தர்மபுரி, திருப்பத்தூர் மாவட்டங்களுக்கு புயல் பயணிக்க வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான சமூக வலைதள பதிவு ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார். அதன்படி, "தர்மபுரி, திருப்பத்தூர் மாவட்டங்கள் வழியாக இந்த புயல் கடக்கும் அரிய நிகழ்வு நடைபெறுகிறது. விக்கிரவாண்டி பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்த மேகக் கூட்டங்கள் திருவண்ணாமலை வழியாக திருப்பத்தூரின் தெற்கு பகுதிகளுக்கு செல்லும். அங்கிருந்து தர்மபுரிக்கும் பின்னர் கர்நாடகவிற்கும் செல்கிறது. இந்த புயல் கடந்து செல்லும் பாதைகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது" என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு முன்னதாக மற்றொரு பதிவை அவர் வெளியிட்டிருந்தார். அதில், "ஃபீஞ்சல் புயல் ஒரு வழியாக கடலில் இருந்து நகரத் தொடங்கியுள்ளது. விழுப்புரத்தை நோக்கி மேகக் கூட்டங்கள் இருக்கிறது. புயலின் தென்மேற்கு பகுதியில் மட்டும் தற்போது மேக கூட்டங்கள் இருக்கின்றன. மேற்கு வடமேற்கு வழித்தடத்தில் ஃபீஞ்சல் புயல் பயணிக்க போகிறது. அதன்படி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, பெங்களூர், திருப்பத்தூர், ஈரோடு சென்று மழையை ஏற்படுத்தும்
அது போல் மைசூர், நீலகிரியிலும் மழை பெய்யும். கோவை மாவட்டத்தையும் இது தொட்டுச் செல்லும். அங்கும் மழைக்கு வாய்ப்புள்ளது. இது தவிர வழக்கமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் அவ்வப்போது மழை விட்டுவிட்டு பெய்யும்" எனக் கூறியிருந்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“