Tamil nadu Weather Updates: கேரளாவில் தென்மேற்கு பருவ மழை தொடங்கியதை அடுத்து தமிழகத்திலும் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் வட தமிழகத்தைப் பொறுத்தவரை இன்னும் வறண்ட வாநிலையே நிலவுகிறது. இந்நிலையில் சென்னை வானிலை மையம் நேற்றிரவு 9 மணிக்கு வெளியிட்டுள்ள அறிக்கையில், “கன்னியாகுமரி, திருநெல்வேலி, தேனி, கோயம்புத்தூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும்.
குறிப்பிட்ட இடங்களில் 30-40 கி.மீ காற்று மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும்.
திருவள்ளூர், சென்னை, வேலூர், விழுப்புரம், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கடலூர், திருச்சிராப்பள்ளி, புதுச்சேரி, பெரம்பலூர், சேலம் ஆகிய மாவட்டங்களில் வெப்பக் காற்றின் தாக்கம் அதிகரிக்கும்.
நாமக்கல், மதுரை, சிவகங்கை, விருதுநகர் மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் 2-3 டிகிரி செல்ஸியஸ் வெப்பம் அதிகரிக்கக் கூடும்.
ஆகையால், காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை பொது மக்கள் வெளியில் செல்ல வேண்டாமென கேட்டுக் கொள்ளப் படுகிறார்காள்.
சென்னையைப் பொறுத்தவரை, வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே நேற்று சென்னை மற்றும் திருத்தணியில் அதிக பட்சமாக 108 டிகிரி வெயில் பதிவாகியுள்ளது.