தமிழ்நாட்டில் மழை எப்படி இருக்கும் என்பது தொடர்பாக தமிழ்நாடு வெதர்மேன் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
மதுரை , சிவகங்கை , புதுக்கோட்டையிலும் மாலை நேரங்களில் ஒரே மாதிரியான மழை பெய்து வருகிறது. தினமும் மாலையில் மழை பெய்கிறது.
தமிழ்நாட்டில் இந்த சீசனில் முதல் மேலடுக்கு சுழற்சி ஏற்பட உள்ளது. இன்னும் 2 நாட்களில் குமரி கடலில் உருவாக உள்ளது. இது வானில் ரீதியாக எல்லாவற்றையும் மாற்றுகிறது. காற்று குறுகிய காலத்திற்கு கிழக்கு திசையில் திரும்பும் உள்தமிழ்நாடு, கொங்கு பெல்டில் மழை பெய்வதற்கான நேரம் தெங்கிவிட்டது. காற்று கிழக்கு நோக்கி சென்றால். பகல் நேரத்தில் கூட மழை பெய்யும் வாய்ப்புகள் உள்ளன.
சென்னைக்கு காற்று இருக்காது. காற்று கிழக்கு நோக்கி செல்வதால். வேலூர் காற்று சென்னைக்கு வர முடியாது. மேற்கு சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய பகுதிகளில் மழைக்கு கொஞ்சம் வாய்ப்பு உள்ளது என்று மழைக்கு கொஞ்சம் வாய்ப்பு உள்ளது என்று வெதர்மேன் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாடு வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பில், அடுத்த 7 தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை. தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“