scorecardresearch

நீட் தேர்வுக்கு பயந்து மாணவர் சாவு: புதுவையில் சோகம்

கடந்த ஆண்டு நீட் தேர்வு எழுதிய ஹேமசந்திரன் குறைந்த மதிப்பெண் பெற்றார்.

Neet Suicide
நீட் தேர்வுக்கு தயாராகி வந்த புதுவை மாணவர் தற்கொலை

பாபு ராஜேந்திரன் புதுச்சேரி

புதுவை அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் துரைராஜ். ரியல் எஸ்டேட் பிசினஸ் செய்து வருகிறார். இவரது மனைவி பரிமளம். திண்டிவனம் அரசு மருத்துவமனையில் பிசியோதெரபியாக பணியாற்றி வருகிறார். கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாட்டால் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இவர்களது மகன் ஹேமசந்திரன் (18).

இவர் நீட் தேர்வுக்கு தயாராகி வந்த நிலையில் இன்று மதியம் நீட் தேர்வு எழுத இருந்தார். ஆனால் தேர்வு பயத்தால் ஹேமசந்திரன் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பரிமளம் உருளையன்பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.

இதன் பேரில் போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். இதில் கடந்த ஆண்டு நீட் தேர்வு எழுதிய ஹேமசந்திரன் குறைந்த மதிப்பெண் பெற்றார். இதனால் இந்த ஆண்டு தேர்வு எழுத தயாராகி வந்தார். தேர்வில் தோல்வி அடைந்து விடுவோமோ என்ற பயத்தில் தற்கொலை செய்து இருப்பது தெரிய வந்தது.

இந்த சம்பவம் குறித்து உருளையன்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Tamil neet exam student suicide in puducherry