Advertisment

Tamil News Updates: வங்கக் கடலில் இன்று உருவாகிறது ரிமல் புயல்

Tamil News Updates: அனைத்து செய்திகளையும் தெரிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
cyclo.jpg

IE updates

Tamil News Live updates : பெட்ரோல், டீசல் விலை: சென்னையில் 68-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. ஒரு லிட்டர் பெட்ரோல்  லிட்டருக்கு ரூ.100.75 காசுகளாகவும்,  டீசல் லிட்டர் டீசல் ரூ.92.34 காசுகளாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

Advertisment

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

  • May 25, 2024 07:04 IST
    வங்கக் கடலில் இன்று உருவாகிறது ரிமல் புயல்

    காற்றழுத்த தாழ்வு மண்டலம் மத்திய கிழக்கு வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள நிலையில்,  இன்று மாலை மத்திய கிழக்கு வங்கக் கடலில் ரிமல் புயல் உருவாகும்.

    நாளை (மே26) நள்ளிரவில் சாகர் தீவு மற்றும் கெபுபாரா இடையே வங்காளதேசம் மற்றும் அதை ஒட்டிய மேற்கு வங்கக் கடலில் கரையைக் கடக்க வாய்ப்பு

     - இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்



  • May 24, 2024 20:58 IST
    திருக்குறள் ஒரு உண்மையான தர்ம சாஸ்திரம் - ஆளுநர் ஆர்.என். ரவி

    ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற திருவள்ளுவர் தின விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு:  திருக்குறள் ஒரு உண்மையான தர்ம சாஸ்திரம்; தமிழ் நாட்காட்டியில் இந்த நாள் தான் திருவள்ளுவர் தினம்; வைகாசி அனுஷம் திருவள்ளுவர் நாளாக உரிய முக்கியத்துவம் கொடுத்து அனுசரிக்கப்படவில்லை; அதனால்தான், திருவள்ளுவரின் பக்தனாக இந்த நாளை சிறப்பான முறையில் கொண்டாடுகிறோம். திருக்குறள் ஒரு உண்மையான தர்ம சாஸ்திரம்” என்று பேசினார்.



  • May 24, 2024 20:42 IST
    பிரதமர் திருக்குறள் மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளார் - ஆர்.என். ரவி

    ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற திருவள்ளுவர் தின விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு: “தமிழ் மொழி இனிமையும், சக்தியும் வாந்த மொழி; பிரதமர் நரேந்திர மோடி திருவள்ளுவர் மீதும், திருக்குறள் மீதும் மிகுந்த மரியாதை வைத்துள்ளார்; திருவள்ளுவர் உலகத்திற்கு பொதுவானவர். ஒரு சீடனாக தமிழ்நாட்டை கடந்து திருக்குறள் புகழ் பரப்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.



  • May 24, 2024 20:39 IST
    தமிழகத்தில் 12 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு

    தமிழகத்தில் மதுரை, விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், நாமக்கல், குமரி  ஆகிய 12 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



  • May 24, 2024 20:06 IST
    கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வழக்கு: சவுக்கு சங்கருக்கு ஜூன் 7 வரை நீதிமன்ற காவல்

    கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் தொடர்பான வழக்கில், யூடியூபர் சவுக்கு சங்கருக்கு ஜூன் 7ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



  • May 24, 2024 19:12 IST
    கேரள தடுப்பணை பணிகளை நிறுத்த உத்தரவு

    கேரளத்தில் உரிய அனுமதி இன்றி சிலந்தி ஆற்றில் கட்டப்பட்டுவரும் தடுப்பணை கட்டுமானப் பணிகளை நிறுத்த கேரள அரசிற்கு தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.



  • May 24, 2024 19:10 IST
    திருச்சிக்கு இரவு சிறப்பு ரயில்; டைம் செக் பண்ணுங்க


    சென்னை எழும்பூரில் இருந்து திருச்சிக்கு இரவு 9.25 மணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது. இந்த ரயில் திருச்சிக்கு மறுதினம் காலை 5.30 மணிக்கு சென்றடையும் எனக் கூறப்பட்டுள்ளது.



  • May 24, 2024 19:08 IST
    அரசு பேருந்து ஓட்டுநருக்கு அபராதம்

    திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில், சீட் பெல்ட் அணியாத அரசு பேருந்து ஓட்டுநருக்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்தனர். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகிவருகிறது.



  • May 24, 2024 18:21 IST
    திருச்செந்தூரில் 3 லட்சம் பேர் தரிசனம்

    திருச்செந்தூரில் கடந்த 2 நாள்களில் 3 லட்சம் பேர் தரிசனம் செய்துள்ளனர். வைகாசி விசாகம் மற்றும் தேரோட்டத்தை முன்னிட்டு பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.



  • May 24, 2024 17:14 IST
    அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு

     

    நீலகிரி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு, கரூர், நாமக்கல், பெரம்பலூர், புதுக்கோட்டை, திருச்சி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



  • May 24, 2024 16:43 IST
    சுசித்ராவிற்கு இடைக்கால தடை

    நடிகர் கார்த்திக் குமார் குறித்து அவதூறு கருத்துக்களை தெரிவிக்க பாடகி சுசித்ராவிற்கு இடைக்கால தடை சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சுசித்ரா சமீபத்தில் அளித்த பேட்டி, தன் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் இருப்பதால், ஒரு கோடியே ஆயிரம் ரூபாய் மானநஷ்ட ஈடுக் கோரி, நடிகர் கார்த்திக் குமார் வழக்கு தொடர்ந்திருந்தார். மேலும் பாடகி சுசித்ரா, தன்னை பற்றியும், தன்னுடைய குடும்பத்தினர் பற்றியும் அவதூறான கருத்துக்களை தெரிவிக்க பாடகி சுசித்ராவிற்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறியதை தொடர்ந்து சுசித்ராவிற்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.



  • May 24, 2024 16:21 IST
    மோடி தேர்தல் ஆணையத்தின் பின்னால் ஒளிந்துள்ளார் : ராணுவ வீரர் கடும் விமர்சனம்

    பிரதமர் மோடி பிரச்சனை ஏற்படும்போதெல்லாம் யார் பின்னாடியாவது ஒளிந்துகொள்வார். முதலில் பாதுகாப்பு படையின் பின்னாள் ஒளிந்துகொண்டார். தற்போது தேர்தல் ஆணையத்தின் பின்னால் ஒளிந்துகொண்டு இருக்கிறார் என்று முன்னால்  ராணுவ வீரர் கர்னல் ரோஹித் சௌத்ரி தெரிவித்துள்ளார்.



  • May 24, 2024 16:04 IST
    குற்றாலம் ஐந்தருவியில் வெள்ளப்பெருக்கு : சுற்றுலா பயணிகளுக்கு தடை

    தென்காசி பகுதியில் கனமழையால் குற்றாலம் ஐந்தருவியில் வெள்ளப்பெருக்கு நேற்று மாலை முதல் குளிக்க அனுமதி என மாவட்ட ஆட்சியர் அறிவித்திருந்த நிலையில், மழை தொடர்வதால் குளிக்க தடையும் தொடர்கிறது



  • May 24, 2024 16:03 IST
    10 வயது சிறுமியை கடித்த வளர்ப்பு நாய் : உரிமையாளர் மீது வழக்குப்பதிவு

    கோவை சூலூரில் தெருவில் நடந்து சென்ற 10 வயது சிறுமியை வளர்ப்பு நாய் கடித்து குதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், சிறுமியின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் நாய் உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.



  • May 24, 2024 15:36 IST
    அரசுப் பேருந்து ஓட்டுநர்களுக்கு அபாரதம் விதித்த போக்குவரத்து காவல்துறை

    திருநெல்வேலி பகுதியில், சீட் பெல்ட் அணியவில்லை, சீருடை ஒழுங்காக அணியவில்லை என வள்ளியூரில் 3 அரசுப் பேருந்து ஓட்டுநர்களுக்கு தலா ரூ.500 அபராதம் விதித்து போக்குவரத்துக் காவல்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.



  • May 24, 2024 14:56 IST
    சவுக்கு சங்கரை காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

    கிளாம்பாக்கம் பேருந்துநிலையம் தொடர்பான ஆவணங்களை பொய்யாக புனைந்து பரப்பியதாக சவுக்கு சங்கர் மீது புகார் கொடுக்கப்பட்ட நிலையில், சி.எம்.டி.ஏ. புகாரின் பேரில் சவுக்கு சங்கர் மீது வழக்குப்பதிந்து சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். 

    இன்று மாலை 6 மணி வரை காவலில் எடுத்து விசாரணை நடத்த எழும்பூர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. 2 நாள் காவலில் எடுக்க அனுமதி கோரியிருந்த நிலையில் உத்தரவிட்டுள்ளது.



  • May 24, 2024 14:54 IST
    தொழில்நுட்ப கோளாறு:  கட்டுப்பாட்டை இழந்த ஹெலிகாப்டர்

    கேதார்நாத்தில் சுற்றுலா பயணிகளை ஏற்றிச் செல்லும் ஹெலிகாப்டர் தரையிறங்கும் போது கட்டுப்பாட்டை இழந்தது. ஹெலிபேடில் தரையிறங்கும் தருணத்தில் ஹெலிகாப்டர் சுழன்றபடி தத்தளித்தது. ஹெலிகாப்டரில் 6 பேர் இருந்த நிலையில், நல்வாய்ப்பாக உயிர் தப்பினர். தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஹெலிகாப்டர் கட்டுப்பாட்டை இழந்ததாக தகவல் தெரிவித்துள்ளனர். 

     



  • May 24, 2024 14:50 IST
    10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் 

    தெற்கு கேரளா, அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



  • May 24, 2024 14:49 IST
    தமிழக கடல் பகுதியில் இன்று மாலை 4.1 மீட்டர் உயரம் வரை அலைகள் எழும்பக் கூடும்'- வானிலை ஆய்வு மையம் 

     

    இந்திய தேசிய பெருங்கடல் தகவல் சேவை மையம் மற்றும் இந்திய வானிலை ஆய்வு மைய கூட்டறிக்கையில், " தமிழக கடல் பகுதியில் இன்று மாலை 4.1 மீட்டர் உயரம் வரை அலைகள் எழும்பக் கூடும். தென் தமிழக கடற்பகுதியில், குளச்சல் முதல் கீழக்கரை வரை இன்று மாலை 5.30 மணி முதல் இரவு 11.30 வரை கடல் அலைகளின் உயரம் 0.6 முதல் 4.1 மீட்டர் வரை இருக்கும். வட தமிழக கடற்பகுதியில், பழவேற்காடு முதல் கோடியக்கரை வரை மாலை 5.30 மணி முதல் இரவு 11.30 வரை கடல் அலைகளின் உயரம் 0.6 முதல் 4.0 மீட்டர் வரை இருக்கும். தென் வங்கக்கடல் மற்றும் அந்தமான் பகுதியில் 24ஆம் தேதி வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்" என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 



  • May 24, 2024 12:58 IST
    பழைய குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் குளிக்க மீண்டும் தடை

    இன்று காலை 6 மணி முதல் பழைய குற்றால அருவியில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. நீரின் அளவு திடீரென அதிகரித்ததால் பழைய குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் குளிக்க மீண்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது.



  • May 24, 2024 12:48 IST
    கூடுதல் மழைப் பொழிவு

    தமிழ்நாட்டில் கோடை மழை இன்று காலை வரை இயல்பை விட 29% கூடுதலாக பெய்து உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



  • May 24, 2024 12:48 IST
    10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

    தமிழ்நாட்டில் நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!



  • May 24, 2024 12:20 IST
    ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

    ங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி வடகிழக்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.

    சென்னை, கடலூர், நாகை, எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை காலை மத்திய கிழக்கு வங்க கடல் பகுதிகளில் புயலாக வலுப்பெற கூடும்

    - வானிலை மையம்



  • May 24, 2024 12:18 IST
    புதிய ரேஷன் அட்டைகள் எப்போது கிடைக்கும்?

    புதிய ரேஷன் அட்டைக் கோரி விண்ணப்பித்துள்ள சுமார் 2 லட்சம் பேரின் விண்ணப்பங்கள் மக்களவை தேர்தல் முடிவுகளுக்கு பின்னர் பரீசிலனை செய்யப்பட்டு புதிய ரேஷன் அட்டை வழங்கும் பணிகள் தொடங்கப்படும்

    உணவுப் பொருள் வழங்கல் துறை அதிகாரிகள் தகவல்



  • May 24, 2024 11:50 IST
    புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்ற வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தல்

    மத்திய மேற்கு மற்றும் தெற்கு வங்க கடல் பகுதியில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடகிழக்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ள நிலையில், சென்னை, கடலூர், நாகப்பட்டினம், எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றுமாறு வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது.



  • May 24, 2024 11:47 IST
    மாணவர்களின் பெற்றோருக்கு கல்வித்துறை அறிவுறுத்தல்

    மாணவர்களின் கல்வி செயல்பாடுகளை பெற்றோருக்கு உடனுக்குடன் தெரிவிக்கும் வகையில் புதிய திட்டம்

    பிள்ளைகளின் கல்வி செயல்பாடுகளை தெரிந்து கொள்ள குறைந்த விலை ஸ்மார்ட் போன்களையாவது வாங்க வேண்டும். தற்போது வரை 80 லட்சத்து 30 ஆயிரம் பெற்றோர்களின் மொபைல் எண்களை உறுதி செய்துள்ளது. இந்த மாதத்திற்குள் ஒரு கோடியே 25 லட்சம் மொபைல் எண்களும் உறுதி செய்யப்படும்

    மாணவர்களின் பெற்றோருக்கு கல்வித்துறை அறிவுறுத்தல்



  • May 24, 2024 11:39 IST
    கிருஷ்ணசாமி பேட்டி

    மாஞ்சோலை தேயிலை தோட்டத் தொழிலாளர்களின் நிலையை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு அரசு தொழிலாளர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்;

    தமிழ்நாடு தேயிலை தோட்டக் கழகம் நிர்வாகத்தை எடுத்து நடத்த வேண்டும்;

    - புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி பேட்டி



  • May 24, 2024 11:09 IST
    ரூ. 1 கோடி செல்லா நோட்டுகள் பறிமுதல்

    சேலத்தில் பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் போது செல்லாதவையாக அறிவிக்கப்பட்ட ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை வைத்திருந்தவர் கைது .பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை வைத்திருந்த சபீர் என்பவரை கைது செய்த அம்மாப்பேட்டை போலீசார் கைது செய்யப்பட்ட சபீரிடம் இருந்து ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான செல்லாத நோட்டுகள் பறிமுதல்.



  • May 24, 2024 11:07 IST
    முன்னாள் டி.ஜி.பி. ராஜேஸ் தாஸை கைது செய்த கேளம்பாக்கம் போலீசார்

    முன்னாள் டி.ஜி.பி. ராஜேஸ் தாஸை கைது செய்த கேளம்பாக்கம் போலீசார். மனைவி பீலா வெங்கடேசன் கொடுத்த புகாரின் அடிப்படையில் கைது. செய்து கேளம்பாக்கம் காவல்நிலையத்தில் போலீசார் விசாரணை தையூரில் உள்ள பண்ணை வீட்டில் பாதுகாவலரை தாக்கியதாக ராஜேஸ் தாஸ் மீது பீலா வெங்கடேசன் புகார் அளித்திருந்தார் பீலா அளித்த புகாரின் பேரில் சென்னை கேளம்பாக்கம் போலீசார் நடவடிக்கை.



  • May 24, 2024 11:06 IST
    முல்லை பெரியாறு புதிய அணை: கேரள அரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம்

    முல்லை பெரியாறு அணையை இடித்துவிட்டு புதிய அணை கட்ட அனுமதி கோரி மத்திய அரசுக்கு கடிதம் எழுதிய கேரள அரசு.  கேரள அரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் . உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக கேரள அரசு செயல்படுகிறது .  தமிழக அரசு இனியாவது விழித்துக் கொண்டு கேரள அரசின் நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் . உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி தமிழக அரசு முல்லைப்பெரியாறு விவகாரத்தில் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் - இ.பி.எஸ் 



  • May 24, 2024 10:29 IST
    தங்கத்தின் விலை சவரனுக்கு இன்று ரூ.800 குறைவு

    சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு இன்று ரூ.800 குறைந்துள்ளது.  ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.800 குறைந்து இன்று 53,200 ரூபாய்க்கு விற்பனை தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.100 குறைந்து 6,650 ரூபாய்க்கு விற்பனை.



  • May 24, 2024 10:13 IST
    தெற்கு வங்க கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது

    மத்திய மேற்கு மற்றும் அதை ஒட்டிய தெற்கு வங்க கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.  வடகிழக்கு திசையில் நகர்ந்து நாளை காலை மத்திய கிழக்கு வங்கக் கடலில் புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளது வடக்கு நோக்கி நகர்ந்து, நாளை மாலைக்குள் தீவிரப் புயலாக வலுவடையும் 26ம் தேதி நள்ளிரவில் சாகர் தீவு மற்றும் கெபுபாரா இடையே வங்காளதேசம் மற்றும் அதை ஒட்டிய மேற்கு வங்கக் கடற்கரையில் கரையை கடக்கும். 



  • May 24, 2024 09:27 IST
    சென்னை : செலோடேப் தயாரிக்கும் குடோனில் பயங்கர தீ விபத்து.

    சென்னை தண்டையார்பேட்டையில் செயல்பட்டு வரும் செலோடேப் தயாரிக்கும் குடோனில் பயங்கர தீ விபத்து. பெயின்டிற்கு பயன்படுத்தும் தின்னர் மற்றும் டேப்பிற்கு பயன்படுத்தப்படும் பிஸின்கள் உள்ளே இருந்ததால் தீ மல மலவென பரவி கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது. மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்று போலீசார் விசாரணை. இரவு நேரம் என்பதால் உயிர்சேதம் இல்லாமல் பெரிய அளவிலான விபத்து தவிர்க்கப்பட்டது. 



  • May 24, 2024 09:27 IST
    கேரள முதலமைசார் பினராயி விஜயனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து



  • May 24, 2024 09:13 IST
    குற்றால அருவிகளில் குளிக்க அனுமதி

    முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பழைய குற்றால அருவி பகுதியில் பாதுகாப்பு தடுப்புகள் அமைப்பு. தடை நீக்கப்பட்ட நிலையில் பழைய குற்றால அருவியில் சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல் . கடந்த 17ஆம் தேதி திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக குற்றால அருவிகளில் தடை விதிக்கப்பட்டது . 



  • May 24, 2024 08:13 IST
    7 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

    திருப்பூர், கோவை, தென்காசி, நெல்லை, நீலகிரி, கன்னியாகுமரி, திண்டுக்கல் ஆகிய 7 மாவட்டங்களில் காலை 10 மணிக்குள், மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.  



  • May 24, 2024 08:10 IST
    நெல்லை கொலை வழக்கு : 4 பேர் கைது

    நெல்லையில் கடந்த 20ஆம் தேதி ஓட்டல் முன்பு தீபக் ராஜா என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கு தீபக் ராஜா கொலை வழக்கில் சரவணன், ஐயப்பன், தம்பன், ஐயப்பன் ஆகிய 4 பேரை கைது செய்த பாளையங்கோட்டை போலீசார் . கொலை வழக்கு மட்டும் பதிவு செய்யப்பட்ட நிலையில், வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு தீபக் ராஜா கொலை வழக்கில் 6 தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை. 



  • May 24, 2024 08:09 IST
    தமிழ்நாட்டில் புதிதாக 6 மருத்துவ கல்லூரிகள் அமைகிறது : தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி

    மயிலாடுதுறை, திருப்பத்தூர், தென்காசி, பெரம்பலூர், அரக்கோணம், ராணிப்பேட்டை மாவட்டங்களில் புதிய மருத்துவ கல்லூரிகள் அமைய உள்ளது.  மத்திய அரசின் பங்களிப்புடன் அமைக்கப்படும் மருத்துவக் கல்லூரிக்கான 25 ஏக்கர் நிலத்தை அடையாளம் காண அறிவுறுத்தல். 



Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment