Advertisment

சம்பவம் ஸ்டார்ட்; 30- 40 செ.மீ மழைவு வாய்ப்பு; பாபநாசம், மணிமுத்தாறு நிரம்பும்: தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு

தென் தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்யும்; மணிமுத்தாறு, பாபநாசம் அணைகள் நிரம்பி உபரி நீர் வெளியேற்றப்படும்; தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கணிப்பு

author-image
WebDesk
New Update
rain alert

தென் தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்யும்; மணிமுத்தாறு, பாபநாசம் அணைகள் நிரம்பி உபரி நீர் வெளியேற்றப்படும்; தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கணிப்பு (புகைப்படம்: பிரதீப் ஜான்/ ஃபேஸ்புக்)

தமிழகத்தின் தென்மாவட்டங்களில் அடுத்த 48 மணி நேரத்தில் கனமழை பெய்யும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கணித்துள்ளார்.

Advertisment

தென் இலங்கை கடற்கரையை ஒட்டிய வங்க கடல் பகுதிகளில் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் தென் தமிழகத்தில் அநேக இடங்களிலும், வட தமிழ்நாட்டின் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என்றும், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதற்கு ஏற்றாற்போல், நேற்று இரவு தொடங்கி திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் விடிய விடிய தொடர் மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு தென் தமிழகத்தில் கனமழை பெய்யும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப்ஜான் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் வெளியிட்டுள்ள சமூக ஊடக பதிவில், ”தென் தமிழகத்தில் (கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி) சம்பவம் தொடங்கியது. அடுத்த 48 மணி நேரத்தில் இடைவிடாது மழை பெய்யும். மாஞ்சோலை மலை மற்றும் கோதையாறு நீர்ப்பிடிப்பு பகுதிகளை கவனிக்க வேண்டும். மணிமுத்தாறு அணை, பாபநாசம் அணை இரண்டுமே நிரம்பி உபரி நீர் வெளியேற்றப்படும். மாஞ்சோலை மலைப்பகுதியில் 30-50 செ.மீ மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்தகைய காற்று வடிவில் இந்த மழை அரக்கர்கள் போல் இருக்கும். கேரளாவின் திருவனந்தபுரம் மற்றும் கொல்லத்தின் மறுபகுதியிலும் கனமழை பெய்யும்.

குழித்துறையாறு, தாமிரபரணி பகுதியில் வசிக்கும் மக்கள் தீவிர கண்காணிப்பில் இருக்க வேண்டும். தென்காசி, ராமநாதபுரத்திலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது,” என்று பதிவிட்டுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Tamil Nadu Pradeep John rain
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment