ஹாய் பிரெண்ட்ஸ், வாங்க நேரடியா நிகழ்ச்சிக்கு போயிருவோம்..
புரட்சித்தலைவர் எம்ஜிஆர், ஏலியனை கதைக்களமாக கொண்ட கலைஅரசி என்ற படத்தில் நடித்தார். பல ஆண்டுகளுக்கு பிறகு நடிகர் சிவகார்த்திகேயன், ஏலியனை கதைக்களமாக கொண்ட அயலான் படத்தில் நடித்து வருகிறார். சிவகார்த்திகேயனின் பிறந்தநாளான பிப்ரவரி 17ம் தேதி, இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்திலான அயலான் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது. கல அரசி படம் அப்போதைக்கு பெரிதாக பார்க்கப்பட்டது. அதேபோலொரு பிரமாண்டம் மற்றும் எதிர்பார்ப்பை சிவகார்த்திகேயனின் அயலான் படம் ஏற்படுத்துமா என்பது தமிழ் சினிமா ரசிகர்களிடையே விவாதப்பொருளாக உள்ளது.
பொறுத்திருந்து பார்ப்போம்…
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
2011 உலககோப்பை வெற்றியை தொடர்ந்து, இந்திய வீரர்கள், சச்சினை தோளில் சுமந்து சென்ற நிகழ்வு, சிறந்த தருணமாக தேர்வு செய்யப்பட்டு லாரியஸ் விருதுக்கு வழங்கப்பட்டது. 20 ஆண்டுகளில் விளையாட்டு உலகின் சிறந்து தருணமாக இந்திய கிரிக்கெட் அணியின் சச்சின் டெண்டுல்கரை, 2011 உலக கோப்பை இறுதி ஆட்டத்தில் வென்ற பின், வீரர்கள் தோளில் சுமந்து சென்ற நிகழ்வு தேர்வு செய்யப்பட்டு, விருது வழங்கப்பட்டது. ஜெர்மனியில் நடந்த விருது வழங்கும் விழாவில் சச்சின் அதை பெற்றுக் கொண்டார்.
கிரிக்கெட் கடவுள் சச்சின்…
ஹாய் கைய்ஸ் : போடுற டிரெஸ்சை கூட வீடு மாதிரி வாடகைக்கு இனி எடுத்துக்கலாம்..
ஹாய் கைய்ஸ் : ஆஸ்கர் விருது வென்ற கொரிய படம் மீது வழக்கா? – இயக்குனர் ‘பரபர’ பதில்
மூன்று ஜோதிர்லிங்க தலங்களை இணைக்கும், காசி மஹாகாள் எக்ஸ்பிரஸ் ரயிலில் காசி துவங்கி, உஜ்ஜயினி வரை பயணிக்க, 1,951 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.சிறப்புமிக்க அந்த ரயிலில், தற்போது சிவபெருமானுக்காக ஒரு இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளது. 64 வடிவங்களைக் கொண்ட சிவனுக்காக, ‘பி – 5’ பெட்டியில், 64வது இருக்கையை, ரயில்வே நிர்வாகம் ஒதுக்கிஉள்ளது. சிவனின் படங்கள், பூக்கள், காகித மாலைகள் ஆகியவற்றுடன், அந்த இருக்கை, சிறிய கோவில் போல காட்சியளிக்கிறது.ரயிலில், சிவனே இருப்பதாக எண்ணுவதால், அதில் பயணிப்போருக்கு, சைவ உணவுகளை மட்டுமே வழங்க, ரயில்வே நிர்வாகம் முடிவு செய்து உள்ளது.
முடியல…
சீனாவில், ‘கொரோனா’ வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை, 1,868 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை, 72 ஆயிரத்து, 436 பேருக்கு, இதன் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.
எப்போதான் முடியுமோ…
ஓகே பிரெண்ட்ஸ், மீண்டும் மற்றொரு நிகழ்ச்சியில் சந்திப்போம். Bye