Advertisment

Tamil News Highlights: பெங்களூரு கஃபே குண்டுவெடிப்பு விவகாரம்: சந்தேக நபரிடம் போலீசார் விசாரணை

Tamil News Live Updates: 01/03/2024 இன்று நடைபெறும் முக்கிய செய்திகள் மற்றும் நிகழ்வுகளை இந்த இணைப்பில் தெரிந்துக் கொள்ளலாம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Bengaluru Rameshwaram Cafe explosion Tamil News

IE Tamil Updates

Tamilnadu | பெட்ரோல் - டீசல் விலை நிலவரம்

Advertisment

 சென்னையில் தொடர்ந்து 650 ஆவது நாளாக இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இன்றைய நிலவரப்படி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

 ஏரிகளின் நீர் நிலவரம்

3300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியின் நீரிருப்பு 2279 மில்லியன் கன அடியாக உள்ளது. 1081 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியின் நீரிருப்பு 747 மில்லியன் கன அடியாக உள்ளது. 500 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட கண்ணன்கோட்டை - தேர்வாய்கண்டிகை ஏரியின் நீரிருப்பு 468 மில்லியன் கன அடியாக உள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

  • Mar 01, 2024 22:41 IST
    பிரதமர் மோடியை சந்தித்த மம்தா பானர்ஜி அரசியல் பேசவில்லை என விளக்கம்

    மேற்கு வங்கம்: ஆளுநர் மாளிகையில் பிரதமர் மோடியை சந்தித்துவிட்டுத் திரும்பியபோது, காரை நிறுத்தி பத்திரிகையாளர்களை சந்தித்துப் பேசிய அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி. "இது மரியாதை நிமித்தமான சந்திப்பு. எந்தவித அரசியலும் பேசவில்லை" என மம்தா பானர்ஜி விளக்கமளித்தார்.



  • Mar 01, 2024 21:54 IST
    ப்ரோ கபடி லீக் : புனேரி பல்தான் அணி சாம்பியன்

    ப்ரோ கபடி லீக் தொடரில் முதல்முறையாக சாம்பியன் பட்டம் வென்றது புனேரி பல்தான் அணி. ஹைதராபாத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஹரியானா ஸ்டீலர்ஸ் அணியை 25 - 28 புள்ளிக் கணக்கில் வீழ்த்தி அசத்தல் வெற்றி.



  • Mar 01, 2024 21:15 IST
    பெங்களூரு குண்டுவெடிப்பு சம்பவம் வழக்குப்பதிவு

    பெங்களூருவில் பிரபல ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் இன்று மதியம் வெடிகுண்டு வெடித்தது உபா மற்றும் வெடிபொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் பெங்களூருவின் எச்ஏஎல் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு



  • Mar 01, 2024 20:43 IST
    தமிழ்நாடா? போதைப் பொருள் விற்பனை கிடங்கா? எடப்பாடி பழனிசாமி கேள்வி

     

    “தமிழ்நாட்டில் இன்று  இரு இடங்களில் ஒரே நாளில் 180 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
    இன்று  மாலை சென்னை, கொடுங்கையூர் குப்பை கிடங்கில் பல கோடிகள் மதிப்புமிக்க  போதை பொருட்கள் கண்டெடுக்க பட்டிருப்பது பெருத்த அதிர்ச்சியை அளிக்கிறது” என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
    மேலும், நாம் வாழ்வது தமிழ்நாடா? அல்லது போதைப் பொருள் விற்பனை கிடங்கா? எனக் கேள்வியெழுப்பியுள்ளார்.



  • Mar 01, 2024 20:11 IST
    விசிக வேட்பாளர்கள் வெற்றி பெறுவதை காங்கிரஸ் உறுதி செய்யும்; செல்வ பெருந்தகை

    “அண்ணன் திருமாவளவனை சந்தித்து வாழ்த்து பெற்றேன்.. விசிக வேட்பாளர்கள் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவதை காங்கிரஸ் தொண்டர்கள் உறுதி செய்வார்கள்” என காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வ பெருந்தகை கூறியுள்ளார்.



  • Mar 01, 2024 19:40 IST
    தி.மு.க, ம.ம.க முதல்கட்ட பேச்சுவார்த்தை

    நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பாக மனிதநேய மக்கள் கட்சிக்கு தி.மு.க அழைப்பு விடுத்துள்ளது. நாளை காலை 9.30 மணிக்கு இந்தப் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.



  • Mar 01, 2024 19:28 IST
    கரும்பு விவசாயி சின்னம்; நீங்கள் இந்தக் கோரிக்கையை வைக்க முடியுமா? உயர் நீதிமன்றம்

    நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கக் கோரி நாம் தமிழர் தரப்பில் தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.
    அப்போது நீதிபதி, “கர்நாடக கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. உங்கள் கட்சி அங்கீகரிக்கப்பட்ட கட்சி அல்ல; நீங்கள் எப்படி கரும்பு விவசாயி சின்னம் கோர முடியும்? எனக் கேள்வியெழுப்பினார்.



  • Mar 01, 2024 18:54 IST
    அ.தி.மு.க - தே.மு.தி.க இடையே குழு அமைத்து கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தப்படும் - எஸ்.பி. வேலுமணி

    அ.தி.மு.க - தே.மு.தி.க என இரு தரப்பிலும் குழு அமைக்கப்பட்ட பின் அடுத்தகட்ட பேச்சுவார்த்தை நடைபெறும்; குழு அமைத்து பேச்சுவார்த்தை நடத்திய பின், கூட்டணி குறித்து தெரியவரும். அ.தி.மு.க - தே.மு.தி.க  கூட்டணி பேச்சுவார்த்தை கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டதாக தே.மு.தி.க பொதுச் செயலாளர் பிரேமலதாவை சந்தித்தபின் அ.தி.மு.க நிர்வாகி எஸ்.பி. வேலுமணி சூசக பதில் அளித்துள்ளார்.



  • Mar 01, 2024 18:34 IST
    டி.டி.வி தினகரனுக்கு எதிரான தேர்தல் விதிமீறல் வழக்கு ரத்து; ஐகோர்ட் உத்தரவு

    2021-ம் ஆண்டு தேர்தலின் போது முதுகுளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்ட போது விதிமீறல் என அ.ம.மு.க பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி டி.டி.வி தினகரன் மனு தாக்கல் செய்தார். இந்த குற்றச்சாட்டில் எந்தவித அடிப்படை ஆதாரமும் இல்லை என இந்த வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.



  • Mar 01, 2024 18:29 IST
    திருக்கோவிலூர் தொகுதி காலியானதாக அறிவிக்க வேண்டும் - அ.தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் மனு

    தி.மு.க முன்னாள் அமைச்சர் பொன்முடியின் தொகுதியான திருக்கோவிலூர் தொகுதியை காலியானதாக அறிவிக்க வேண்டும்; அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் தளவாய் சுந்தரம் மற்றும் சி. விஜயபாஸ்கர் ஆகியோர் சட்டப்பேரவை தனிச் செயலர் சீனிவாசனிடம் மனு அளித்தனர்.



  • Mar 01, 2024 18:10 IST
    பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் நடந்தது குண்டுவெடிப்புதான் - சித்தராமையா

    பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் நடந்தது குண்டுவெடிப்புதான் என கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளார். முதற்கட்ட விசாரணையில் மேலோட்டமாக பார்க்கும் போது IED குண்டு வெடிப்பு போல் தெரிகிறது. காவல்துறை முறையான அறிக்கை வழங்கிய பிறகுதான் எந்த தகவலும் தெரிவிக்க முடியும் என்று சித்தராமையா தெரிவித்துள்ளார்.



  • Mar 01, 2024 17:10 IST
    தே.மு.தி.க.வுடன் பேச்சுவார்த்தை: பிரேமலதா உடன் அ.தி.மு.க நிர்வாகிகள் சந்திப்பு

    மக்களவை தேர்தல் தொடர்பாக கூட்டணி அமைக்க விஜயகாந்த் இல்லத்திற்கு நேரில் சென்ற கே.பி.முனுசாமி, தங்கமணி, வேலுமணி உள்ளிட்ட அ.தி.மு.க நிர்வாகிகள், பிரேமலதாவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.



  • Mar 01, 2024 17:10 IST
    தே.மு.தி.க.வுடன் பேச்சுவார்த்தை: பிரேமலதா உடன் அ.தி.மு.க நிர்வாகிகள் சந்திப்பு

    மக்களவை தேர்தல் தொடர்பாக கூட்டணி அமைக்க விஜயகாந்த் இல்லத்திற்கு நேரில் சென்ற கே.பி.முனுசாமி, தங்கமணி, வேலுமணி உள்ளிட்ட அ.தி.மு.க நிர்வாகிகள், பிரேமலதாவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.



  • Mar 01, 2024 17:06 IST
    நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கக் கோரி சீமான் வழக்கு

     

    மக்களவைத் தேர்தலில் போட்டியிட கரும்பு விவசாயி சின்னத்தை ஒதுக்க கோரி நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் காரசார வாதம் நடைபெற்றது.



  • Mar 01, 2024 16:47 IST
    மெட்ரோ ரயிலில் 86.15 லட்சம் பயணிகள் பயணம் 

    சென்னை மெட்ரோ ரயிலில் கடந்த பிப்ரவரி மாதத்தில் மட்டும் 86.15 லட்சம் பயணிகள் பயணித்துள்ளனர். அதிகபட்சமாக பிப்ரவரி 9ம் தேதி 3,26,786 பயணிகள் பயணம் செய்திருந்தனர். கடந்த ஜனவரி மாதத்தை விட பிப்ரவரி மாதத்தில் 1,51,624 பேர் அதிகம் பயணித்துள்ளனர்.



  • Mar 01, 2024 16:44 IST
    'திருக்கோவிலூர் தொகுதியை காலியானதாக அறிவியுங்கள்' - அ.தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் மனு 

    திருக்கோவிலூர் சட்டமன்றத் தொகுதியை காலியானதாக அறிவிக்க கோரி அ.தி.மு.க எம்.எல்.ஏ.க்கள்  விஜயபாஸ்கர், தளவாய் சுந்தரம் ஆகியோர் சட்டப்பேரவை செயலாளரை சந்தித்து மனு அளித்துள்ளனர். 



  • Mar 01, 2024 16:24 IST
    பேருந்து, ரயில்களில் பயணிக்க ஒரே டிக்கெட் - டெண்டர்

    சென்னையில் பேருந்து, புறநகர் ரயில், மெட்ரோ ரயில் என அனைத்திலும் பயணம் செய்ய ஒரே டிக்கெட் கொண்டு வரப்பட்டுள்ளது. இதற்கு தனியாக செயலி உருவாக்க சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் டெண்டர் கோரியது. QR கோடு மூலம் அனைத்து பொது போக்குவரத்துகளிலும் ஒரே டிக்கெட்டில் பயணம் செய்யலாம். 

     



  • Mar 01, 2024 16:23 IST
    ஜாபர் சாதிக்கிற்கு லுக் அவுட் நோட்டீஸ்

    2000 கோடி ரூபாய் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் தேடப்பட்டு வரும் ஜாபர் சாதிக், வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்வதை தடுக்கும் வகையில் லுக் அவுட் நோட்டீஸ் வழங்கிய மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு உத்தரவிட்டுள்ளது. 



  • Mar 01, 2024 16:22 IST
    சென்னை- தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் 

    சென்னை அடுத்த மாங்காடு அருகே தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் தனியார் பள்ளியில் தீவிர சோதனை நடத்தி வருகிறார்கள். 



  • Mar 01, 2024 16:21 IST
    தேர்தலில் போட்டியா? - அண்ணாமலை விளக்கம்

    "எனக்கான தனி விருப்பம் என்று எதுவும் கிடையாது. கட்சி தலைமை உத்தரவிட்டால், நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவேன்" என்று பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை விளக்கமளித்துள்ளார். 



  • Mar 01, 2024 15:38 IST
    கடலூர் தி.மு.க எம்.பி கொலை வழக்கு: ஐகோர்ட் அதிரடி உத்தரவு 

    கடலூர் தி.மு.க எம்.பி மீதான கொலை வழக்கு விசாரணையை முடிக்க மேலும் ஆறு மாதம் அவகாசம் அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

    முந்திரி ஆலை தொழிலாளி கொலை தொடர்பாக கடலூர் திமுக எம்.பி. டி.ஆர்.வி.ரமேஷ் உள்ளிட்ட 6 பேர் மீது சிபிசிஐடி போலீசார் வழக்கு தொடர்ந்தது. வழக்கை கடலூரில் இருந்து செங்கல்பட்டுக்கு மாற்றி 6 மாதத்தில் விசாரணையை முடிக்க கடந்த ஆண்டு ஜூலையில் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. 

    உயர்நீதிமன்ற உத்தரவின் படி விசாரணை தொடங்கவில்லை என மனுதாரர் செந்தில்வேல் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது. விசாரணையை முடிக்க மேலும் கால அவகாசம் வேண்டும் என சிபிசிஐடி போலீசார் கோரிக்கை விடுத்த நிலையில், விசாரணையை முடிக்க மேலும் ஆறு மாதம் அவகாசம் அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 



  • Mar 01, 2024 14:55 IST
    பெங்களூரு உணவகத்தில் வெடி விபத்து

    பெங்களூரு வைட் பீல்ட் பகுதியில் உள்ள ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த வெடி விபத்தில், 3 ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர் ஒருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. சிலிண்டர் வெடித்ததா? அல்லது வேறு ஏதேனுமா? என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். 



  • Mar 01, 2024 14:54 IST
    பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு விஜய் வாழ்த்து 

     

    “தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 12ம் வகுப்புப் பொதுத்தேர்வு எழுதும் என் அன்புத் தம்பி, தங்கைகள் அனைவருக்கும் வாழ்த்துகள்” என நடிகரும், த.வெ.க. தலைவருமான விஜய் தெரிவித்துள்ளார். 



  • Mar 01, 2024 14:16 IST
    ராஜினாமா கடிதம் செல்லாது - நெல்லை மாநகர ஆணையர்

    கவுன்சிலர் தனது ராஜினாமா கடிதத்தை மேயிரிடமே வழங்க வேண்டும் என்றும், நெல்லை மாநகராட்சி 7வது வார்டு திமுக கவுன்சிலர் ராஜினாமா கடிதம் செல்லாது என்றும் நெல்லை மாநகர ஆணையர் தெரிவித்துள்ளார். 



  • Mar 01, 2024 13:43 IST
    சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

    தமிழகத்தில் அடுத்த 2 நாட்கள் வெப்பம் அதிகரிக்கும்

    அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தை விட 2 முதல் 3 டிகிரி ஃபாரன்ஹீட் வரை உயர வாய்ப்பு



  • Mar 01, 2024 13:43 IST
    மிக்ஜாம் புயல் நிவாரணம் - ₹6000 வரவு வைக்கப்பட்டது

    சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கடந்தாண்டு டிசம்பரில் தாக்கிய மிக்ஜாம் புயல் நிவாரணமாக, குடும்ப அட்டை இல்லாதவர்கள் தனியாக விண்ணப்பித்த நிலையில், அவர்களின் வங்கிக்கணக்குகளில் ₹6000 இன்று வரவு வைக்கப்பட்டுள்ளது

    5 லட்சத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பித்திருந்த நிலையில், தகுதியானோருக்கு தொகை வரவு வைக்கப்பட்டுள்ளதாக தகவல்



  • Mar 01, 2024 13:43 IST
    திமுக நிர்வாகி கொலை வழக்கு - 5 பேர் சரண்

    திமுக நிர்வாகி ஆராமுதன் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேர் சத்தியமங்கலம் நீதிமன்றத்தில் சரண்

    சரணடைந்த 5 பேரில் ஒருவர் மைனர் என தகவல்



  • Mar 01, 2024 12:52 IST
    விசிக உடனான தொகுதிப் பங்கீடு

    விசிக உடனான தொகுதிப் பங்கீடு குறித்த, 2ம் கட்ட பேச்சுவார்த்தைக்கு திமுக நாளை அழைப்பு விடுத்துள்ளது



  • Mar 01, 2024 12:52 IST
    போதைப்பொருள் பறிமுதல்

    மதுரை ரயில் நிலையத்தில் 30 கிலோ போதைப்பொருள் பறிமுதல்

    பறிமுதல் செய்யப்பட்ட மெத்த பெட்டமைனின் மதிப்பு ரூ.90 கோடி என தகவல்;

    சென்னையைச் சேர்ந்த பிரகாஷ் என்பவரிடம் மத்திய போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு காவல் துறையினர் விசாரணை



  • Mar 01, 2024 12:51 IST
    ஓபிஎஸ் மனு தள்ளுபடி

    வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மீதான வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தானாக முன்வந்து விசாரணை;

    இதற்கு தடைகோரி உச்சநீதிமன்றத்தில் ஓபிஎஸ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி



  • Mar 01, 2024 12:19 IST
    வைகோ பேட்டி

    ம.தி.மு.க தனி சின்னத்தில் போட்டி

    கட்சி ரீதியான பதிவை தக்க வைத்து கொள்ளவே இந்த முடிவு

    திமுக உடனான தொகுதி பங்கீடு இன்னும் ஓரிரு நாளில் முடிவடையும் - வைகோ



  • Mar 01, 2024 12:18 IST
    செல்வப்பெருந்தகை பேட்டி

    திமுக உடன் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது

    திமுக - காங்கிரஸ் இடையே எந்தவித பிரச்சினையும் இல்லை

    ஓரிரு நாளில் தொகுதி பங்கீடு உடன்பாடு ஏற்படும் – செல்வப்பெருந்தகை



  • Mar 01, 2024 11:54 IST
    சென்னை பல்கலை. ஊழியர்கள் போராட்டம்

    சென்னை பல்கலைக் கழக பேராசிரியர்கள், ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தால் 6 ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள் பாதிப்பு

    பேராசிரியர்களுக்கு ஆதரவாக போராட்டத்தில் இறங்கிய ஒரு பிரிவு மாணவர்கள்



  • Mar 01, 2024 11:54 IST
    வைகோ வழக்கு

    பம்பரம் சின்னம் கோரிய வைகோ வழக்கில் தேர்தல் ஆணையம் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு



  • Mar 01, 2024 11:53 IST
    அதிமுக தேர்தல் அறிக்கை குழுவினர் பேட்டி

    சென்னை மண்டலத்தில் இருந்து 512 கோரிக்கை மனுக்கள் வந்துள்ளன;

    வேலூர் மண்டலத்தில் இருந்து 773 கோரிக்கை மனுக்கள் வந்துள்ளன;

    மொத்தமாக 6,571 கோரிக்கை மனுக்கள் வந்துள்ளன, இவற்றில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பிரச்னைகள் இடம்பெற்றுள்ளன;

    பிப்.2 முதல் 10ம் தேதி வரை 9 மண்டலங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 6,000-க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டுள்ளன;

    மக்களிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கைகளை பிரித்து செயலாற்றும் பணியில் ஈடுபட்டுள்ளோம்;

    அதிமுக தேர்தல் அறிக்கை பேசும் பொருளாக இருக்கும், ஆட்சியாளர்களுக்கு வழிகாட்டியாக அமையும்

    - அதிமுக தேர்தல் அறிக்கை குழுவினர் பொன்னையன், நத்தம் விஸ்வநாதன் கூட்டாக பேட்டி



  • Mar 01, 2024 11:36 IST
    லஞ்ச ஒழிப்பு போலீஸ் ரெய்டு - இ.பி. எஸ் கண்டனம்

    அதிமுக முன்னாள் எம்எல்ஏ பிரபு வீட்டில் நடைபெறும் லஞ்ச ஒழிப்பு சோதனைக்கு அதிமுக பொதுச்செயலாளர் ஈபிஎஸ் கண்டனம் "அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக, பழிவாங்கும் எண்ணத்தோடு சோதனை" - எடப்பாடி பழனிசாமி



  • Mar 01, 2024 11:36 IST
    வேலூர் மாவட்ட கல்வி அலுவலர் சஸ்பெண்ட்

    வேலூர் மாவட்ட கல்வி அலுவலர் நேச பிரபா சஸ்பெண்ட் தேர்வு பணிகளில் சுணக்கமாக இருந்ததால் கல்வித்துறை நடவடிக்கை "தேர்வு பணிகளில் சுணக்கமாக இருந்தாலோ, முறைகேடுகளுக்கு உடந்தை போனாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" தேர்வு துறை இயக்குனர் சேதுராம வர்மா எச்சரிக்கை



  • Mar 01, 2024 11:19 IST
    முதல்வர் ஸ்டாலினுக்கு ரஜினி வாழ்த்து

    முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய நடிகர் ரஜினிகாந்த் தொலைபேசியில் முதலமைச்சர் ஸ்டாலினை தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார் ரஜினி விஜய், கமல்ஹாசன் உள்ளிட்டோரும் முதல்வர் ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர் பிரதமர் மோடி, அமைச்சர்கள், எம்.பிக்கள், திமுகவின் முக்கிய நிர்வாகிகள் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்



  • Mar 01, 2024 09:58 IST
    தலைமை செயலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

    சென்னை தலைமை செயலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு தனியார் தொலைக்காட்சிக்கு வந்த மிரட்டல் அழைப்பால் தலைமை செயலகம் முழுவதும் அதிரடியாக சோதனை காலை 7.30 மணிக்கு தனியார் தொலைக்காட்சிக்கு செல்போன் மூலம் மிரட்டல் மோப்ப நாய்களை கொண்டு தலைமை செயலகம் முழுவதும் உள்ள முக்கிய அறைகளில் சோதனை



  • Mar 01, 2024 09:44 IST
    தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு த.வெ.க தலைவர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து



  • Mar 01, 2024 09:43 IST
    முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மநீம தலைவர் கமல்ஹாசன் பிறந்தநாள் வாழ்த்து



  • Mar 01, 2024 09:42 IST
    முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் பிறந்தநாள் வாழ்த்து



  • Mar 01, 2024 09:04 IST
    சென்னை மெரினாவில் உள்ள பேரறிஞர் அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை

    தனது பிறந்தாளை ஒட்டி சென்னை மெரினாவில் உள்ள பேரறிஞர் அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்துகிறார்



  • Mar 01, 2024 09:01 IST
    முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து



  • Mar 01, 2024 08:47 IST
    எரிவாயு சிலிண்டர் வெடித்து காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 2 குழந்தைகள் இன்று உயிரிழப்பு

    செங்கல்பட்டில் சதாம் என்பவர் வீட்டில் நேற்று எரிவாயு சிலிண்டர் வெடித்து காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 2 குழந்தைகள் இன்று உயிரிழப்பு. 



  • Mar 01, 2024 08:42 IST
    அ.தி.மு.க முன்னாள் எம்எல்ஏ வீட்டில் ரெய்டு

    கள்ளக்குறிச்சியில் உள்ள அதிமுக முன்னாள் எம்எல்ஏ பிரபு வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ‌சோதனை சொத்து குவிப்பு வழக்கு தொடர்பாக 9 இடங்களில் சோதனை நடத்தும் போலீசார்



  • Mar 01, 2024 08:14 IST
    அ.தி.மு.க விருப்ப மனு : இன்றே கடைசி நாள்

    நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க சார்பில் போட்டியிட விரும்புவோர், விருப்ப மனு வழங்க இன்று கடைசிநாள். இதுவரை சுமார் 1,000 விருப்ப மனுக்கள் பெற்றுள்ளதாகத் தகவல், பிப்.12ம் தேதி முதல் அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் விருப்ப மனு வழங்கப்பட்டு வருகிறது.  



  • Mar 01, 2024 08:00 IST
    இன்று பிளஸ் 2 பொதுத்தேர்வு தொடங்குகிறது

    தமிழ்நாடு முழுவதும் இன்று தொடங்குகிறது.  பிளஸ் 2 பொதுத்தேர்வு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சுமார் 9.25 லட்சம் மாணவ-மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர். 



  • Mar 01, 2024 07:58 IST
    வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு

    19 கிலோ எடையுள்ள சிலிண்டர் விலை 23 ரூபாய் 50 பைசா உயர்ந்து 1960 ரூபாய் 50 பைசாவுக்கு விற்பனை.



Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment