kurta, modern accessories, rental, startup, marriage, china, covid 19, pudukottai, USA, yoga university, yoga classes
ஹாய் பிரென்ட்ஸ், வீக் என்ட் எல்லாம் நல்லபடியா முடிஞ்சதா...புது உத்வேகத்தோட புது வாரத்தை துவங்கியிருப்பீங்க.. வாங்க அதே உற்சாகத்தோட இன்னையோட நிகழ்ச்சிக்கு போயிருவோம்.
Advertisment
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
ஒவ்வொரு முறையும் வித்தியாசமான புதிய உடைகளை அணிவது பிடிக்கும். இந்த விஷயத்தில் பலருக்கு உதவ ஒரு 'ஸ்டார்ட் அப்' உதயமாகியுள்ளது. 'ப்ளைரோப்' (FLYROBE) என்ற இணையதளம் வித்தியாசமான, இந்த விஷயத்தை கையில் எடுத்து அதில் வெற்றியும் பெற்றுள்ளனர்.லெகேங்கா, ஷெர்வானி, கோட், கவுன், சேலை, குர்தா, அனார்கலி போன்றவை புடவை கலெக்ஷன்களையும், இந்த கம்பெனி மூலம் ஆன்லைனில் ஆர்டர் செய்யலாம். இதுதவிர இந்தியாவின் புகழ்பெற்ற 'டிசைனர்கள்' வடிவமைத்த உடைகளையும் வாடகைக்கு என்று காட்சிப்படுத்துகின்றனர். தேவைப்படும் உடைகளை, நான்கு முதல் எட்டு நாட்கள் வரை வாடகைக்கு கொடுக்கின்றனர். ஒருமுறை உபயோகப்படுத்திய உடைகளை, இந்நிறுவனம் மூலம் நீங்களும் வாடகைக்கு விடலாம். இணையதளம்: flyrobe.com
சீனாவில் இருந்து திரும்பிய புதுக்கோட்டையைச் சேர்ந்த நபர் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் உயிரிழந்தார். இதனால் அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
அய்யகோ...
அமெரிக்காவில் அமைக்கப்பட்டுள்ள, முதல், 'யோகா' பல்கலை கழகத்தில், முதுநிலை பட்ட படிப்பின் வகுப்புகள், ஆகஸ்ட் மாதம் துவங்கவுள்ளன. அமெரிக்காவின், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில், யோகா பல்கலைக் கழகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவுக்கு வெளியே நிறுவப்பட்டுள்ள, முதல் யோகா பல்கலையான இதை, வாயு எனப்படும், விவேகானந்தா யோகா பல்கலை, 35.76 கோடி ரூபாய் மதிப்பில் கட்டமைத்துள்ளது. இங்கு, சில மாதங்களில், வகுப்புகள் துவங்க உள்ளன.
யோகாவுக்கு வந்த யோகத்தை பாருய்யா..
ஓகே பிரெண்ட்ஸ், மீண்டும் மற்றொரு நிகழ்ச்சியில் சந்திப்போம். Bye