Tamil nadu Weather Updates: அக்னி நட்சத்திரம் முடிந்துவிட்டாலும் கூட சென்னை, திருச்சி போன்ற இடங்களில் வெயிலின் தாக்கம் இன்னும் அதிகரிக்கவே செய்திருக்கிறது.
சென்னை வானிலை மையம் நேற்றிரவு 10 மணிக்கு வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தின் சில குறிப்பிட்ட மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.
வட தமிழகத்தின் உள் மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
வேலூர், சேலம், நாமக்கல், தர்மபுரி, நீலகிரி, கோயம்புத்தூர், திண்டுக்கல், ஈரோடு, திருநெல்வேலி, விருதுநகர், தேனி ஆகிய மாவட்டங்களில் இடியுடன் 30 - 40 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக் கூடும்.
வெப்பசலனம்
வெப்பசலனம் காரணமாக திருவள்ளூர், வேலூர், சேலம், மதுரை, திருச்சி, நாமக்கல், பெரம்பலூர், கரூர், திண்டுக்கல், தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் இயல்பை விட 3-4 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரிக்கும்.
சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
தவிர, நேற்று வேலூர், திருத்தணியில் 108 டிகிரி வெப்பம் பதிவானது. மதுரை, கடலூர் 104 டிகிரி, திருச்சி, சேலம், பரங்கிப்பேட்டை, பாளையங்கோட்டை, சென்னை ஆகிய இடங்களில் தலா 102 டிகிரி வெயில் பதிவாகியுள்ளது. மற்ற இடங்களில் வெயிலின் தாக்கம் சற்று குறைந்துள்ளது.