Tamil Nadu Weather update : நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, ராமநாதபுரம், தென்காசி ஆகிய மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய மிகக் கனமழை பெய்யக் கூடும் என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. விருதுநகர், சிவகங்கை, மதுரை, கடலூர் மற்றும் டெல்டா மாவட்டங்களிலும், புதுவை, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக் கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக் கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Schools shut down
கடலூர், புதுக்கோட்டை, திருவாரூர், நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம் மற்றும் குமரி மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இன்று காலை முதல் மழை தொடர்ந்து பெய்து வருவதால் இந்த 8 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் கல்லூரிகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
Chennai weather
சென்னையைப் பொறுத்துவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை, இடியுடன் பெய்யக் கூடும். வெப்பநிலை அதிகபட்சமாக 30 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபடமாக 25 டிகிரி செல்சியஸாகவும் நிலவும் என்று கூறப்பட்டுள்ளது.
அதிகமாக மழைப் பொழிவு பதிவான இடங்கள்
கடந்த 24 மணி நேரத்தில் நாகை மாவட்டத்தில் 12 செ.மீ மழை பதிவாகியுள்ளது. காரைக்காலில் 10 செ.மீ மழை பதிவாகியுள்ளது. திருவாரூரில் 8 செ.மீ மழையும், வேதாரண்யத்தில் 7 செ.மீ மழையும், குமரியின் தக்கலையில் 6 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது. திருவாரூரின் நன்னிலத்தில் 5 செ.மீ மழை பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil