Advertisment

குமரி கடலில் காற்று சுழற்சி; இந்த மாவட்டங்களில் அதீத முன் எச்சரிக்கை தேவை: வானிலை ஆர்வலர் செல்வகுமார்

மேற்கு, மத்திய, தென் மாவட்டங்களில் மழை இருக்கும் என்றாலும், தென் மாவட்டங்களுக்கு அதீத கவனம் கொடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்; வானிலை ஆர்வலர் செல்வக்குமார்

author-image
WebDesk
New Update
nivar cyclone, ndrf, tndrf, chennai ready to face nivar cyclone, நிவர் புயல், சென்னை நிவர் புயல் மீட்பு நடவடிக்கை, நிவர் புயல் செய்திகள், nivar cyclone news, nivar cyclone latest news, nivar cyclone updates, nivar landfall when, meteorological updates, நிவர் புயல் எப்போது கரையைக் கடக்கும், நிவர் புயல் பாதிப்பு, chennai corporation action on nivar cyclone

மேற்கு, மத்திய, தென் மாவட்டங்களில் மழை இருக்கும் என்றாலும், தென் மாவட்டங்களுக்கு அதீத கவனம் கொடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்; வானிலை ஆர்வலர் செல்வக்குமார்

அடுத்த 2 நாட்களுக்கு கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆர்வலர் செல்வகுமார் தெரிவித்துள்ளார்.

Advertisment

தென் இலங்கை கடற்கரையை ஒட்டிய வங்க கடல் பகுதிகளில் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் தென் தமிழகத்தில் அநேக இடங்களிலும், வட தமிழ்நாட்டின் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என்றும், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதற்கு ஏற்றாற்போல், நேற்று இரவு தொடங்கி திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் விடிய விடிய தொடர் மழை பெய்து வருகிறது.

இந்தநிலையில், அடுத்த இரண்டு நாட்களுக்கான மழை நிலவரம் குறித்து வானிலை ஆர்வலர் செல்வகுமார் தெரிவித்த கருத்துக்களை இப்போது பார்ப்போம். காற்றுச் சுழற்சி இலங்கை பகுதியில் நீடிக்கிறது. இந்த காற்றுச் சுழற்சி குமரி முனைக்கு வரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. மேலும் குமரி முனையைக் கடந்து அரபிக் கடல் செல்லவும் வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக நேற்று டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்தது. தொடர்ந்து தென் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

காற்றுச் சுழற்சி இலங்கையில் இருந்து மன்னார் வளைகுடா பகுதிக்கு வரும் போது டெல்டா மாவட்டங்களில் மீண்டும் மழை பெய்யும். குறிப்பாக புதுக்கோட்டை, இராமநாதபுரம் மாவட்டங்களில் அதிக மழை இருக்கும். அதனைத்தொடர்ந்து தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக் கூடும்.

மிக்ஜாம் புயல் சென்னைக்கு அருகில் வந்து மிக கனமழையை தந்ததுபோல், இந்தக் காற்றுச் சுழற்சி நாளை குமரி முனைக்கு வந்து தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு அதிகனமழையை தரலாம். எனவே இந்த 4 மாவட்டங்களில் தீவிரமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியம். இதேபோல், ராமநாதபுரம், புதுக்கோட்டை, விருதுநகர் மாவட்டங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

காற்றுச் சுழற்சி 19 ஆம் தேதி தான் வங்க கடலை விட்டு முழுமையாக விலகி அரபிக் கடலுக்குச் செல்லும் என்பதால், தென்கோடி மாவட்டங்களில் அடுத்த 48 முதல் 60 மணி நேரத்திற்கு தொடர் கனமழை இருக்கும். மேலும் மதுரை, தேனி, சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்ட உள் பகுதிகளுக்கும் மழைப்பொழிவு இருக்கும்.

மேற்கு, மத்திய, தென் மாவட்டங்களில் மழை இருக்கும் என்றாலும், தென் மாவட்டங்களுக்கு அதீத கவனம் கொடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Tirunelveli rain kanniyakumari
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment