சென்னையில் மழை பெய்யுமா என்பது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் இன்று வெளியிட்டுள்ள பதிவில், "ஏன் சென்னை மிகவும் வெப்பமாக உள்ளது? அதுவும் 24 மணி நேரத்தில், 22 மணி நேரமாக மேற்கிலிருந்து வீசிய அடர் காற்றுடன்.
வலிமையான கடல் காற்று இல்லாததால், அது மழையாக உருமாறி சென்னைக்கு மழை கிடைக்கும் வாய்ப்பு இல்லாமல் போனது. பருவமழை இதுவரை வலிமையற்றதாக இருப்பதற்கு, காற்றில் ஈரப்பதம் குறைவாக இருப்பதும் ஒரு காரணமாகும். அது மழையாக மாற முடியாமல் போய்விட்டது. ஜூன் 21 முதல் இந்த நிலை மாறி, வெப்பம் குறைவதற்கு வாய்ப்பிருக்கிறது.
சென்னை புறநகரில் மாலை 5.30 மணியளவில் 41 டிகிரி செல்சியல் வெப்பம் இருந்தது. சென்னையை பொறுத்தவரை, மே மாதத்தை விட ஜூன் மாதம் மிக கடுமையாக உள்ளது. மரங்களால் மழையை கொண்டுவர முடியவில்லை. ஆனால், மரங்களால் நிச்சயம், இன்றைய வெப்ப தினத்தை மிக மிக மிக குளிர்ச்சியாக மாற்ற முடியும். ஆனால், ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் சென்னையில் மழையை எதிர்பார்க்க வேண்டாம். தண்ணீர் பிரச்சனை தீரும் என்றோ, நிலத்தடிநீர் பிரச்சனை குறையும் என்றோ எண்ண வேண்டாம்.
அதேசமயம், கேரளா, கர்நாடகா மற்றும் தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலைகளில் ஜூன் 21 முதல் பருவமழை சூடுபிடிக்க தொடங்கும்" என்று குறிப்பிட்டுள்ளார்.