஆனால் தமிழகத்தை நோக்கி நகர்ந்து வரும் காற்றடுக்கு என்பது மேலடுக்கு சுழற்சியாகவோ, வளி மண்டல அழுத்தமாகவோ அல்லது புயலாகவோ வலுப்பெறுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

அதே போல் டெல்டா பகுதிகளில் மழை பெய்யுமா அல்லது காஞ்சிபுரம் – திருவள்ளூர் – சென்னை பகுதிகளுக்கு மழை வாய்ப்பு அதிகமா என்பதையும் பொறுத்து தான் பார்க்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். ஆனால் சென்னை போதுமான மழையை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதுவரை அடுத்த புயல் சின்னம் என்று கூறும் வதந்திகளை ரசித்துக் கொண்டிருங்கள். டிசம்பர் 14 மற்றும் 15ம் தேதி வரை தமிழகத்தில் வறண்ட வானிலையே காணப்படும்” என்று அவர் கூறியிருக்கிறார்.

மேலும் படிக்க : சென்னை மக்களுக்கு குட் நியூஸ்.. அடுத்த 24 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு!

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Tamil nadu weather update no rain till december 14 and 15 says tamil nadu weatherman

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X