வங்கக்கடலில் புதிய புயல் சின்னம் உருவாகியுள்ள நிலையில், இந்த 3 விஷயங்களில் ஒன்றுதான் புயலைக் கட்டுப்படுத்தப் போகிறது என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை உருவாக உள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறும் வாய்ப்புகள் உள்ளன.
இது தொடர்பாக சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பில், உள் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய கேரளப் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் 26 ஆம் தேதி வாக்கில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று 27 ஆம் தேதி வாக்கில் தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் கடல் பகுதிகளில் நிலவக் கூடும்.
26.11.2023: தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, விருதுநகர், இராமநாதபுரம், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
27.11.2023 முதல் 28.11.2023 வரை: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
29.11.2023: தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, தென்காசி மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்களில், அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். சென்னையில் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமானது முதல் கனமழை பெய்யக்கூடும். இன்றைய வெப்பநிலை 25-27 டிகிரி செல்சியஸாக இருக்கலாம். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். சென்னை நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸாகவும் இருக்கலாம்.
இந்தநிலையில், இந்தப் புயல் சின்னம் தொடர்பாக, தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் முக்கியமான தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ”வரப்போகும் புயல் சின்னத்தை பின்வரும் 3 விஷயங்களில் ஒன்றுதான் திசையை மாற்றி கட்டுப்படுத்த போகிறது. இந்த மூன்றிற்கு இடையில் புயல் சிக்கி இருக்கிறது. வரலாற்றில் நடக்க போகும் மிகப்பெரிய சண்டை இது.
1. பசிபிக் ரிட்ஜ் - பங்களாதேஷ் / பர்மா அருகே உள்ள வளைவு
2. அரேபியன் ரிட்ஜ் - வட தமிழ்நாடு / தெற்கு ஆந்திரா
3. மேற்குப் பள்ளம் - பங்களாதேஷ் / பர்மாவிற்கு இடையே உள்ள வளைவு
கூடுதலாக, விரிகுடாவின் தொடர்ச்சியாக உள்ள பசிபிக் ரிட்ஜ் - வட தமிழ்நாடு / தெற்கு ஆந்திராவை நோக்கி தள்ளும்
இன்னும் ஒரு முக்கிய அம்சம், இது நடு நிலை திசைமாற்றி காற்று (500 hpa). சூறாவளி மிகவும் வலுவாக இருந்தால், அது ஆழமான திசைமாற்றி (200 hpa) நிலையை எடுக்கும், மேலும் அது பசிபிக் மலைப்பாதையில் சென்று வலுவிழக்கும்,” என்று பிரதீப் ஜான் சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளார்.
The battle for ages, which one of the three will take control of the steering of the upcoming cyclone caught between them.
— Tamil Nadu Weatherman (@praddy06) November 26, 2023
1. Pacific Ridge - Curve away to Bangladesh / Burma
2. Arabian Ridge - North Tamil Nadu / South AP
3. Westerly Trough - Dragged to Bangladesh / Burma pic.twitter.com/1pnVDbKnpv
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.