/indian-express-tamil/media/media_files/ELDuYGM2jc5fJV3R0c1i.jpg)
வங்கக் கடலில் உருவாகும் புதிய 'சக்கரம்' (புயல்) குறித்து பொது மக்கள் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் தனியார் வானிலை ஆய்வாளார் பிரதீப் ஜான் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த சக்கரம், கிட்டத்தட்ட உறுதியாக (99.99999% உறுதி) ஆந்திரப் பிரதேசத்தின் கடற்கரையை நோக்கிச் செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வானிலை நிகழ்வு புயலாக வலுப்பெற்றால், அதற்கு 'மோன்தா' என்று பெயரிடப்படும். பெயரிடப்படாமல் உள்ள அடுத்த புயல்களின் பட்டியலில் 'மோன்தா' முதல் இடத்தில் உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
சென்னை மற்றும் தமிழகத்திற்கு மழை வாய்ப்பு:
புயல் ஆந்திராவை நோக்கிச் செல்வதால், தமிழ்நாட்டிற்குப் பெரிய அளவில் பலத்த மழைக்கான வாய்ப்பு குறைவாகவே உள்ளது. இரண்டு முக்கிய சாத்தியக்கூறுகள் உள்ளன. முதலாவது சக்கரம், வட தமிழக கடற்கரைக்கு அருகில் வராமல், கடலிலேயே விலகிச் சென்று ஆந்திராவை நோக்கித் திரும்பினால், சென்னை மற்றும் வட தமிழகப் பகுதிகளில் கனமழைக்கான வாய்ப்பு மிகவும் குறைவு. சாதாரண மழை மட்டுமே கிடைக்கும்.
/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/2025/10/24/rain-updates-2025-10-24-17-36-08.jpg)
இரண்டாவது சக்கரம் ஆந்திராவை நோக்கித் திரும்புவதற்கு முன்பு வட தமிழக கடற்கரைக்கு மிக அருகில் வந்தால், சென்னையில் மட்டும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. இந்த இரண்டு சாத்தியக்கூறுகளில் எது நடக்கும் என்பது குறித்த தெளிவான தகவல் ஞாயிற்றுக்கிழமைக்குள் தெரிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
பிற மாவட்டங்களில் கனமழை இல்லை: இந்த சக்கரம் ஆந்திராவை நோக்கிச் செல்வதால், மற்ற தமிழ்நாட்டு மாவட்டங்களில் பெரிய அளவில் கனமழை பெய்ய வாய்ப்பு இல்லை. இருப்பினும், அதன் இழுவை விளைவால் (pull effect), கேரளா மற்றும் தென் தமிழக மாவட்டங்களான கன்னியாகுமரி, நீலகிரி ஆகிய பகுதிகளில் சில மழையைப் பார்க்கலாம். அதாவது அக்டோபர் 27 மற்றும் 28 ஆகிய தேதிகள் இந்த சக்கரம் குறித்து உன்னிப்பாகக் கவனிக்க வேண்டிய முக்கிய நாட்களாக உள்ளன.
மீனவர்களுக்கு எச்சரிக்கை: வட தமிழகம் மற்றும் ஆந்திரக் கடற்கரை ஒட்டிய பகுதிகளில் அக்டோபர் 25 முதல் 28-ஆம் தேதி வரை கடல் மிகவும் கொந்தளிப்புடன் காணப்படும். எனவே, மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். இந்த புயல் ஆந்திராவை நோக்கி நகர்ந்த பிறகு, தமிழ்நாட்டில் மழையில் ஒரு இடைவெளி இருக்கும். நவம்பர் முதல் வாரம் மந்தமான மழைப் பொழிவு காலமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
நேற்றைய நிலவரம் போலவே, இன்றும் தென் மாவட்டங்களில் மழை இருக்கும். கன்னியாகுமரி மாவட்டத்தில் மீண்டும் மிக நல்ல மழை பெய்யக்கூடும். மேலும், நெல்லை, தென்காசி, தேனி, மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம், வால்பாறை மற்றும் நீலகிரி (பண்டலூர் - அவலாஞ்சி பகுதிகள்) உள்ளிட்ட தென் மாவட்டங்களில் மேற்கு திசைக் காற்றால் மழை எதிர்பார்க்கப்படுகிறது. டெல்டா பகுதிகளிலும் ஆங்காங்கே இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது என்றும் அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us