தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் இந்த ஆண்டு கடுமையான வெப்பம் நிலவி வருகிறது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர்.
மார்ச், ஏப்ரல் மாதங்களில் வட தமிழகத்தின் உள் மாவட்டங்களில் கடும் வெப்பம் வாட்டி வதைத்தது.
சமீபமாக சென்னையில் கடும் வெயில் பதிவாகி வருகிறது. குறிப்பாக, நேற்று முன்தினம் (மே 29) நடப்பாண்டில் அதிகபட்சமாக 106 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை சென்னை, மீனம்பாக்கத்தில் பதிவானது.
அன்றைய தினம் சென்னையின் மின் பயன்பாடும் உச்சத்தை அடைந்தது.
தமிழகத்தில் வியாழக்கிழமை நிலவரப்படி, 18 இடங்களில் வெயில் சதம் அடித்தது. அதிகபட்சமாக திருத்தணியில் 108.5 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது.
மீனம்பாக்கம் (சென்னை) - 107.42, வேலூா் - 106.7, மதுரை விமாநிலையம் - 104.36, நுங்கம்பாக்கம் (சென்னை) - 104.18, பரங்கிப்பேட்டை, புதுச்சேரி - தலா 104.18, மதுரை நகரம் - 104, ஈரோடு - 103.64, நாகப்பட்டினம் - 103.46, கடலூா் - 103.28, திருச்சி - 102.38, தஞ்சாவூா் - 102.2, தொண்டி - 101.12, திருப்பத்தூா் - 100.76, காரைக்கால் - 100.58, பரமத்திவேலூா், வேலூா் - தலா 100.4 டிகிரி வரை வெப்பம் பதிவானது.
மேலும், வெள்ளிக்கிழமை (மே 31) தமிழகத்தில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும்.
அதை தொடா்ந்து, ஜூன் 1 முதல் ஜூன் 3 வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக குறையும்.
சென்னை மற்றும் புகா் பகுதிகளில் மே 31-இல் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படுவதுடன் அதிகபட்ச வெப்பநிலை 106 டிகிரி ஃபாரன்ஹீட் வரையும், குறைந்தபட்ச வெப்பநிலை 86 டிகிரி வரையும் இருக்கும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“