Advertisment

Tamil News updates: எண்ணூர் பெரிய குப்பம் பகுதியில் நள்ளிரவில் வாயு கசிவு: 30 பேர் மருத்துவமனையில் அனுமதி

Tamil News Updates Tamilnadu news- 26 December 2023- அனைத்து செய்திகளையும் தெரிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
chennai, rajiv gandhi government hospital, tamilnadu police, bomb threat for rajiv gandhi government hospital

IE Tamil LIVE Updates

பெட்ரோல் – டீசல் விலை

Advertisment

சென்னையில் 583-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63 காசுகளாகவும், டீசல் ஒரு லிட்டர் ரூ.94.24 காசுகளாகவும்  விற்பனை செய்யப்படுகிறது.

 அங்கித் திவாரியிடம் அமலாக்கத்துறை விசாரணை

 அங்கித் திவாரியிடம் அமலாக்கத்துறை விசாரணை. திண்டுக்கல் மருத்துவரிடம் அங்கித் திவாரி லஞ்சம் வாங்கிய விவகாரத்தில் அமலாக்கத்துறை விசாரணை. சட்டவிரோத பணப்பரிமாற்றம் என்ற அடிப்படையில், விசாரணையை தொடங்கியது அமலாக்கத்துறை.

 ஏரிகளின் நீர் நிலவரம்

3300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியின் நீரிருப்பு 2998 மில்லியன் கன அடியாக உள்ளது. 159 கன அடி நீர் வெளியேற்றம். 1081 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியின் நீரிருப்பு 777 மில்லியன் கன அடியாக உள்ளது. நீர்வரத்து வந்து 28 கன அடியாக உள்ளது. 500 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட கண்ணன்கோட்டை - தேர்வாய்கண்டிகை ஏரியின் நீரிருப்பு முழு கொள்ளவை எட்டி 23வது நாளாக உபரிநீர் வழிந்தோடுகிறது. நீர்வரத்து வந்து 10 கன அடியாக உள்ளது. 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

  • Dec 27, 2023 00:05 IST
    விஜயகாந்த் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி

    தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் டிச.27ஆம் தேதி செவ்வாய்க்கிழமை மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர், வழக்கமான உடல் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் நாளை மறுநாள் (டிச.29) வீடு திரும்புவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



  • Dec 26, 2023 22:18 IST
    வீடு இழந்தவர்களுக்கு வீடு- நிர்மலா சீதாராமன் உறுதி

     

    வெள்ளத்தில் வீடு இழந்தவர்கள் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தில் விண்ணப்பிக்கலாம் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.



  • Dec 26, 2023 21:29 IST
    திமுகவின் சமூக நீதி வேஷம் கலைந்தது- அண்ணாமலை


    வேங்கைவயல் விவகாரம் குறித்து அண்ணாமலை ட்விட்டர் எக்ஸ் சமூக வலைதளத்தில், “வேங்கைவயல் சம்பவம் நடந்து ஒரு ஆண்டு கடந்து விட்டது முதலமைச்சர் 
    @mkstalin
     அவர்களே. இத்தனை ஆண்டுகள் நீங்கள் போட்டு வைத்திருந்த உங்கள் சமூக நீதி வேஷம் கலைந்து, மக்கள் முன் உங்கள் உண்மை முகம் அம்பலப்பட்டு ஒரு ஆண்டு ஆகிறது” எனத் தெரிவித்துள்ளார்.



  • Dec 26, 2023 20:34 IST
    தமிழ்நாட்டில் புதிதாக 14 பேருக்கு கொரோனா பாதிப்பு

    தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 14 பேருக்கு கொரோனா பெருந்தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆக தமிழ்நாட்டில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 135 ஆக உயர்ந்துள்ளது.
    18 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். நேற்றுடன் ஒப்பிடும்போது இன்று பாதிப்பு சற்று குறைந்துள்ளது.



  • Dec 26, 2023 20:15 IST
    டீப்ஃபேக் வீடியோ விவகாரம்: மத்திய அரசு உத்தரவு

    டீப்ஃபேக் பற்றிய கவலைகள் அதிகரித்து வரும் நிலையில், தகவல் தொழில்நுட்ப விதிகளுக்கு இணங்குமாறு அனைத்து சமூக ஊடக தளங்களுக்கும் மத்திய அரசாங்கம் அறிவுறுத்தியுளளது.



  • Dec 26, 2023 19:52 IST
    கேல் ரத்னா விருதை திருப்பி தருகிறேன்- பிரதமருக்கு வினேஷ் போகட் கடிதம்

    “எனது கேல் ரத்னா மற்றும் அர்ஜுனா விருதை திருப்பி தருகிறேன்” என வினேஷ் போகட் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
    பிரிஜ் பூஷண் சிங் மீது குற்றஞ்சாட்டிய மலயுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவாக இந்த முடிவை அவர் எடுத்துள்ளார்.



  • Dec 26, 2023 19:35 IST
    தேனாம்பேட்டை போலீசில் இயக்குனர் விஜய் புகார்


    தியாகராய நகர் ஹபிபுல்லா சாலை வழியாக படப்பிடிப்பிற்காக காரில் சென்றுள்ளார்.  அப்போது இயக்குனர் விஜய்யிடம் இளைஞர் ஒருவர் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
    இது தொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தேனாம்பேட்டை போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தியுள்ளனர்.



  • Dec 26, 2023 19:20 IST
    டெல்லி இஸ்ரேல் தூதரகம் அருகே குண்டுவெடிப்பு?

    டெல்லியில் இஸ்ரேல் தூதரகம் அருகே வெடிகுண்டு வெடித்ததாக தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். சம்பவ இடத்தில் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.



  • Dec 26, 2023 19:00 IST
    வெள்ளத்தின்போது உதவிய மீனவர்கள், கிராம மக்களுக்கு மு.க.ஸ்டாலின் பாராட்டு

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “நேசக்கரம் நீட்டி நிவாரண பணிகளுக்கு தங்களை ஒப்படைத்துக் கொண்ட தூத்துக்குடி, கன்னியாகுமரி, ராமநாதபுரம், நெல்லை, புதுக்கோட்டை மாவட்ட மீனவர்களின் பண்பும், திருச்செந்தூர் விரைவு ரயில் பயணிகளைக் காப்பாற்றிய கிராம மக்களின் அன்பும்  “The Best way to find yourself i sto lose yourself in the service of others" என்று தேசத் தந்தை மகாத்மா காந்தி சொன்னதை நினைவுபடுத்துகிறது. அடுத்தவருக்கு உதவுவதில் கரைந்து போனால், வெறுப்புணர்ச்சிகள் தோற்று, மானுடம் தழைக்கும்” என்று கூறினார்.



  • Dec 26, 2023 19:00 IST
    வெள்ளத்தின்போது உதவிய மீனவர்கள், கிராம மக்களுக்கு மு.க.ஸ்டாலின் பாராட்டு

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “நேசக்கரம் நீட்டி நிவாரண பணிகளுக்கு தங்களை ஒப்படைத்துக் கொண்ட தூத்துக்குடி, கன்னியாகுமரி, ராமநாதபுரம், நெல்லை, புதுக்கோட்டை மாவட்ட மீனவர்களின் பண்பும், திருச்செந்தூர் விரைவு ரயில் பயணிகளைக் காப்பாற்றிய கிராம மக்களின் அன்பும்  “The Best way to find yourself i sto lose yourself in the service of others" என்று தேசத் தந்தை மகாத்மா காந்தி சொன்னதை நினைவுபடுத்துகிறது. அடுத்தவருக்கு உதவுவதில் கரைந்து போனால், வெறுப்புணர்ச்சிகள் தோற்று, மானுடம் தழைக்கும்” என்று கூறினார்.



  • Dec 26, 2023 18:03 IST
    வெள்ள பாதிப்பு சூழலை சீரமைக்க கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் - மு.க. ஸ்டாலின்

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பதிவு: “வெள்ள பாதிப்பு சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள மத்திய அரசின் நிவாரண நிதி தேவை; மிக்ஜாம் புயல் கனமழையால் பெரும் பாதிபுகளை சந்தித்துள்ளதால் உடனே மத்திய அரசு நிதி வழங்க வேண்டும்; நிவாரண நிதியின் அவசியத்தை வலியுறுத்தி 72 பக்கங்கள் கொண்ட மனுவை அமைச்சர் தங்கம் தென்னரசு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் அளித்துள்ளார்” என்று பதிவிட்டுள்ளார்.



  • Dec 26, 2023 17:56 IST
    சேலம் பெரியார் பல்கலைக்கழக துணை வேந்தர் கைது

    போலி ஆவணங்கள் தயாரித்து தனியார் நிறுவனங்களிடம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து, அரசு செலவில் அலுவலர்களை பயன்படுத்தியது தொடர்பாக எழுந்த புகாரில் பெரியார்  பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன சேலம் மாநகர போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.



  • Dec 26, 2023 17:23 IST
    புயல், மழை வெள்ளத்தால் சேதமடைந்த கோயில்களின் கட்டுமானங்களை சீரமைக்க ரூ. 5 கோடி ஒதுக்கீடு

    மிக்ஜாம் புயல் மற்றும் மழை வெள்ளத்தால் சேதமடைந்த கோயில்களின் கட்டுமானங்கள், ரூ. 5 கொடி செலவில் சீரமைக்கப்படும் என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு தலைமையில் நடந்த ஆய்வுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. 8 மாவட்டங்களில் 26 கோயில்களில் முன் மண்டபம், படித்துறை, சுற்றுச்சுவர் உள்ளிட்ட் கட்டுமானங்கள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீரமைப்பு பணிகள் விரைவில் தொடங்கும் என தகவல் வெளியாகி உள்ளது.



  • Dec 26, 2023 17:01 IST
    லதா ரஜினிகாந்த்துக்கு நிபந்தனை முன்ஜாமின்

    மோசடி புகாரில் லதா ரஜினிகாந்த்துக்கு பெங்களூரு நீதிமன்றம் நிபந்தனை முன்ஜாமின் வழங்கியது. கோச்சடையான் பட தயாரிப்புக்காக, ரூ6.2 கோடி கடன் பெற்றதில் உத்தரவாத கையெழுத்திட்டு மோசடி செய்ததாக லதா ரஜினிகாந்த் மீது பெங்களூரு நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. பிடிவாரண்டை ரத்து செய்யக் கோரி, லதா ரஜினிகாந்த் ஆஜரான நிலையில், ஜாமின் வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், பெங்களூரு நீதிமன்றம் வழக்கு விசாரணையை ஜனவரி 6ம் தேதிக்கு ஒத்திவைத்தது



  • Dec 26, 2023 16:52 IST
    தூத்துக்குடியில் நிர்மலா சீதாராமன் ஆய்வு

    தூத்துக்குடி, கோரம்பள்ளம் பகுதியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆய்வு மேற்கொண்டார். கோரம்பள்ளம் குளக்கரையில் 150 மீட்டர் உடைப்பு ஏற்பட்ட பகுதிகளை ஆய்வு செய்து வருகிறார். தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, மத்திய இணையமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்



  • Dec 26, 2023 16:38 IST
    தென்மாவட்ட மாணவர்களுக்கு புத்தகங்கள், சீருடைகள் தயார்

    மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்ட மாணவர்களுக்கு புத்தகங்கள், சீருடைகள் தயாராக இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், பள்ளிகள் சீரமைப்புக்கும் கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்ய வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்



  • Dec 26, 2023 16:14 IST
    சரக்குக் கப்பல்களைத் தாக்கியவர்கள் கண்டறியப்படுவர் - ராஜ்நாத் சிங்

    சரக்குக் கப்பல்களைத் தாக்கியவர்களை இந்தியா நிச்சயம் கண்டறியும் என பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்



  • Dec 26, 2023 15:56 IST
    சபரிமலையில் 39 நாளில் ரூ.204.30 கோடி வருமானம்

    சபரிமலையில் 39 நாளில் 204.30 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கப்பெற்றுள்ளது என தேவசம்போர்டு அறிவித்துள்ளது



  • Dec 26, 2023 15:34 IST
    காஸா மீதான இஸ்ரேல் தாக்குதலுக்கு விநோத எதிர்ப்பு

    காஸா மீது இஸ்ரேல் நடத்தி வரும் தொடர் தாக்குதலுக்கு விநோதமாக எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதலை கண்டித்து, பெத்லகேமில் பெண் ஒருவர் இன்குபேட்டரில் குழந்தை இயேசு சிலையை வைத்து வழிபட்டுள்ளார்.



  • Dec 26, 2023 15:01 IST
    கல்வி கட்டணத் தொகை உயர்வு

    உயர் கல்வி பயிலும் ஆசிரியர்களின் குழந்தைகளுக்கான கல்வி கட்டணத் தொகை ரூ 50,000 வரை உயர்வு விண்ணப்பங்களை 31ம் தேதிக்குள் அனுப்ப பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு



  • Dec 26, 2023 14:47 IST
    பா.ஜ.க.,வுடன் கூட்டணி இல்லை; பொதுக்குழுவில் இ.பி.எஸ் உறுதி

    மத்தியில் யார் ஆட்சி செய்தாலும் தமிழகத்தை மாற்றான் தாய் மனப்பான்மையுடன் தான் நடத்துகிறார்கள். தமிழக அரசு கேட்கும் எந்த நிதியையும் மத்திய அரசு வழங்கியது இல்லை என்ற வரலாறு உள்ளது. பா.ஜ.க.,வுடன் கூட்டணி இல்லை எனவும் அ.தி.மு.க பொதுக்குழு மற்றும் செய்ற்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்



  • Dec 26, 2023 14:16 IST
    ஜெயலலிதா என்னிடம் ரூ.2 கோடி கடன் கேட்டார்: ஓ.பி.எஸ்

    |நிதி சுமையால் ஜெயலலிதா என்னிடம் ரூ 2 கோடி கட்சி பணத்தை கடனாக கேட்டார் -கோவையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்ட புதிய தகவல்



  • Dec 26, 2023 14:02 IST
    அதிமுகவை யாராலும் அழிக்க முடியாது- இ.பி.எஸ்

    அதிமுகவை யாராலும் அழிக்க முடியாது. உயிரோட்டம் உள்ள அதிமுகவை யாராலும் அழிக்க முடியாது. 

     மக்களுக்காக தோற்றுவிக்கப்பட்ட கட்சி அதிமுக. அளவு கடந்த சோதனை மற்றும் வெற்றியை பார்த்தது அதிமுக தான்- எடப்பாடி பழனிசாமி 



  • Dec 26, 2023 13:39 IST
    அ.தி.மு.க இனி  ‘ஜெட்’ வேகத்தில் செயல்படும்: இ.பி.எஸ்

    நீதிமன்றத்திலும் நீதி வென்று விட்டது. தேர்தல் ஆணையத்திலும் அங்கீகாரம் கிடைத்து விட்டது. “இனி அதிமுக ‘ஜெட்’ வேகத்தில் செயல்படும்- அதி



  • Dec 26, 2023 13:36 IST
    ஓ.பி.எஸ் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை

    கோவை சூலூர் அருகே தனது ஆதரவாளர்களுடன் ஓ.பன்னீர் செல்வம் ஆலோசனை. மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பூத் கமிட்டி அமைப்பது தொடர்பாக ஓ.பி.எஸ் ஆலோசனை



  • Dec 26, 2023 13:32 IST
    எதிரிகள் அஞ்சும் அளவுக்கு நடந்த மதுரை மாநாடு: இ.பி.எஸ்

    மதுரையை அதிர வைத்த அதிமுக மாநாடு.

    மதுரை மாநகரமே குலுங்கும் அளவுக்குஅதிமுக மாநாடு நடைபெற்றது. வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு மதுரை மாநாட்டை அதிமுக நடத்தியது.

    அதிமுக வரலாற்றிலேயே 15 லட்சம் பேர் கலந்துக் கொண்ட மாநாடு. எதிரிகள் அஞ்சும் அளவுக்கு மதுரை மாநாட்டைநடத்திய அதிமுக- எடப்பாடி பழனிசாமி  



  • Dec 26, 2023 12:45 IST
    காவல்துறை சம்மனுக்கு ஆஜர் ஆகாத அமலாக்கத்துறை

    அமலாக்கத்துறை அலுவலகத்தில் சட்ட விரோதமாக சோதனை நடத்தப்பட்டதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் டிஜிபி-யிடம் புகார்



  • Dec 26, 2023 12:37 IST
    திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம்

    நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து எந்தவித தீர்மானமும் அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்படவில்லை. 

    அதிமுகவின் 23 தீர்மானங்களில் பெரும்பாலானவை திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்து நிறைவேற்றப்பட்டுள்ளன

    மிக்ஜாம் புயல் தொடர்பாக திமுகவை குற்றம்சாட்டிய நிலையில், மத்திய அரசுக்கு எந்தவித கோரிக்கையும் வைக்கப்படவில்லை.



  • Dec 26, 2023 12:36 IST
    தூத்துக்குடி சென்றடைந்தார் நிர்மலா சீதாராமன்

    கனமழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள தூத்துக்குடி மாவட்டம் 

    வெள்ள பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்ய தூத்துக்குடி சென்ற மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்



  • Dec 26, 2023 12:14 IST
    ஜானகி அம்மையார் நூற்றாண்டு விழா - தீர்மானம்

    ஜானகி அம்மையார் நூற்றாண்டு விழா - தீர்மானம். ஜானகி அம்மையார் நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாட ஈபிஎஸ் சிறப்பு தீர்மானம். அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களும் வழி மொழிந்தார்கள்



  • Dec 26, 2023 11:55 IST
    முதலமைச்சருக்கு கண்டனம் - அதிமுக தீர்மானம்

    ஆட்சிக்கு வந்தவுடன் முதல் கையெழுத்து நீட் தேர்வு ரத்துதான் என்று திமுக அரசின் ஸ்டாலினும், திமுகவை சேர்ந்தவர்களும் மக்களை ஏமாற்றி வாக்குறுதி அளித்தனர்.

    சொன்னதை செய்வோம் என்று கூறி மக்களை ஏமாற்றிய மு.க. ஸ்டாலினுக்கு கண்டனம்- அதிமுக பொதுக்குழு, செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றம்



  • Dec 26, 2023 11:55 IST
    அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள்

    அதிமுக பொதுக்குழுவில் முன்மொழியப்பட்டுள்ள 23 தீர்மானங்களில் பாஜக பற்றியோ, நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்தோ எந்த தீர்மானமும் இடம்பெற வில்லை!



  • Dec 26, 2023 11:55 IST
    அதிமுக செயற்குழு கூட்டத்தில் 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது

    அதிமுக செய்குழு கூட்டத்தில் 23 தீர்மானங்களையும் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் முன்மொழிந்து வருகிறார்;

    எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கை தொடர்பாக மரபுகளை கடைப்பிடிக்காத பேரவைத் தலைவருக்கு கண்டனம்;

    மீனவர் நலனை பாதுகாக்க கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தீர்மானம்;

    நாடாளுமன்ற பாதுகாப்பு அத்துமீறல் சம்பவத்துக்கு கண்டனம், பாதுகாப்பை உறுதிப்படுத்த வலியுறுத்தல்;

    ஈழ தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க மத்தியஅரவை வலியுறுத்தி தீர்மானம்

    அவசர கதியில் பொதுப் பாடத் திட்டத்தை அமல்படுத்த நினைக்கும் தமிழ்நாடு அரசுக்குகண்டனம்;

    20 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ள இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்ய வலியுறுத்தி தீர்மானம்;

    புயலின் தாக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து மக்களை காப்பாற்றி மறுவாழ்வு அளிக்க வேண்டிய கடமை மத்திய அரசுக்கும் உண்டு என்பதை உணர்ந்து தேவையான நிதி உதவியை தமிழ்நாட்டுக்கு வழங்க முன்வர வேண்டும்

    உள்ளிட்ட 23 தீர்மானங்கள் அதிமுக செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது



  • Dec 26, 2023 11:37 IST
    அன்புமணி ராமதாஸ் சிறப்பு மருத்துவ முகாம்

    சென்னை எண்ணூரில் எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்டுள்ள பகுதியில் பசுமைத் தாயகம் அமைப்பு சார்பில் சிறப்பு மருத்துவ முகாம்

    மக்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்து மருத்துவ ஆலோசனை வழங்கினார் அன்புமணி ராமதாஸ்



  • Dec 26, 2023 11:29 IST
    அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றம்

    எதிர் வரும் மக்களவைத் தேர்தலில் புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் வகையில் தொண்டர்கள் களப்பணி ஆற்ற வேண்டும் என அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றம்

    மக்களவையில் பாதுகாப்பு குறைப்பாட்டால் நடந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றம்!



  • Dec 26, 2023 11:17 IST
    ஒ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களுடன் ஆலோசனை

    கோவை சூலூரில் உள்ள தனியார் மண்டபத்தில்  தனது ஆதரவாளர்களுடன் முன்னாள் முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை;

     நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் பூத் கமிட்டி அமைப்பது குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது



  • Dec 26, 2023 11:07 IST
    பழனிசாமியை ஆட்சியில் அமர செய்வோம்- வளர்மதி பேச்சு

    எடப்பாடி பழனிசாமியை ஆட்சியில் அமர செய்வோம். வெற்றி தொட்டு விடும் தூரத்தில் தான் உள்ளது

    அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் வளர்மதி பேச்சு...

     



  • Dec 26, 2023 11:06 IST
    சிதம்பரம் நடராஜர் கோயிலில் தேர் திருவிழா

    சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு இன்று தேர் திருவிழா கோலாகலம்

    பல்லாயிரகணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்



  • Dec 26, 2023 11:06 IST
    அங்கித் திவாரி மீது அமலாக்கத்துறை வழக்குப் பதிவு

    திண்டுக்கல் மருத்துவரிடம் லஞ்சம் பெற்ற புகாரில் கைது செய்யப்பட்ட அங்கித் திவாரி மீது அமலாக்கத்துறை வழக்குப் பதிவு

    வழக்கு விவரங்களை லஞ்ச ஒழிப்புத் துறையிடம் கோரியது.           



  • Dec 26, 2023 10:50 IST
    அதிமுகவின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் தொடங்கியது

    அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் அதிமுகவின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் தொடங்கியது



  • Dec 26, 2023 10:33 IST
    நெல்லை மாவட்டத்தில் வெள்ள நிவாரண தொகைக்கான டோக்கன் விநியோகம் தொடக்கம்!

    நெல்லை மாவட்டத்தில் வெள்ள நிவாரண தொகைக்கான டோக்கன் விநியோகம் தொடக்கம். சேரன்மகாதேவி, பாளையங்கோட்டை, அம்பாசமுத்திரம் வட்டங்களில் டோக்கன் விநியோகம்



  • Dec 26, 2023 10:16 IST
    தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 உயர்வு

    சென்னையில் இன்று காலை நிலவரப்படி ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.47,160 ஆகவும், ஒரு கிராம் தங்கம் ரூ.5,815க்கும் விற்பனை செய்யப்படுகிறது.



  • Dec 26, 2023 10:15 IST
    கடத்தல் புகார்- தரையிறக்கப்பட்ட விமானம் இந்தியா வந்தது

    300க்கும் மேற்பட்ட இந்தியர்களுடன் துபாய்- மத்திய அமெரிக்கா சென்று கொண்டிருந்த விமானம் சந்தேகத்தின் பேரில், கடந்த வியாழக்கிழமை பிரான்சில் தரையிறக்கப்பட்டது. அது இன்று காலை இந்தியா வந்தடைந்தது.

    ஒரே விமானத்தில் 300க்கும் மேற்பட்ட இந்தியர்கள் இருந்ததால் சந்தேகமடைந்த பிரான்ஸ் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் விமான பயணிகள் உரிய அனுமதி பெற்றதும், மனித கடத்தல் இல்லை என்பதும் தெரியவந்துள்ளது.



  • Dec 26, 2023 09:37 IST
    கடலூரில் உள்ளூர் விடுமுறை

    சிதம்பரம் நடராஜர் ஆலய ஆருத்ரா தரிசன விழா நடைபெற உள்ளதால் கடலூர் மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

    - மாவட்ட ஆட்சியர்



  • Dec 26, 2023 09:36 IST
    உத்தரகோசமங்கை ஆருத்ரா தரிசன விழா

    ராமநாதபுரம்: உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோவிலில் ஆருத்ரா தரிசன விழா கோலாகலமாக நடைபெற்றது வருகிறது.

    ஒற்றைக்கல் பச்சை மரகத நடராஜருக்கு சந்தனக்காப்பு களையும் நிகழ்வு இன்று நடராஜருக்கு 32 வகையான அபிஷேகங்கள்  நடைபெற்றது

    திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்..           



  • Dec 26, 2023 09:28 IST
    ஒரே நாளில் 628 பேருக்கு கொரோனா தொற்று

    கேரளாவில் கடந்த 24மணி நேரத்தில் 128 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நாட்டில் ஒரே நாளில் 628 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து கொரோனா சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்தை கடந்துள்ளது.



  • Dec 26, 2023 09:26 IST
    நிர்மலா சீதாராமன் தூத்துக்குடியில் இன்று நேரில் ஆய்வு

    தூத்துக்குடி மழை வெள்ள பாதிப்புகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நேரில் ஆய்வு செய்கிறார்.



  • Dec 26, 2023 09:26 IST
    இன்று அதிமுக பொதுக்குழு கூட்டம்

    அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் இன்று சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்தில் அவை தலைவர் தமிழ் மகன் உசேன் தலைமையில் நடைபெறுகிறது.

    கட்சியின் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி அதிகாரப்பூர்வமாக பொறுப்பேற்ற பின்னர் முதல் முறையாக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் இன்று நடைபெறுகிறது.



  • Dec 26, 2023 09:26 IST
    லடாக்கில் நில நடுக்கம்

    லே லடாக்  பகுதியில் இன்று அதிகாலை 4.33 மணிக்கு லேசான நில அதிர்வு

    ரிக்டர் அளவுகோலில் 4.5 ஆக பதிவாகி உள்ளதாக தேசிய நில அதிர்வு கண்காணிப்பு மையம் அறிவிப்பு



  • Dec 26, 2023 08:25 IST
    சிதம்பரம் ஆருத்ரா தரிசன விழா

     உலகப் பிரசித்தி பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவில் ஆருத்ரா தரிசன விழா தேரோட்டம் கோலாகலமாக தொடங்கியது. 



Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment