Chennai Weather Forecast Today: வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னையின் பலபகுதிகளில் வரும்நாட்களிலும் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தமிழ்நாடு வெதர்மேன் தனது பேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
சென்னையின் நுங்கம்பாக்கம், திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், மந்தைவெளி, ஆயிரம் விளக்கு பகுதிகளில் மழை பெய்துள்ளது. அண்ணாநகர் பகுதிகளில் மழை இன்னும் எட்டிப்பார்க்கவில்லை. கடலை ஒட்டியுள்ள மத்திய சென்னை பகுதிகளில் வருணபகவான் அருள்புரிகிறார். மற்றபகுதிகளில் ஏனோ அவர் பாராமுகமாகவே இருக்கிறார். நுங்கம்பாக்கம் பகுதியில் 9 மிமீ மழை பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வுமையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது மகிழ்ச்சியளிப்பதாக, தமிழ்நாடு வெதர்மேன் குறிப்பிட்டுள்ளார்.
Chennai Weather News In Tamil: சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிக்கை
சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் 26ம் தேதி மதியம் 12.30 மணியளவில் வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு உண்டு. அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியசை ஒட்டியஅளவிலேயே இருக்கும்.
ஜூன் 26ம் தேதி காலை 08.30 மணியோடு முடிந்த 24 மணிநேரத்தில் பதிவான மழையளவு
கடலூர் மாவட்டம் வேப்பூர் - 6 செ.மீ
கோத்தகிரி, சேலம், பரங்கிப்பேட்டை - 3 செ.மீ
தேவாலா, மயிலாடுதுறை, இலுப்பூர், மேட்டுப்பாளையம், விருத்தாசலம், மதுரை மாவட்டம் மேலூர் - 2 செ.மீ
நெய்வேலி, வால்பாறை, அறந்தாங்கி, திருப்பத்தூர், கோபிசெட்டிபாளையம், உளுந்தூர்பேட்டை, ஏற்காடு, ஆலங்குடி, சேத்தியாதோப்பு உள்ளிட்ட பகுதிகளில் 1 செ.மீ அளவிற்கு மழை பதிவாகியுள்ளது.
கனமழைக்கான எச்சரிக்கை ஏதும் இல்லை