Advertisment

Tamil News Today: தூத்துக்குடியில் மீண்டும் போட்டியிட விருப்பம் தெரிவித்து இன்று விருப்பமனு அளிக்கிறார் கனிமொழி

Tamil News Today Updates-04 March 2024- இன்று நடைபெறும் அனைத்து செய்திகளையும் தெரிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
sasa

IE Tamil Updates

Tamil News updates : பெட்ரோல், டீசல் விலை

Advertisment

653-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.94.24 காசுகளாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

 நீர் நிலவரம்

3300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியின் நீரிருப்பு 2239 மில்லியன் கன அடியாக உள்ளது. 1081 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியின் நீரிருப்பு 744 மில்லியன் கன அடியாக உள்ளது. 500 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட கண்ணன்கோட்டை - தேர்வாய்கண்டிகை ஏரியின் நீரிருப்பு 463 மில்லியன் கன அடியாக உள்ளது. 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

 • Mar 04, 2024 19:44 IST
  தேர்தல் நிதி பத்திரங்கள் வழக்கு; உச்ச நீதிமன்றத்தில் எஸ்.பி.ஐ மனு

  தேர்தல் பத்திரங்கள் வாயிலாக அரசியல் கட்சிகள் பெற்ற நன்கொடை விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என பாரத ஸ்டேட் வங்கி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. • Mar 04, 2024 19:34 IST
  11ஆம் வகுப்பு தேர்வில் 9,844 பேர் ஆப்சென்ட்

  தமிழ்நாட்டில் இன்று தொடங்கிய 11ஆம் வகுப்பு தேர்வில் தமிழ் முதல் தாள் பொதுத்தேர்வில் 9,844 பேர் ஆப்சென்ட் ஆகியுள்ளனர் என பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது. • Mar 04, 2024 18:29 IST
  நிவாரணம் திருப்பி அளிப்பு; மீனவர் விளக்கம்

   

  "குறைவான நிவாரணத்தை" முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் திருப்பியளித்த சர்ச்சை விவகாரத்தில் ஆணையில் பெயர் மாறியதாலேயே திருப்பியளித்ததாக சம்பந்தப்பட்ட மீனவர் பேட்டியளித்துள்ளார். • Mar 04, 2024 17:33 IST
  அண்மையில் கென்யா சென்ற ஜாபர் சாதிக்; உடன் சென்றவர்கள் யார்?

  போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்ட ஜாபர் சாதிக் சமீபத்தில் கென்யா நாட்டுக்கு சென்றுள்ளார். அவருடன் பயணமாக கென்யா சென்ற நபர்கள் யார் யார் என்பது குறித்து போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்திவருகின்றனர். • Mar 04, 2024 15:40 IST
  போக்குவரத்து தொழிற்சங்கத்தினருடன்  பேச்சுவார்த்தை

   

  போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்திருந்த நிலையில் பல கட்டங்களாக முத்தரப்பு பேச்சுவார்த்தை தொடர்கிறது. போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகளுடன், வரும்  6-ம் தேதி முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெறும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. 

    • Mar 04, 2024 15:27 IST
  வெடிகுண்டு மிரட்டல்: தேர்வுகள் ஒத்திவைப்பு

   

  கோவை வடவள்ளியில் உள்ள PSBB தனியார் பள்ளிக்கு வந்த வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து, பள்ளி நிர்வாகம் நாளை விடுமுறை அறிவித்தது. மேலும் 9, 11ம் வகுப்பு தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.  • Mar 04, 2024 15:26 IST
  மனு கொடுத்த மாற்றுத் திறனாளிகளுக்கு உடனடி உதவி 

  விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைத்தீர்ப்பு கூட்டத்தில் மனு கொடுத்த 5 மாற்றுத் திறனாளிகளுக்கு, ஒரு மணி நேரத்தில் 3 சக்கர வாகனங்கள் உள்ளிட்ட உபகரணங்களை மாவட்ட ஆட்சியர் சி.பழனி வழங்கினார்.  • Mar 04, 2024 15:22 IST
  தமிழக தலைமை தேர்தல் அதிகாரியுடன் சீமான் சந்திப்பு

  நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுத்த நிலையில், கரும்பு விவசாயி சின்னம் தொடர்பாக தமிழக தேர்தல் அதிகாரியுடன் சீமான் சந்திப்பு மேற்கொண்டார். 

  "கர்நாடகாவில் ஒருவருக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது . சின்னம் கேட்காமல் அவர்களாகவே வழங்கியதாக கர்நாடகாவை சேர்ந்தவர் கூறியுள்ளார்" என்று சீமான் தெரிவித்தார்.  • Mar 04, 2024 14:33 IST
  2000 கோடி மோசடி - திருவண்ணாமலை போலீசில் புகார்

   

  திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியில் உள்ள ஏ.பி.ஆர் சிட் பண்ட் நிறுவனத்தில் முதலீடு செய்த பணத்தை திரும்ப தராமல் மோசடி செய்ததாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் பலரும் புகார் அளித்துள்ளனர். ரூ. 2000 கோடி வரை மோசடி நடந்துள்ளதாக அவர்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். 

    • Mar 04, 2024 14:31 IST
  திருக்கோவிலூர் தொகுதியில் இடைத்தேர்தலா? - சத்யபிரதா சாகு விளக்கம்

   

  'திருக்கோவிலூர் தொகுதி காலியானதாக அறிவிப்பது தொடர்பாக எந்த கடிதமும் தேர்தல் ஆணையத்திற்கு வரவில்லை' என்று மாநில தலைமை தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்  • Mar 04, 2024 13:45 IST
  கூட்டணி கட்சிகளின் சின்னம் -  பாஜக தலைமை முடிவு செய்யும்

  கூட்டணி கட்சிகள் எந்த சின்னத்தில் போட்டியிடம் என்பதை பாஜக தேசிய தலைமை முடிவு செய்யும். பாஜக உத்தேச வேட்பாளர் பட்டியல் வரும் மார்ச் 6-ல் தேசிய தலைமையிடம் வழங்கப்படும்- பா.ஜ.க எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் • Mar 04, 2024 12:58 IST
  ஜி.யு.போப் பள்ளிப் படிப்பை கூட முடிக்காதவர்: ஆளுநர் ரவி

  "திராவிட மொழிகள் குறித்து கால்டுவெல் எழுதிய நூல் போலியானது. ஜி.யு.போப் போன்றவர்கள் பள்ளிப்படிப்பை கூட முடிக்காதவர்கள். மக்களை கிறித்துவ மதத்திற்கு மாற்றவே அவர்கள் இந்தியா வந்தனர். எனக்கு இயேசுவும் பிடிக்கும், பைபிளும் பிடிக்கும்" - ஆளுநர் ரவி • Mar 04, 2024 12:57 IST
  சனாதன தர்மத்தை காக்கவே அய்யா வைகுண்டர் தோன்றினார்: ஆளுநர் ரவி

  "அய்யா வைகுண்டர் தோன்றிய சமூக காலகட்டம் சனாதன தர்மத்திற்கு பாதிப்பு ஏற்பட்ட காலகட்டம். சனாதன தர்மத்தை காக்கவே அய்யா வைகுண்டர் தோன்றினார்.

  சனாதன கோட்பாட்டின் அடிப்படையில் பாரதத்தில் மக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் வாழ்ந்தார்கள். அந்த ஒற்றுமை கிழக்கிந்திய கம்பெனிக்கு சவாலாக இருந்தது" - ‘மகாவிஷ்ணுவின் அவதாரம் ஸ்ரீ வைகுண்ட சுவாமி அருளிய சனாதான வரலாறு’ என்ற புத்தகத்தை வெளியிட்டு ஆளுநர் ரவி பேச்சு • Mar 04, 2024 12:54 IST
  போதைப்பொருள் கடத்தல் - 2 பேருக்கு 15 நாள் காவல்

  36 கிலோ மெத்தபெட்டமைன் கடத்தல் வழக்கில், 2 பேருக்கு 15 நாள் நீதிமன்ற காவல். போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவு • Mar 04, 2024 12:53 IST
  மோடி வருகை: ஜெயக்குமார் விமர்சனம்

  "வடக்கே உள்ள கட்சிகளால் தமிழ்நாட்டில் ஆட்சியமைக்க முடியாது" - பிரதமர் மோடியின் தமிழ்நாடு வருகையை விமர்சனம் செய்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் • Mar 04, 2024 12:51 IST
  பொன்முடி மனு விசாரணை ஒத்திவைப்பு

  சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் பொன்முடியின் மேல்முறையீட்டு மனு. உச்ச நீதிமன்றத்தில் விசாரணை வழக்கு தொடர்பான கூடுதல் விபரங்கள், தீர்ப்பு விபரங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணை மார்ச் 18-ம் தேதிக்கு ஒத்திவைப்பு • Mar 04, 2024 12:50 IST
  உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு கோரிக்கை

  திருச்சி சிறப்பு முகாமில் உள்ள முருகன், ராபர்ட் பயஸ் மற்றும் ஜெயக்குமாரை இலங்கை அனுப்புவதற்கான அனுமதியை ஒன்றிய அரசு உடனடியாக வழங்க உத்தரவிட வேண்டும் - உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு கோரிக்கை

  மூவரும் தனியாக மனுத்தாக்கல் செய்தால் அது பரிசீலிக்கப்படும் - நீதிபதிகள் • Mar 04, 2024 12:30 IST
  மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து காங். கருப்புக் கொடி போராட்டம்

  பிரதமர் மோடியை கண்டித்து கருப்புக் கொடி போராட்டம். இன்று சென்னை வரும் பிரதமர் மோடிக்கு எதிராக சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே காங்கிரஸ் கட்சியினர் கருப்புக் கொடி போராட்டம். • Mar 04, 2024 12:29 IST
  வானதி ஸ்ரீனிவாசன் பேட்டி

  "பாஜக தேசிய தலைமைக்கு வரும் 6ம் தேதி உத்தேச வேட்பாளர் பட்டியல் அனுப்பி வைக்கப்படும்" - பாஜகவின் மையக்குழு கூட்டத்திற்கு பின்னர் வானதி ஸ்ரீனிவாசன் MLA பேட்டி • Mar 04, 2024 12:27 IST
  விசாரணையை எதிர்கொள்ள தயார்: உதயநிதி

  "நான் பேசியதன் விளைவை நன்கு அறிவிவேன். 6 மாநிலங்களில் வெவ்வேறு உயர் நீதிமன்றங்களில் வழக்குகள் உள்ளன. எல்லா மாநிலங்களுக்கும் என்னால் செல்ல முடியாது.

  பொதுவான ஒரு இடத்தில் விசாரிக்க வேண்டும், விசாரணையை எதிர்கொள்ள நான் தயார்" - சனதானம் குறித்த பேச்சு தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தரப்பில் பதில் • Mar 04, 2024 12:00 IST
  பிரதமர் சல்லிக் காசு கூட தமிழகத்திற்கு தரவில்லை: ஸ்டாலின் 

  சல்லிக் காசு கூட தமிழகத்திற்கு தரவில்லை-பிரதமர் மீது முதல்வர் குற்றச்சாட்டு

  தமிழக மக்களுக்கு சல்லிக் காசு நிதியை கூட பிரதமர் தரவில்லை. நிதி வழங்காத நிலையில் வாக்கு கேட்டு பிரதமர் மோடி தமிழகத்திற்கு அடிக்கடி வருகிறார்- ஸ்டாலின்  • Mar 04, 2024 11:58 IST
  'நீங்கள் நலமா?' - முதல்வரின் புதிய திட்டம் 

  'நீங்கள் நலமா?' என்ற பெயரில் வரும் மார்ச் 6-ம் தேதி முதல்வரின் புதிய திட்டம் தொடக்கம். முதல்வரின் திட்டங்கள் மக்களை சென்றடைந்து இருக்கிறதா என்பதை சோதிக்க இத்திட்டம் தொடக்கம்  • Mar 04, 2024 11:56 IST
  சண்டிகர் மாநகராட்சி துணை மேயராக பாஜக கவுன்சிலர் தேர்வு

  சண்டிகர் மாநகராட்சியின் துணை மேயராக பாஜக கவுன்சிலர் குல்ஜீத் சிங் சந்து தேர்வானார். பாஜகவுக்கு 19 வாக்குகளும், காங்கிரஸ் + ஆம் ஆத்மி கூட்டணிக்கு 16 வாக்குகளும் கிடைத்துள்ளன. ஒரு வாக்கு செல்லாதவையாக அறிவிப்பு • Mar 04, 2024 11:42 IST
  பா.ஜ.க மையக்குழு கூட்டம் தொடக்கம்

  மக்களவைத் தேர்தல் தொடர்பாக பாஜகவின் மையக்குழு கூட்டம், சென்னையில் உள்ள அக்கட்சி தலைமை அலுவலகத்தில் தொடங்கியது, • Mar 04, 2024 11:40 IST
  மயிலையில் ரூ.44 கோடி மதிப்பில் நீர் ஒழுங்குகள்- ஸ்டாலின்

  மயிலாடுதுறை நகராட்சிக்கு ₹10 கோடி மதிப்பீட்டில் புதிய அலுவலகம் கட்டப்படும். கடல் நீர் உட்புகுவதை தடுப்பதற்காக ₹44 கோடி மதிப்பீட்டில் நீர் ஒழுங்குகள் அமைக்கப்படும் ₹5 கோடி மதிப்பில் புதிய மாவட்ட நூலகம் அமைக்கப்படும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு • Mar 04, 2024 11:34 IST
  ஹைதராபாத் அணி புதிய கேப்டன் பேட் கம்மின்ஸ்

  சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் புதிய கேப்டனாக ஆஸ்திரேலிய வீரர் பேட் கம்மின்ஸ் நியமனம்.

  ஐபிஎல் ஏலத்தில் ₹20.5 கோடி கொடுத்து கம்மின்ஸை ஏலத்தில் எடுத்தது சன்ரைசர்ஸ் அணி • Mar 04, 2024 11:31 IST
  அவையில் பேச லஞ்சம் வாங்குவது குற்றம்: உச்ச நீதிமன்றம்

  நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் பேசுவதற்கும், வாக்களிப்பதற்கும் உறுப்பினர்கள் லஞ்சம் வாங்கினால் குற்றம்தான் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான 7 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு!

  அவ்வாறு லஞ்சம் வாங்குபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவும் உத்தரவு • Mar 04, 2024 11:27 IST
  மயிலை புதிய மாவட்ட ஆட்சியர் கட்டடம் திறப்பு

  மயிலாடுதுறையில் கட்டப்பட்டுள்ள புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

  ₹114.48 கோடி மதிப்பில் புதிய கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. • Mar 04, 2024 11:02 IST
  போதைப் பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த அ.தி.மு.க ஆர்ப்பாட்டம்

  போதைப் பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த கோரி அ.தி.மு.க ஆர்ப்பாட்டம் தமிழக அரசை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் அதிமுக ஆர்ப்பாட்டம் • Mar 04, 2024 10:48 IST
  புதிய ஆட்சியர் அலுவலகத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

  ரூ.114.48 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள மயிலாடுதுறை மாவட்டத்துக்கான புதிய ஆட்சியர் அலுவலகத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் • Mar 04, 2024 10:44 IST
  மார்ச் 12-க்கு பிறகு ஆஜராக தயார்

  மார்ச் 12ம் தேதிக்கு பிறகு விசாரணைக்கு ஆஜராக தயார் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறைக்கு கடிதம். • Mar 04, 2024 10:10 IST
  பாஜக பொதுக்கூட்டம் - ஓ.பி.எஸ் பங்கேற்கவில்லை

  சென்னையில் பிரதமர் மோடி பங்கேற்கும் பாஜக பொதுக்கூட்டத்தில் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் பங்கேற்கவில்லை பல்லடம், திருநெல்வேலி பொதுக்கூட்டத்துக்கு ஓபிஎஸ்சை அழைக்காத நிலையில் இன்றைய கூட்டத்தில் பங்கேற்கவில்லை • Mar 04, 2024 09:42 IST
  சென்னை கெருகம்பாக்கதில் உள்ள தனியார் பள்ளிக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்

  சென்னை கெருகம்பாக்கதில் உள்ள தனியார் பள்ளிக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் பரபரப்பு. மாணவர்களை வீட்டுக்கு அழைத்துச் செல்ல பெற்றோர்களுக்கு பள்ளி நிர்வாகம் குறுஞ்செய்தி அனுப்பியுள்ளது. மாணவர்கள் வெளியேற்றப்பட்டு காவல்துறையினர் பள்ளியில் தீவிர சோதனை கடந்த 1ம் தேதி மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்த நிலையில் இன்று மீண்டும் மிரட்டல். • Mar 04, 2024 09:41 IST
  மோடி வருகை: காங்கிரஸ் சார்பில் கருப்புக் கொடி போராட்டம்

  பிரதமர் மோடிக்கு எதிராக காங்கிரஸ் சார்பில் கருப்புக் கொடி போராட்டம் - தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை அறிவிப்பு • Mar 04, 2024 09:39 IST
  கோவை பள்ளிக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்

  கோவை பள்ளிக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல். கோவை வடவள்ளி பகுதியில் உள்ள தனியார் பள்ளிக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல். • Mar 04, 2024 09:26 IST
  சாலை விபத்தில் சிக்கிய இளம் கிரிக்கெட் வீரர்

  ஐபிஎல் தொடரின் முதல் பழங்குடியின வீரரான ராபின் மின்ஸ் இருசக்கர வாகனத்தில் சென்றபோது விபத்து வலது முழங்காலில் காயம் ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில், நலமுடன் இருப்பதாக ராபின் மின்ஸ் தந்தை விளக்கம். • Mar 04, 2024 09:26 IST
  நோய்வாய்ப்பட்ட தாய் யானைக்கு சிகிச்சை

  பண்ணாரி வனப்பகுதியில் உடல் நலம் குன்றி நோய்வாய்ப்பட்ட தாய் யானைக்கு சிகிச்சை தாய் யானையை சுற்றிசுற்றி வந்த 2 மாத குட்டி யானை தனியாக பராமரிப்பு • Mar 04, 2024 07:48 IST
  மோடி இன்று திறக்கும் ஈனுலை பெரும் ஆபத்தை விளைவிக்கக்கூடியது

  பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கும் அதிவேக ஈனுலை பெரும் ஆபத்தை விளைவிக்கக்கூடியது" -வைகோ கொந்தளிப்பு • Mar 04, 2024 07:48 IST
  மயிலாடுதுறையில் புதிதாக கட்டப்பட்டுள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை ஸ்டாலின் திறந்து வைக்கிறார்

  மயிலாடுதுறையில் புதிதாக கட்டப்பட்டுள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை இன்று திறந்து வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் • Mar 04, 2024 07:47 IST
  அதிமுக இன்று கண்டன ஆர்ப்பாட்டம்

  அதிமுக இன்று கண்டன ஆர்ப்பாட்டம். தமிழகத்தில் போதைப் பொருள் புழக்கத்தை கண்டித்து அதிமுக சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம். • Mar 04, 2024 07:46 IST
  பாகிஸ்தானின் பிரதமாராக இன்று பதவியேற்கிறார், ஷெபாஸ் ஷெரீப்

  பாகிஸ்தானின் புதிய பிரதமராக இன்று பதவியேற்கிறார், ஷெபாஸ் ஷெரீப் • Mar 04, 2024 07:46 IST
  இன்று தொடங்குகிறது பிளஸ் 1 பொதுத்தேர்வு

  தமிழ்நாடு முழுவதும் இன்று தொடங்குகிறது பிளஸ் 1 பொதுத்தேர்வு. Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment