Tamil News Updates: ஆவின் பால் வேன் ஓட்டுனர்கள், உரிமையாளர்கள் நள்ளிரவு முதல் திடீர் வேலை நிறுத்த போராட்டம்

Tamil news Live updates-28-05-20224: இன்று நடைபெறும் அனைத்து செய்திகளையும் தெரிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

Tamil news Live updates-28-05-20224: இன்று நடைபெறும் அனைத்து செய்திகளையும் தெரிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
aavin tn

Tamil News Live updates : பெட்ரோல், டீசல் விலை: சென்னையில் 72-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.75 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.92.34 காசுகளாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

Advertisment

 ஏரிகளின் நீர் நிலவரம்

சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம், புழல், பூண்டி, சோழவரம், கண்ணன்கோட்டை ஆகிய 5 ஏரிகளில் 47.26% நீர் இருப்பு உள்ளது. செம்பரம்பாக்கம் - 50.43%. புழல் - 88.3%. பூண்டி - 11.45%. சோழவரம் - 9.62%. கண்ணன்கோட்டை - 65.2%

  • May 29, 2024 07:04 IST

    ஆவின் பால் வேன் ஓட்டுனர்கள், உரிமையாளர்கள் திடீர் வேலை நிறுத்த போராட்டம்

    ஆவின் பால் வேன் ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்கள் நள்ளிரவு முதல் திடீர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், திருச்சி, பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் ஆவின் பால் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.



  • May 28, 2024 21:33 IST

    கன்னியாகுமரியில் மோடி தியானம் : நீதிமன்றத்தையும் அணுகுவோம் என் காங்கிரஸ் தலைவர் எச்சரிக்கை

    மே 30 முதல் ஜூன் 1 வரை பிரதமர் நரேந்திர மோடி கன்னியாகுமரியில் தியானம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளி வருகிறது. மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் இதுபோன்ற நிகழ்ச்சிக்கு தேர்தல் ஆணையம் அனுமதி அளிக்கக் கூடாது. வாக்குப்பதிவுக்கு முந்தைய 48 மணிநேர அமைதிக் காலத்தில்  இதுபோன்ற நிகழ்ச்சியின் மூலம் ஊடகங்கள் வாயிலாக மோடி மறைமுகப் பிரச்சாரம் செய்ய முயற்சிக்கிறார் என்பது தெளிவாகத் தெரிகிறது. இதுகுறித்து தேர்தல் ஆணையத்திடம் நாளை கடிதம் கொடுக்கப்பட உள்ளது. தேவைப்பட்டால், நீதிமன்றத்தையும் அணுகுவோம் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, கூறியுள்ளார்.



  • Advertisment
    Advertisements
  • May 28, 2024 20:30 IST

    சின்னசேலம் அருகே நெஞ்சு வலி ஏற்பட்டு லாரி ஓட்டுநர் உயிரிழந்த சோகம்!

    திண்டிவனத்திலிருந்து மைக்கா லோடு ஏற்றிக்கொண்டு திருவனந்தபுரம் நோக்கிச் சென்ற ஓட்டுநர் கார்த்திகேயன் ஸ்டேரிங்-ல் சாய்ந்தபடி உயிரிழந்துள்ளார்.



  • May 28, 2024 20:07 IST

    குழந்தைகள் விற்பனை - கும்பல் கைது

    வட மாநிலங்களில் இருந்து குழந்தைகளை கடத்தி வந்து ஆந்திரா, தெலங்கானாவில் விற்ற 11 பேர் கொண்ட கும்பல் கைது செய்யப்பட்டனர். மீட்கப்பட்ட 11 குழந்தைகள் அரசு குழந்தைகள் காப்பகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 



  • May 28, 2024 20:05 IST

    ஹாஸ்பிட்டலில் திருட்டு - தாக்குதல் - பலி

    நேற்று மாலை கோவை தனியார் மருத்துவமனையில் பைப் திருட முயன்ற ராஜா என்பவர் மீது செக்யூரிட்டிகள் தாக்குதல் நடத்தினர். இதில் படுகாயம் அடைந்த ராஜா அதே  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து தனியார் மருத்துவமனையில் பீளமேடு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    உயிரிழந்த ராஜா மீது பல்வேறு திருட்டு வழக்குகள் உள்ளன என்றும், ஜாமினில் வெளிவந்தவர் மீண்டும் திருட்டில் ஈடுபட்ட நிலையில் தாக்குதலுக்கு ஆளானார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 



  • May 28, 2024 19:46 IST

    ’செங்கோல்-மறுமலர்ச்சி’  - ஐகோர்ட் தலைமை நீதிபதி மகாதேவன் பங்கேற்பு 

    புதிய நாடாளுமன்றத்தில் செங்கோல் வைக்கப்பட்டதன் முதலாம் ஆண்டை கொண்டாடும் விதமாக ’செங்கோல்-மறுமலர்ச்சி’ என்ற தலைப்பில் சென்னை மயிலாப்பூரில் கருத்தரங்கு நடக்கிறது. இதில் உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி மகாதேவன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றி வருகிறார். 



  • May 28, 2024 19:40 IST

    அமித்ஷா தமிழ்நாடு வருகை - கோட்டை பைரவர் கோயிலில் தரிசனம்

    நாளை மறுநாள் தமிழ்நாடு வருகிறார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா. ஏற்கனவே திட்டமிடப்பட்டு ரத்து செய்யப்பட்ட நிலையில், தமிழ்நாடு வரும் அமித்ஷா திருமயத்தில் உள்ள கோட்டை பைரவர் கோயிலில் தரிசனம் செய்ய உள்ளார்

     



  • May 28, 2024 19:06 IST

    தமிழக பாட புத்தகங்களில் தேசிய தலைவர்கள் இல்லை: ஆர்.என். ரவி

    “தமிழ்நாடு பாடப் புத்தகங்களில் தேசியத் தலைவர்கள் இடம்பெறவில்லை. மலேசியா, சிங்கப்பூர் நில உரிமையாளர்களுக்கு தமிழர்கள் விற்கப்பட்டனர்.
    இந்த வரலாறு பாடப் புத்தகத்தில் இடம்பெற வேண்டாமா? தமிழர்கள் எதைப் படிக்க வேண்டும் என்பது குறித்து போதுமான விழிப்புணர்வு இல்லை” என கவர்னர் ஆர்.என். ரவி கூறினார்.



  • May 28, 2024 18:31 IST

    மீனம்பாக்கத்தில் அதிகப்பட்ச வெயில் பதிவு

     

    தமிழ்நாட்டில் அதிகப்பட்சமாக சென்னை மீனம்பாக்கத்தில் 106 பாரன்ஹீட் வெயில் இன்று பதிவாகி இருந்தது.



  • May 28, 2024 18:00 IST

    ஆம் ஆத்மி அரசு கலைக்கப்படும்: அரவிந்த் கெஜ்ரிவால்

    ஜூன் 4ஆம் தேதிக்கு பின்னர் ஆம் ஆத்மி அரசு கலைக்கப்படும், பகவந்த் மான் கைது செய்யப்படுவார் என அரவிந்த் கெஜ்ரிவால் பேசியிருப்பது வைரலாகி உள்ளது.



  • May 28, 2024 17:58 IST

    அரசு மருத்துவமனையில் தாயை தூக்கி வந்த மகள்; ஸ்ட்ரெச்சர் எங்கே? சுகாதாரத் துறை இயக்குனர் விளக்கம்

    ஈரோடு அரசு மருத்துவமனையில் ஸ்ட்ரெச்சர் இல்லாமல் காலில் அடிப்பட்ட தாயை, மகள் தூக்கி வந்த சம்பவம் தொடர்பாக மருத்துவமனையிடம் விளக்கம் கேட்டுள்ளதாகவும், உரிய விசாரணை நடத்த உள்ளதாக அரசு மருத்துவமனை சுகாதார இணை இயக்குநர் அம்பிகா சண்முகம் விளக்கம் அளித்துள்ளார்.



  • May 28, 2024 16:18 IST

    மூன்று நாள் பயணமாக மே 30-ம் தேதி தமிழகம் வருகிறார் மோடி; கன்னியாகுமரியில் பாதுகாப்பு தீவிரம்

    பிரதமர் நரேந்திர மோடி 3 நாள் பயணமாக நாளை மறுநாள் மே 30-ம் தேதி தமிழகம் வருகிறார். பிரதமர் மோடி வருகையையொட்டி, கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகையில் பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது. கன்னியாகுமரியில் ஹெலிகாப்டர் ஒத்திகை நடைபெற்றது. பிரதமர் மோடி வருகையையொட்டி, கன்னியாகுமரி கன்னியாகுமரியில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.



  • May 28, 2024 15:37 IST

    கொச்சியில் மேகவெடிப்பால் பெய்த கனமழை; 1.30 மணி நேரத்தில் 98.4 மி.மீ மழைப் பொழிவு பதிவு

    கேரள மாநிலம், கொச்சியில் மேகவெடிப்பால் கனமழை கொட்டித் தீர்த்தது. 1.30 மணி நேரத்தில் 98.4 மி.மீ மழைப் பொழிவு பதிவாகியுள்ளது. சாலைகளில் மழை நீர் ஓடுவதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.



  • May 28, 2024 14:58 IST

    ஆர்.பி.உதயகுமார் பேட்டி

    அண்ணாமலை தங்களது கட்சியை வளர்க்க ஜெயலலிதா பெயரை பயன்படுத்துவதை விட்டுவிட்டு, பாஜகவின் கொள்கைகளை பற்றி பேசி அந்த கட்சியை வளர்க்க தயாராக இருக்கிறாரா?

    அண்ணாமலை ஜெயலலிதா பெயரை  பயன்படுத்துவதால் எந்த தாக்கமும் ஏற்படாது

    - எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி



  • May 28, 2024 14:20 IST

    பழைய பஸ் பாஸ் காட்டி பயணிக்கலாம்

    புதிய பஸ் பாஸ் வழங்கும் வரை பள்ளி மாணவர்கள் பழைய பஸ் பாஸை  காட்டி பயணிக்கலாம்.

    கோடைவிடுமுறை முடிந்து, ஜூன் 6ஆம் தேதி தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் போக்குவரத்து துறை அறிவிப்பு



  • May 28, 2024 14:18 IST

    அடுத்த 7 நாட்களுக்கு மழை

    தமிழ்நாட்டில் ஓரிரு பகுதிகளிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று (மே 28) முதல் ஜூன் 3-ம் தேதி வரை அடுத்த 7 நாட்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு

    - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்



  • May 28, 2024 13:57 IST

    தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்

    கோடை விடுமுறை முடிந்து, சென்னை திரும்பும் பயணிகள் வசதிக்காக, திருநெல்வேலியில் இருந்து சென்னை எழும்பூருக்கு ஜூன் 6, 13 , 20 , 27 ஆகிய தேதிகளில் மாலை 6.45 மணிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்

    சென்னை எழும்பூரில் இருந்து திருநெல்வேலிக்கு மாலை 3 மணிக்கு ஜூன் 7, 14 , 21 , 28 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில் இயக்கம்

    நாகர்கோவிலில் இருந்து சென்னை எழும்பூருக்கு ஜூன் 2,16, 30 ஆகிய தேதிகளில் இரவு 11 .15 மணிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்



  • May 28, 2024 13:53 IST

    கலைஞரின் கனவு இல்லம் நிதி மற்றும் வழிகாட்டி நெறிமுறைகள் வெளியீடு

    1 லட்சம் வீடுகள் கட்டுவதற்கான நிர்வாக அனுமதியை வழங்கியது தமிழக அரசு

    வீட்டின் குறைந்தபட்ச பீடம் பகுதி சமையலறை உட்பட 360 சதுர அடியாக இருக்க வேண்டும், அதில் 300 சதுர அடி ஆர்சிசி கூரையால் மூடப்பட்டிருக்க வேண்டும். ஓலைகள் மற்றும் அஸ்பெஸ்டாஸ் தாள் கொண்ட கூரை தடை செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு வீட்டிற்கும் யூனிட் காஸ்ட் உதவியாக ஒருங்கிணைக்கும் தொகையும் சேர்த்து ரூ.3.50 லட்சம் வழங்கப்படும்.



  • May 28, 2024 13:26 IST

    பழனியில் அனைத்துல முத்தமிழ் முருகன் மாநாடு

    பழனியில் ஆகஸ்ட் 24,25 ஆகிய தேதிகளில் அனைத்துல முத்தமிழ் முருகன் மாநாடு நடைபெறவுள்ளதாக அறநிலையத்துறை அறிவிப்பு;

    மாநாட்டில் பங்கேற்கவும், நிகழ்வுகளை தெரிந்து கொள்ளவும், ஆய்வுக் கட்டுரைகளை சமர்பிக்க விரும்புவோர் ‘https://muthamizhmuruganmaanadu2024.com’ என்ற தனி இணையதளம் மூலம் பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



  • May 28, 2024 13:26 IST

    4 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு

    கன்னியாகுமரி, திருநெல்வேலி, தேனி, தென்காசி மாவட்டங்களில் மாலை 4 மணி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்பு

    -சென்னை வானிலை ஆய்வு மையம்



  • May 28, 2024 13:00 IST

    பாம்பை பிடித்து வீடியோ பதிவு: 2 பேர் கைது

    கோவையில் உரிய அனுமதியின்றி பாம்பை பிடித்து வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்ட இருவரை வனத்துறையினர் கைது செய்தனர்.

    புலியகுளத்தைச் சேர்ந்த அப்துல் ரஹ்மான், சின்னவேடம்பட்டியைச் சேர்ந்த உமா மகேஷ்வரி இருவரும் சில நாட்களுக்கு முன்பு இந்திய எலிப் பாம்பை, பிடித்து வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவு செய்திருந்தனர். 

    snake cbe.jpg



  • May 28, 2024 12:33 IST

    ஜூன் முதல் வாரம் வரை பருப்பு, பாமாயில் வாங்கலாம்

    ரேஷன் கடைகளில் மே மாதத்திற்கான பருப்பு, பாமாயில் வாங்க கால அவகாசம்

    பருப்பு வாங்க விரும்புவோர் ஜுன் மாதம் முதல் வாரம் வரை பெற்றுக் கொள்ளலாம் - உணவு பொருள் வழங்கல் துறை

    தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக,  பாமாயில், துவரம் பருப்பு கொள்முதல் செய்வதில் காலதாமதம் என விளக்கம்

    "அரசின் தீவிர நடவடிக்கையால் தற்போது, கொள்முதல் செய்யப்பட்டு, ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன"

    "மே மாதத்தில் பருப்பு, பாமாயில் பெற முடியாதவர்கள் ஜூன் முதல் வாரம் வரை பெற்றுக் கொள்ளலாம்"- உணவு பொருள் வழங்கல் துறை

     

     



  • May 28, 2024 12:14 IST

    சென்னையில் 11 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை

    சென்னை வில்லிவாக்கத்தில் 11 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை. கடந்த 6 மாதங்களாக பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம்

    உடல்நிலை மோசமடைந்ததால் சிறுமியிடம் விசாரித்த போது வெளிவந்த உண்மை. சிறுமியின் பாட்டி வில்லிவாக்கம் மகளிர் காவல்நிலையத்தில் புகார்.

    புகாரின் அடிப்படையில் 4 பேரை பிடித்து விசாரிக்கும் மகளிர் போலீஸ். மீட்கப்பட்ட சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பி வைப்பு



  • May 28, 2024 12:09 IST

    கோவில் பூசாரி மீது பாலியல் வன்கொடுமை வழக்குப் பதிவு

    மண்ணடி காளிகாம்பாள் கோவில் பூசாரி கார்த்திக் முனுசாமி மீது பாலியல் வன்கொடுமை வழக்குப் பதிவு

    டி.வி தொகுப்பாளினி அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்தது விருகம்பாக்கம் மகளிர் போலீஸ்

    கொடைக்கானலில் கைது செய்யப்பட்ட பூசாரி கார்த்திக் முனுசாமியிடம் விருகம்பாக்கம் போலீசார் தீவிர விசாரணை

    ஏற்கனவே கோவில் பூசாரி மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு தற்போது பாலியல் தொல்லை என்ற பிரிவை நீக்கி பாலியல் வன்கொடுமை பிரிவு சேர்ப்பு 



  • May 28, 2024 12:07 IST

    ஜூன் 1-ல் தி.மு.க மாவட்ட செயலர்கள் கூட்டம்

    ஜூன் 1ஆம் தேதி திமுக மாவட்ட செயலாளர்கள், நாடாளுமன்ற வேட்பாளர்கள் கூட்டம்- திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு

    காணொலிக் காட்சி வாயிலாக நடைபெறும் கூட்டத்தில் தலைமை முகவர்கள் மற்றும் வாக்கு எண்ணிக்கை முகவர்கள் பங்கேற்கிறார்கள்

    வாக்கு எண்ணிக்கையின் போது, பூத் முகவர்களின் செயல்பாடுகள் குறித்து ஆலோசனை



  • May 28, 2024 11:51 IST

    பிரதமர் பெயரில் போலி விண்ணப்பங்கள்

    இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவிக்கு பிரதமர் பெயரில் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது

    உள்துறை அமைச்சர் அமித்ஷா, சச்சின், தோனி உள்ளிட்டோர் பெயர்களிலும் போலி விண்ணப்பங்கள் வந்துள்ளதாக தகவல்

    கூகுள் ஃபார்ம் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டதால் ஏராளமான போலி விண்ணப்பங்கள் வந்திருப்பதாக தகவல்

    இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவிக்கு 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்துள்ளன

    3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்களில் பெரும்பாலானவை போலி என தகவல்கள் கூறுகின்றன



  • May 28, 2024 11:46 IST

    ஸ்ரீமதி வழக்கு: நீதிபதி சரமாரி கேள்வி

    ஸ்ரீமதி வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞரிடம் நீதிபதி சரமாரி கேள்வி

    ஸ்ரீமதி தாயாரிடம் கொடுக்கபட்ட சிசிடிவி வீடியோ செயல்படவில்லை எனக் குற்றம்சாட்டிய ஸ்ரீமதியின் தாயார்

    சிசிடிவியில் பதிவான காட்சிகள் ஏன் வரவில்லை ? அழிக்கபட்டதா ? - நீதிபதி கேள்வி

    சிசிடிவி காட்சிகள் ஏன் தெரியவில்லை என்பதற்கான தொழிற்நுட்ப சான்றுகளுடன் நீதிமன்றத்திற்கு பதில் அளிக்க வேண்டும் என உத்தரவு

    வழக்கின் விசாரணையை ஜூன் 19-ம் தேதிக்கு ஒத்திவைத்தார் நீதிபதி



  • May 28, 2024 11:44 IST

    காய்கறிகளின் விலை கிடுகிடு உயர்வு

    சென்னை கோயம்பேட்டில் காய்கறிகளின் விலை கிடுகிடு உயர்வு. கோயம்பேடு சந்தையில் வரத்து குறைந்ததால் தக்காளி விலை கடும் உயர்வு. கடந்த வாரம் ஒருகிலோ ரூ15க்கு விற்கப்பட்ட தக்காளி தற்போது ரூ.60க்கு விற்பனை. சின்ன வெங்காயம், சவ் சவ் விலையும் ரூ.10 உயர்வு



  • May 28, 2024 11:03 IST

    சென்னையில் குருவியாக செயல்பட்ட நபர் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் தொடர்பு

    சென்னையில் குருவியாக செயல்பட்ட நபர் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் தொடர்பில் இருந்தது தெரியவந்துள்ளது.  குஜராத்தில் கைதானவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் வெளிவந்த உண்மை தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்ட தீவிரவாத தடுப்பு பிரிவு அதிகாரிகள் குஜராத்தில் கைதான 4 பேரிடம் விசாரணை .முகமது நசரத் சென்னையில் குருவியாக வேலை பார்த்தது விசாரணையில் அம்பலமானது முகமது நசரத், தடை செய்யப்பட்ட தேசிய தவ்ஹீத் ஜமாத் மூலம் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் இணைந்து செயல்பட்டது கண்டுபிடிப்பு முகமது நசரத் அடிக்கடி கொழும்பு சென்று வந்ததால், இந்த விவகாரம் குறித்து இலங்கை விசாரணை அமைப்பும் விசாரணை.



  • May 28, 2024 10:39 IST

    ஸ்டாலின், ஜூன் 1ம் தேதி டெல்லி செல்கிறார்

    முதலமைச்சர் ஸ்டாலின், ஜூன் 1ஆம் தேதி டெல்லி செல்கிறார். அன்றைய தினம் டெல்லியில் நடைபெறும் இந்திய கூட்டணி தலைவர்கள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க உள்ளார் . ஜூன் 2ஆம் தேதி டெல்லியில் இருந்து புறப்பட்டு சென்னை திரும்புகிறார்.  முதல்வர் ஸ்டாலின் கடைசிக்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் நாளான ஜூன் 1ல் இந்தியா கூட்டணி தலைவர்கள் டெல்லியில் ஆலோசனை அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவு.  எடுக்க இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் ஒன்று கூடுகிறார்கள் இந்திய கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார் என்பது குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என தகவல். 



  • May 28, 2024 10:18 IST

    தங்கம் விலை

    செவ்வாய்க்கிழமை காலை 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 160 அதிகரித்துள்ளது. ஒரு கிராம் ரூ. 6,740-க்கும், ஒரு சவரன் ரூ. 53,920-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.



  • May 28, 2024 10:13 IST

    பப்புவா நியூ கினியாவில் நிலச்சரிவு: பிரதமர் மோடி இரங்கல்

    பப்புவா நியூ கினியாவில் நிலச்சரிவினால் ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் சேதங்கள் வருத்தம் அளிக்கிறது பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறோம் சாத்தியமான அனைத்து ஆதரவையும், உதவிகளையும் வழங்க இந்தியா தயாராக உள்ளது - பிரதமர் மோடி



  • May 28, 2024 09:12 IST

    பாலியல் புகாரில் சிக்கிய மண்ணடி காளிகாம்பாள் கோவில் பூசாரி கார்த்திக் முனுசாமி கைது

    பாலியல் புகாரில் சிக்கிய மண்ணடி காளிகாம்பாள் கோவில் பூசாரி கார்த்திக் முனுசாமி கைது. கொடைக்கானலில் தலைமறைவாக இருந்த பூசாரியை கைது செய்தது காவல்துறை மண்ணடி காளிகாம்பாள் கோவில் .பூசாரி கார்த்திக் முனுசாமி மீது டிவி தொகுப்பாளினி பாலியல் புகார் டிவி தொகுப்பாளினி புகார் குறித்து வழக்கு பதிவு செய்து பூசாரியை தேடி வந்த காவல்துறை பூசாரி கார்த்திக் முனுசாமி மீது 6 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தது விருகம்பாக்கம் மகளிர் காவல்துறை.



  • May 28, 2024 08:40 IST

    கேரளா: உணவு ஒவ்வாமையால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 178 ஆக உயர்வு

    கேரளாவில், ஒரே ஹோட்டலில் உணவருந்தி, உணவு ஒவ்வாமையால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 178 ஆக அதிகரித்துள்ளது .திருச்சூர் மாவட்டம் மூணுபீடிகையில் உள்ள தனியார் ஹோட்டலில் சாப்பிட்ட ஏராளமானோருக்கு காய்ச்சல், வாந்தி, வயிற்றுப்போக்கு ஆகியவை ஏற்பட்டது. இதுகுறித்து, ஆய்வு நடத்திய அதிகாரிகள் ஹோட்டலில் பரிமாறப்பட்ட மயோனைஸே, இதற்கு காரணம் என கண்டறிந்தனர் இதனையடுத்து, அந்த ஹோட்டலுக்கு சீல் வைக்கப்பட்டது இதனிடையே திருச்சூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த உசைபா என்ற பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.



  • May 28, 2024 08:11 IST

    டெல்லியில் இருந்து வாரணாசி செல்லும் இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

    டெல்லியில் இருந்து வாரணாசி செல்லும் இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.  பயணிகள் அனைவரும் அவசரகால வழி, வழியாக வெளியேற்றப்பட்டனர் விமானத்தை தனிமைப்படுத்தி சோதனையும், விசாரணையும் நடைபெற்று வருகிறது. 



  • May 28, 2024 08:08 IST

    3 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு

    தமிழகத்தில் 3 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.  குமரி, நெல்லை, தென்காசி ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல். 



  • May 28, 2024 08:07 IST

    மின்சார ரயில் சேவையில் மாற்றம்

    சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே இயக்கப்படும் மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.  காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை சிங்கப்பெருமாள் கோவில் வரை மட்டுமே இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவிப்பு. 



Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: