Tamil nadu weatherman about chennai rain : கடந்த 2 நாட்களாக இரவு நேரத்தில் குளிர்ச்சி அடையும் சென்னை இன்னும் எத்தனை நாட்கள் இப்படியே இருக்கும். மழையை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கு மக்களின் ஏக்கம் தீருமா போன்ற கேள்விகளுக்கு பதில் கூறி இருக்கிறார் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான்.
சென்னையில் நேற்று முன்தினம், இரவு 8 மணிக்கு தொடங்கிய மழை நள்ளிரவு வரை நீடித்தது. இதனையடுத்து சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நேற்று மழை பெய்தது. இந்த மழையானது இன்னும் இரண்டு நாட்களுக்கு நீடிக்கும் என கூறப்பட்டுள்ளது.
வெப்பச் சலனம் காரணமாக நேற்று பல்வேறு இடங்களில் மழை பெய்தது. விழுப்புரம், ஈரோடு, திண்டிவனம், தேனி ஆகிய மாவட்டங்களிலும் கனமழை பெய்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். அடையாறு, வேளச்சேரி, ராயபுரம், வண்ணாரப்பேட்டை, கொருக்குப்பேட்டை, தேனாம்பேட்டை ஆகிய பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது.
மேலும் படிக்க. மேற்கு தொடர்ச்சி மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்!
இந்நிலையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு இந்த மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் தனிப்பட்ட முறையில் வானிலை குறித்த தகவல்களை தெரிவிக்கும் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது டுவிட்டர் பக்கத்தில், காற்று பலமாக வீசும். தூறலைத் தொடர்ந்து 20 முதல் 30 நிமிடங்களுக்கு மழை பெய்யும். மழை தற்போது தெற்குப் புறநகர் பகுதிகளான ஓஎம்ஆர், ஈசிஆருக்குத் திரும்பியுள்ளது. பிரதான புயல் கடலைக் கடந்துவிட்டது. இதனால், நகர்ப்புறங்களில் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளது என பதிவிட்டுள்ளார்.
அதனைத்தொடர்து, இன்று காலை மழைக் குறித்த அப்டேட்டை வெளியிட்டிருக்கும் பிரதீப் ஜான், தனது பதிவில் கூறியிருப்பதாவது,”சென்னையின் சில பகுதிகள் லேசான மழை மற்றும் தூறல்களுக்கு வாய்ப்பு இருக்கிறது.
தமிழ்நாட்டில் தற்போது புயலுக்கு வாய்ப்பில்லை என்பதால் மழையை மட்டுமே நாம் நம்பி இருக்க வேண்டும். ஒருவேளை புயல் நம்மை நோக்கி நகர்ந்தால் பலன் கிட்டும். வியாக்கிழமை முதல் திங்கள் வரை கேரளா மற்றும் கர்நாடகாவில் கனமழை இருக்கும் என ஏற்கனவே குறிப்பிட்டிருந்தோம். வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் கேரளாவுக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்படும்.
சபரிமலை, தேக்கடி போன்ற இடங்களுக்கு செல்ல திட்டமிட்டிருப்பவர்கள் வானிலை பார்த்து பயணத்தை மேற்கொள்ளுங்கள். தமிழகத்தை பொருத்தவரையில் வரும் நாட்களின் கனமழை இருக்கிறது.
Tamil Nadu news today live updates
தேனி, திருநெல்வேலி, கோயம்புத்தூர் ,பொள்ளாச்சி, திரூப்பூர் போன்ற இடங்களில் அடுத்த நாட்களில் மழைக்கு வாய்ப்பு உண்டு” என கூறியுள்ளார்.