/tamil-ie/media/media_files/uploads/2020/02/template-2020-02-21T105410.029.jpg)
tamil, tamil names for kids, tamil speaking people, tamil names, mother language day, language, mahatma gandhi, walking, obesity, research, chennai, smart city, parking, vehicle management
ஹாய் கைய்ஸ் : வீக்எண்டை கொண்டாட ரெடியாயிட்டீங்களா... வாங்க அதே உற்சாகத்தோட இன்றைய நிகழ்ச்சிக்கு போயிருவோம்..
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
சர்வதேச அளவில் 8 கோடி தமிழ் பேசும் மக்கள் உள்ளனர். மற்றவர்கள் ஏதாவது சொல்வர் என்றடிப்படையிலேயே, நாம் நம் குழந்தைகளுக்கு தமிழ் மொழி தவிர்த்து மற்ற பெயர்களை சூட்டி வருகிறோம். இந்த குறையை களையும் விதமாக நம் குழந்தைகளுக்கு சூட்டுவோம் தூய தமிழ்பெயர்களை என்ற தலைப்பிலான புத்தகத்தில் 5 ஆயிரம் தமிழ் பெயர்கள் இடம்பெற்றுள்ளன..
படித்து பெயர் சூட்டுங்கள் மக்களே...
ஹாய் கைய்ஸ் : இப்போ மாணவர் தலைவர்...நாளை இந்த மாநிலத்துக்கேவா....
ஹாய் கைய்ஸ் : புரட்சித்தலைவர் எம்ஜிஆர் வழியில் சிவகார்த்திகேயன்
உடல் எடையை குறைக்க விரும்புவர்களுக்கு நடப்பது போன்ற உடற்பயிற்சிகள் மட்டும் பயன் தராது. தினமும் நீங்கள் எவ்வளவு அடிகள் நடக்கின்றீர்கள் என்பதை கண்காணித்தால், உடல் செயல்பாடுகளை அதிகரிப்பது போன்ற நன்மைகள் வேண்டுமானால் கிடைக்கலாம். மற்றபடி நடப்பதால் உடல் எடை அதிகரிப்பதை தடுக்க முடியவில்லை. தவிர, ஒரே சீராக எடையை பராமரிக்கவும் உதவவில்லை. எனினும் மக்கள் நீண்ட நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்து வேலை பார்க்கும் வாழ்க்கை முறையில் இருந்து விடுபட முயற்சிக்கலாம்
'நட'ராஜாக்களின் கவனத்திற்கு...
ஒருவரது இதயத்தை தொட வேண்டுமெனில் தாய்மொழியில் பேச வேண்டும், மகாத்மா காந்தியும் தாய்மொழிக்கல்வியை வலியுறுத்தினார். இன்றைய சூழலில் தாய்மொழியில் கற்பவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. குழந்தைகள் இளமையில் மற்ற மொழிகளில் கற்பதால், அவர்களுக்கு கற்கும் திறனும், ஆர்வமும் குறைகிறது என ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.
ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ள இணைப்பு பாலமாக விளங்குவது மொழி. இது சமூக ஒருங்கிணைப்பு, கல்வி மற்றும் வளர்ச்சிக்கு முக்கியமானதாக விளங்குகிறது. தாய்மொழியின் தனித்தன்மை, பண்பாட்டை பாதுகாக்கும் நோக்கில் ஐ.நா., சார்பில் 1999 முதல் பிப்., 21ல் சர்வதேச தாய்மொழி தினம் கடைபிடிக்கப்படுகிறது.
வாழ்க தாய்மொழி..வளர்க அம்மொழி மக்கள்...
சென்னையில், ஒருங்கிணைந்த வாகன மேலாண்மை திட்டத்தின் படி, 1.25 லட்சம் வாகனங்கள் நிறுத்தும் வசதி ஏற்படுத்த, மாநகராட்சி அனுமதி அளித்துள்ளது. சென்னை மாநகராட்சி பகுதியில், போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், வாகன நிறுத்த வசதிகளை அதிகரிக்கவும், 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தின் கீழ், ஒருங்கிணைந்த வாகன மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
சிங்கார சென்னை...
ஓகே பிரெண்ட்ஸ், மீண்டும் மற்றொரு நிகழ்ச்சியில் சந்திப்போம். Bye..
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.