எட்டு மாதகால இடைவெளிக்குப் பிறகு, சென்னை மெரீனா கடற்கரையை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது.
நடைபயிற்சி மற்றும் உடற்பயிற்சி ஆர்வலர்கள் கடற்பரப்பில் திரண்டனர். உச்சநீதிமன்ற உத்தரவுகளை அடுத்து சென்னை மாநகராட்சி, கடற்கரையைச் சுற்றி குப்பைத் தொட்டிகளை அமைத்தல், சுகாதாரப் பணியாளர்களை நிறுத்துதல், பொது கழிப்பறைகளை சுத்தம் செய்தல் போன்ற பல்வேறு நடவடிக்கைகளை செயல்படுத்தியுள்ளது. எவ்வாறாயினும், பொதுமக்களின் ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே கடற்பரப்பை சுத்தமாக வைத்திருக்க முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
மெரினா கடற்கரை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டதால் கடற்கரையில் உள்ள தள்ளுவண்டி கடைகளும், நடைபாதை வியாபாரிகளும் நிம்மதி கொண்டுள்ளனர். முன்பைப் போல் மக்கள் கூட்டம் கடற்கரைக்கு திரும்ப குறைந்தது இரண்டு-மூன்று மாதங்கள் ஆகும் என்று கடைகாரர்கள் தெரிவிக்கிறனர்.
“கடற்கரையில் இயல்பு நிலை திரும்புவது குறித்து நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். முன்னதாக, குதிரை சவாரியில் 100 க்கும் மேற்பட்டவர்கள் ஈடுபட்டிருந்தனர், தர்போது 40 பேர் கூட இல்லை. கொரோனா ஊரடங்கு காலகட்டத்தின் போது எங்களுக்கு வருமானம் இல்லை. இலவச ரேஷன் பொருள்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் உதவியால் நாங்கள் தப்பிப்பிழைத்தோம். முன்பெல்லாம், தினசரி ரூ .1,500 முதல் ரூ .2,000 வரை சம்பாதித்தேன். ஆனால் இப்போது அது சாத்தியமில்லை,”என்று மெரீனா கடற்கரையில் குதிரை சவாரி செய்யும் மணிகண்டன் கூறினார்.
கிளி ஜோதிடரான பிரேம்குமார் இதே போன்ற எண்ணங்களை எதிரொலித்தார். “நான் 18 ஆண்டுகளாக இந்தத் தொழிலில் ஈடுபட்டுள்ளேன். 10 ஆண்டுகளாக மெரினா கடற்கரை எனது வீடாக இருந்து வருகிறது. கடந்த சில மாதங்களாக எந்த வருமானமும் இல்லை. இயல்பு நிலைக்குத் திரும்ப இன்னும் நான்கு-ஐந்து மாதங்கள் ஆகும் ” என்று தெரிவித்தார்.
இதற்கிடையே, சென்னை மெரினா கடற்கரையில் புதிதாக அமைக்கப்பட உள்ள 900 கடைகளுக்கு மாதத்திற்கு ஆயிரத்து 200 ரூபாய் வீதம் வாடகை வசூலிக்க முடிவெடுத்துள்ளதாக சென்னை மாநகராட்சி கூறியுள்ளது.
இதுதொடர்பான வழக்கு உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது மாநகராட்சி ஆணையர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், சுமார் 27 கோடி ரூபாய் செலவில் தொள்ளாயிரம் தள்ளுவண்டி கடைகளை மாநகராட்சியே அமைத்து கொடுக்க இருப்பதாகவும், கலங்கரை விளக்கம் அருகில் 66 லட்சம் ரூபாய் செலவில் 300 தற்காலிக மீன் விற்பனை கடைகள் அமைக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 900 தள்ளுவண்டி கடைகளை ஒதுக்கீடு செய்வதற்கான பணிகளை மேற்கொள்ள ஓய்வு பெற்ற நீதிபதி சதீஷ்குமார் அக்னிஹேத்ரியை சென்னை உயர்நீதிமன்றம் நியமித்துள்ளது.
இதுதொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதிகள் வினித் கோத்தாரி, எம் எஸ் ரமேஷ் அமர்வு, மெரினா பகுதியில் உள்ள மீனவர்கள் கடற்கரையை அடைவதற்கு நடைபாலம் அமைப்பதற்கான அனுமதியை மத்திய அரசு விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தின.
விசாரணையை அடுத்த மாதம் 8 ஆம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதிகள், முதற்கட்டமாக 300 தள்ளுவண்டிகளை கொள்முதல் செய்து அதற்கான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook
Web Title:Tamil nadus tourist spots marina beach reopened to the public
அரசியலை விட்டு விலகுகிறேன், தொண்டர்களுக்கு நன்றி! – சசிகலா அறிவிப்பு
எம்ஜிஆர் குரல்… எம்ஜிஆர் வேடம்… நடிகை லதா! விஜய் டிவியில் புதிய நிகழ்ச்சி வீடியோ
ஜேஇஇ மெயின்: மார்ச் மாத தேர்வுக்கு விண்ணப்ப செயல்முறை தொடங்கியது
நீச்சல் குளம்… கலர்ஃபுல் பிகினி… காலை உணவு! டிடி கொண்டாட்ட வீடியோ
அப்பார்ட்மென்ட் வாசிகளும் மாடித் தோட்டம் அமைக்கலாம்: இதைப் படிங்க!
பாஜகவுக்கு வீழ்ச்சி… ஆம் ஆத்மிக்கு எழுச்சி! டெல்லி இடைத்தேர்தல் உணர்த்துவது என்ன?