Advertisment

டெல்டா மாவட்டங்களில் திடீரென்று அதிகரிக்கும் கொரோனா தொற்று!

கிட்டதட்ட டெல்டா மாவட்டங்களில் 50 சதவீதம் அதிகரித்துள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
corona virus, corona latest news, coronavirus update in india, , coronavirus news update, coronavirus latest news update, coronavirus death toll, corona virus, corona virus in south india, corona virus news update,chennai, tamil nadu chennai koyembedu, modi, dmk கொரோனா வைரஸ், தமிழ்நாடு, கொரோனா வைரஸ் தொற்று, பாதிப்பு, கொரோனா சோதனை, சென்னை, மத்திய உள்துறை அமைச்சகம், ஊரடங்கு

corona virus, corona latest news, coronavirus update in india, , coronavirus news update, coronavirus latest news update, coronavirus death toll, corona virus, corona virus in south india, corona virus news update,chennai, tamil nadu chennai koyembedu, modi, dmk கொரோனா வைரஸ், தமிழ்நாடு, கொரோனா வைரஸ் தொற்று, பாதிப்பு, கொரோனா சோதனை, சென்னை, மத்திய உள்துறை அமைச்சகம், ஊரடங்கு

covid 19 cases increases : கொரோனா தொற்று தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில்தான் அதிக அளவில் பரவியுள்ளது. இதனால் இந்த மாவட்டங்களில் (ஜூன் 19) முதல் முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக தஞ்சாவூர், நெல்லை போன்ற டெல்டா மாவட்டங்களில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

Advertisment

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,532 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதால், மாநிலத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 59,377 ஆக உயர்ந்துள்ளது.குறிப்பாக, தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனாவால் இறப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று புதிய உச்சமாக 53 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதில் சென்னையில் மட்டும் 42 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

கடந்த 12 -ம் தேதி தஞ்சாவூர் மாவட்டத்தில் 133 ஆக இருந்த கொரோனா தொற்று எண்ணிக்கை தினமும் அதிகரித்து நேற்று வரை 183 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் திருவாருர் மாவட்டத்தில் 12-ம் தேதி 91 பேருக்கு இருந்த கரோனா பாதிப்பு 163 ஆக அதிகரித்துள்ளது. நாகை மாவட்டத்தில் 12 -ம் தேதி வரை 98 ஆக இருந்த கரோனா தொற்று 179 ஆக அதிகரித்துள்ளது. கிட்டதட்ட டெல்டா மாவட்டங்களில் 50 சதவீதம் அதிகரித்துள்ளது.

கோவை ஜிஆர்டி ஊழியர்கள் 4 பேருக்கு கொரோனா: சென்னையில் இருந்து வந்தவர்கள்

அரியலூரில் ஐந்து வயது சிறுவன் மற்றும் ஒரு பெண் உட்பட ஆறு பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அரியலூரில் இதுவரை மொத்தம் 420 கொரோனா நோயாளிகள் கணடறியப்பட்டுள்ளனர். இதில் 389 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.

கரூரில், பிற மாவட்டங்களிலிருந்து மாவட்டங்களுக்குத் திரும்பிய ஐந்து பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை தலைநகரமான சென்னையில் கொரோனா தொற்று அதிகரித்து வந்த நிலையில்,தற்போது டெல்டா மாவட்டங்களிலும் கொரோனா வேகமாக பரவி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Corona Coronavirus
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment