Tamil Nadu Weatherman Pradeep John Kanyakumari Southwest Monsoon Rainfall Updates : 8ம் தேதி மாலை துவங்கி கேரளாவிலும் மேற்கு தொடர்ச்சி மலைச்சாரலில் அமைந்துள்ள தமிழக மாவட்டங்களான கன்னியாகுமரி, திருநெல்வேலி, திண்டுக்கல், தேனி, கோவை, நீலகிரி போன்ற மாவட்டங்களில் மழை கொஞ்சம் கொஞ்சமாக பெய்யத் துவங்கியுள்ளது. ஆனால் கன்னியாகுமரியில் கனமழை வெளுத்து வாங்கியுள்ளது. இரண்டு நாட்களில் 166 எம்.எம். வரையில் அங்கு மழை பதிவாகியுள்ளது.
இன்று காலை தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தன்னுடைய முகநூல் பக்கத்தில் கன்னியாகுமரியில் பதிவான மழையின் அளவினை வெளியிட்டுள்ளார். இன்று காலை 08:30 மணி வரை கன்னியாகுமரியில் பதிவான மழையின் அளவு பின்வருமாறு
கன்னியாகுமரி மாவட்டம்
மேல் கொடையாறு - 166 எம்.எம்.
கீழ் கொடையாறு - 120 எம்.எம்.
பாலமூர் - 76 எம்.எம்.
மேல்புரம் - 75 எம்.எம்
குழித்துறை - 74 எம்.எம்.
திருபரப்பு - 67 எம்.எம்.
கோழிப்போர்விளை - 65 எம்.எம்
சுருலோடு - 65 எம்.எம்
அடையாமடை - 63 எம்.எம்
ஆணைகிடங்கு - 57 எம்.எம்
சிற்றாறு அணை 1 - 49 எம்.எம்.
இரனியல் - 49 எம்.எம்.
சிற்றாறு அணை 2 - 46 எம்.எம்
மாம்பழத்துறையாறு - 40 எம்.எம்
நெய்யூர் - 39 எம்.எம்
கன்னிமார் - 37 எம்.எம்.
பேச்சிப்பாறை - 33 எம்.எம்
குறுந்தங்கோடு - 31 எம்.எம்
கொட்டாரம் - 27 எம்.எம்
மயிலாடி - 27 எம்.எம்
பூதப்பாண்டி - 26 எம்.எம்
கன்னியாகுமரி - 25 எம்.எம்
திருப்பதிசரம் - 25 எம்.எம்
பெருஞ்சாணி - 25 எம்.எம்
புத்தன் அணை - 25 எம்.எம்
குளச்சல் - 25 எம்.எம்.
ஆரல்வாய்மொழி - 20 எம்.எம்
திருநெல்வேலி மாவட்டம்
அம்பாசமுத்திரம் - 23 எம்.எம்
கன்னடியான் - 20 எம்.எம்
கொடுமுடியாறு - 20 எம்.எம்
ராதாபுரம் - 17 எம்.எம்
பாபநாசம் - 15 எம்.எம்
நம்பியாறு - 15 எம்.எம்.
தென்மேற்கு பருவமழை
தமிழகத்திற்கான பருவமழை கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து ஆரம்பமாகிறது என்றும் கூறலாம். தற்போது கன்னியாகுமரியில் இருந்து திருநெல்வேலி மாவட்டத்தின் வறண்ட பகுதிகள் வரை பரவியுள்ளது பருவமழை. மேலும் அரபிக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. கர்நாடகாவில் மங்களூர் பகுதியில் பருவமழை பெய்யத் துவங்கியுள்ளது. வடக்கு கேரள மாவட்டங்கள், உடுப்பி போன்ற பகுதிகளில் இன்று முதல் மழைக்கான வாய்ப்புகள் உருவாகியுள்ளன.
மேலும் படிக்க : Tamilnadu Weather Updates: மாலை 4 மணி வரை யாரும் வெளியில் செல்ல வேண்டாம் – சென்னை வானிலை மையம் அறிவுரை!