குமரிக்கடல் பக்கத்திலேயே மேலடுக்கு சுழற்சி மெதுவாக நகர்ந்து வருகிறது. இதனால் இன்று திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி உள்ளி்டட மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்துவருகிறது.
இந்த நிலையில், நாளையும் (டிச.18) இடைவிடாது மழை தொடரும்; இந்த மழை செவ்வாய்க்கிழமை (டிச.19) காலை வரை தொடரும் என தமிழ்நாடு வெதர்மேன் என சமூகவலைதளங்ளில் அறியப்படும் பிரதீப ஜான் என்பவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும், “செவ்வாய் கிழமை காலை வரை இதே அளவு மழை தொடர்ந்து பெய்ய வாய்ப்புகள் இருக்கிறது. இப்போதே சில இடங்களில் 20 செ.மீ. வரை மழை பெய்துள்ளது. நாளை காலைக்குள் 30 செ.மீட்டரை தாண்டிவிடும்.
மாஞ்சோலை, நாலுமுக்கு, ஊத்து போன்ற பகுதிகளில் நாளை (திங்கள்கிழமை) காலைக்குள் 50 செ.மீட்டரை தாண்டிவிடும்.
எனவே தாழ்வான பகுதிகளில் இருக்கக்கூடிய மக்கள் ரொம்ப கவனமாக இருக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
நடப்பாண்டு டிசம்பர் மாத தொடக்கத்தில் இரண்டு நாள்கள் பெய்த கனமழையால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.
இங்குள்ள மக்கள் தங்களின் வாழ்வாதாரங்களை இழந்தனர். இந்த நிலையில் தமிழ்நாடு அரசு ரூ.6 ஆயிரம் நிவாரணம் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“