தமிழகத்தில் உள் மாவட்டங்களுக்குள் மேகங்கள் நகர்கிறது. இதனால், இன்று (நம்பவர் 14) எல்லா மாவட்டங்களிலும் ஆங்காங்கே மழை பெய்யும் என்று தெரிவித்துள்ள தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான், இன்று டெல்டா மாவட்டங்கள், சிவகங்கை, புதுக்குட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, தேனி, தென்காசி, கன்னியாகுமரி, நெல்லை, விருதுங்கர் ஆகிய மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்க வாய்ப்பு உள்ளது என்று எச்சரித்துள்ளார்.
தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும், லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டிய தென் கிழக்கு அரபிக் கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், தமிழ்நாட்டில் இன்று (நவம்பர் 14) எந்த மாவட்டங்களில் எல்லாம் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கணித்து எச்சரித்துள்ளார்.
இது தொடர்பாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது முகநூல் பதிவில் கூறியிருப்பதாவது: “தமிழ்நாட்டில் உள் மாவட்டங்களுக்குள் மேகக் கூட்டம் நகர்வதைப் பார்க்க முடிகிறடு. இன்று (நவம்பர் 14) குறிப்பிட்ட ஒரு மாவட்டத்தில் மழை பெய்தது என்று கூற முடியாது. பெரும்பாலான மாவட்டங்களில் ஆங்காங்கே கொஞ்சம் மழை பெய்யும். காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு (KTCC) பகுதிகளிலும் ஆங்காங்கே மழை பெய்யும்.” என்று தெரிவித்துள்ளார்.
கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:
மேலும், டெல்டா மாவட்டங்கள், சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, தேனி, தென்காசி, கன்னியாகுமரி, நெல்லை, விருதுநகர், ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, இன்று (14.11.2024) தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், இன்று (14.11.2024) தமிழகத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், தென்காசி, விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மயிலாடுதுறை, கடலூர், தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி, மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது” என்று தெரிவித்துள்ளது.
மேலும், வெள்ளிக்கிழமை (14.11.2024) தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், வெள்ளிக்கிழமை (14.11.2024) ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது” என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“