Advertisment

Tamil New Highlights: நாகை தொகுதி எம்.பி செல்வராசு உடல்நலக்குறைவால் காலமானார்

Tamil Nadu News Update Today- 12 May 2024- இன்று நடக்கும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
sasa

IE Tamil Updates

Tamil Nadu | Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.100.75 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 92.34 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.

Advertisment

 கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து கொலை: முக்கிய குற்றவாளிகள் கைது

கும்மிடிப்பூண்டி அருகே மாதர்பாக்கத்தில் பெண்ணை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த சுவேந்தர், சூர்யா, ஜெபக்குமார் ஆகியோர் கைது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

  • May 12, 2024 22:19 IST
    பட்டாசு ஆலை வெடிவிபத்து; 3 பேர் மீது வழக்குப்பதிவு

    விருதுநகர் நாரணபுரம் பட்டாசு ஆலை வெடிவிபத்து விபத்து தொடர்பாக உரிமையாளர் உட்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது



  • May 12, 2024 19:59 IST
    சேப்பாக்கத்தில் சி.எஸ்.கே அணியின் 50-வது வெற்றி

    ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றிபெற்றதை அடுத்து, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சேப்பாக்கம் மைதானத்தில் 50 ஆவது வெற்றியை பதிவு செய்துள்ளது



  • May 12, 2024 19:29 IST
    ஒரு லட்சத்தை கடந்த பொறியியல் மாணவர் சேர்க்கை விண்ணப்பப் பதிவு

    கடந்த 6ம் தேதி தொடங்கிய பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவில் இதுவரை 1,00,699 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இதில் 56,044 மாணவர்கள் கலந்தாய்வு கட்டணத்தை செலுத்தியும், 27,755 மாணவர்கள் சான்றிதழை பதிவேற்றம் செய்தும் விண்ணப்பதை பூர்த்தி செய்துள்ளனர்.



  • May 12, 2024 18:41 IST
    ராகுல் காந்தி அயோத்தி கோவிலுக்கு செல்லாதது ஏன்? அமித் ஷா கேள்வி

    ராகுல் காந்திக்கு அமித் ஷா சில கேள்விகளை எழுப்பியுள்ளார்.
    அதில்,
    1) ராகுல் காந்தி அயோத்தி ராமர் கோவிலுக்கு செல்லாதது ஏன்?
    2) முத்தலாக் தடை மற்றம் காஷ்மீர் 370 சட்டப்பிரிவு நீக்கம் இதை மீண்டும் கொண்டுவர விரும்புகிறீர்களா?
    3) சர்ஜிக்கல் ஸ்டிரைக்கை ஆதரிக்கிறீர்களா? இல்லையா?
    4) முஸ்லீம் தனிநபர் சட்டம் கொண்டுவரப்படுமா? என்பன போன்ற கேள்விகளும் அடங்கும்.



  • May 12, 2024 18:31 IST
    திருவள்ளூரில் த.வெ.க நீர் மோர் திறப்பு

    திருவள்ளூரில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் அமைக்கப்பட்டிருந்த நீர் மோர் பந்தலை தாடி பாலாஜி திறந்துவைத்தார்.



  • May 12, 2024 17:36 IST
    சேலத்தில் கோடை மழை

    கோடை வெயில் சுட்டெரித்து வந்த நிலையில், சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே நீண்ட நேரமாக மழை பெய்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.



  • May 12, 2024 17:28 IST
    குமுளி மலைச் சாலையில் பெரும் விபத்து தவிர்ப்பு!

    தேனி மாவட்டம் குமுளியில் இருந்து பிற்பகல் திண்டுக்கல் நோக்கிப் பயணிகளுடன் கிளம்பிய அரசுப் பேருந்து, மலைச் சாலையில் வந்து கொண்டிருக்கும்போது பிரேக் செயலிழக்கவே, ஓட்டுநரின் சாதுர்யத்தால் தடுப்புச் சுவரில் மோதி நின்றது. இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.



  • May 12, 2024 16:38 IST
    அன்னையர் தினம்: ஆர்.என். ரவி வாழ்த்து

    “அன்னையர் நமது மிகப்பெரிய பலம் மற்றும் உத்வேகம். ஒவ்வொரு தாயும் வார்த்தையால் வெளிப்படுத்த முடியாத நமது வாழ்வை வடிவமைக்கின்றனர்” என ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்துள்ளார்.



  • May 12, 2024 16:00 IST
    1,000 பேருந்துகளில் மின்விசிறி பொருத்தம்


    சென்னை மாநகரப் பேருந்துகளில் ஓட்டுநர் இருக்கைக்கு மேல் பேட்டரி மின்விசிறி பொருத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகின்றன என மாநகர் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.



  • May 12, 2024 14:54 IST
    டெல்லியில் 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும்: அரவிந்த் கெஜ்ரிவால் பரப்புரை

    டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு வந்தால் ஏழை எளிய மக்களுக்கு 200 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்படும்.
    நாட்டில் 24 மணி நேரமும் மின்சாரம் வழங்கப்படும். அனைவருக்கும் இலவச கல்வி, மற்றும் இலவசமாக மருத்துவ உதவிகள் செய்து தரப்படும்
    எம்.எஸ்.சுவாமிநாதன் பரிந்துரை படி பயிற்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்கப்படும்
    சீன ஆக்கிரமிப்பு பகுதிகள் மீட்கப்படும்; ஜிஎஸ்டி மறுசீராய்வு செய்யப்படும்” என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.



  • May 12, 2024 13:56 IST
    ராகுலின் வயதை விட குறைவான இடங்களையே காங். பெறும்: மோடி

    காங்கிரஸின் இளவரசர் ராகுலின் வயதை விட குறைவான இடங்களையே அக்கட்சி வெற்றி பெறும். டி.எம்.சி ஆட்சியில் மே.வங்கத்தில் உள்ள இந்துக்கள் 2-ம் தர குடிமக்களாக மாறிவிட்டனர். ராம நவமியை கொண்டாடவோ,  ராமர் பெயரை உச்சரிக்கவோ டி.எம்.சி அனுமதிக்கவில்லை-  மோடி



  • May 12, 2024 13:53 IST
    ஆண்டிபட்டி அருகே வெறிநாய் கடித்து 15 பேர் காயம்

    ஆண்டிபட்டியில் ஒரே இரவில்  வெறிநாய் கடித்ததில் 2 சிறுவனர்கள், 3 பெண்கள் உள்பட 15 பேர் காயம். குமணன்தொழு, ஆலந்தளிரில் வெறிநாய் கடித்து காயமடைந்த நபர்களுக்கு மருத்துவமனையில் சிசிச்சை. நாய்களை பிடிக்கும் பணியில் குமணன்தொழு ஊராட்சி நிர்வாகத்தினர் ஈடுபட்டுள்ளனர்.



  • May 12, 2024 13:52 IST
    ஜூன் 4க்கு பிறகு அ.தி.மு.க-வில் பிளவு ஏற்படும்:ரகுபதி 

    குஜராத்தில் 10 இடங்களில் பா.ஜ.க. வெற்றி பெறுவதே அரிது. எதிர்க்கட்சித் தலைவர் எதிர்க்கட்சியாக செயல்பட வேண்டும். வேறுவிதமான விமர்சனங்களை வைத்தால் அவருடைய பதவிக்கு ஆபத்து. ஜூன் 4க்கு பிறகு அ.தி.மு.க. மிகப்பெரிய பிளவு ஏற்படும் - அமைச்சர் ரகுபதி 



  • May 12, 2024 13:13 IST
    10 மாவட்டங்களில் இன்று கனமழை

    10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு

    தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு. நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, நெல்லை, குமரி உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம்  



  • May 12, 2024 12:54 IST
    சாலையில் உறங்கியவர்கள் மீது காரை ஏற்றிய பெண்

    சென்னை அசோக் நகர் 10-வது தெருவில் வசித்து வரும் சரிதா என்பவரின் இல்ல நிகழ்ச்சிக்காக அவரது உறவினர்கள் ஏராளமானோர் வந்துள்ளனர்.

    இரவு வீட்டில் இடப்பற்றாக்குறையால் உறவினர்கள் சிலர் வீட்டின் முன்புள்ள சாலையில் உறங்கியுள்ளனர். இந்நிலையில் அதிகாலை 4 மணிக்கு அவ்வழியாக காரில் வந்த மகாராஷ்டிராவை சேர்ந்த வைஷாலி என்ற பெண் உறங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது, காரை ஏற்றிவிட்டு நிற்காமல் சென்றதாக கூறப்படுகிறது.

     ஆனால் அந்த சாலை முட்டு சந்து என்று தெரியாததால் காரை நிறுத்திய அந்த பெண்ணை பொதுமக்கள் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். கூகுள் மேப்பை பார்த்து காரை ஓட்டிவந்ததாக அந்த பெண் தெரிவித்துள்ள நிலையில், மதுபோதையில் காரை ஒட்டி வந்ததாக பொதுமக்கள் புகாரளித்துள்ளதால் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 



  • May 12, 2024 12:43 IST
    முத்திரைக் கட்டணம் உயர்வு: இபிஎஸ் கண்டனம்

    முத்திரைக் கட்டணத்தை உயர்த்தியது கண்டிக்கத்தக்கது: இபிஎஸ்

    3 ஆண்டு சோதனை ஆட்சியின் பரிசாக முத்திரைக் கட்டணத்தை உயர்த்திய திமுக அரசுக்கு கண்டனம்.  எவ்வித நியாயமும் இன்றி உயர்த்தப்பட்ட முத்திரைக் கட்டணங்களை அரசு திரும்ப பெற வேண்டும். சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி வழிகாட்டி மதிப்பையும் முன்பிருந்த நிலைக்குத் தொடர வேண்டும்- எடப்பாடி பழனிசாமி



  • May 12, 2024 12:20 IST
    தண்ணீர் தொட்டியில் விழுந்த குழந்தை பலி

    மீஞ்சூர் அருகே தனியார் செங்கல் சூளையில் விளையாடி கொண்டிருந்த ஒன்றரை வயது குழந்தை தண்ணீர் தொட்டியில் விழுந்து உயிரிழப்பு. உத்தரபிரதேசத்தை சேர்ந்த புலம் பெயர் தொழிலாளியான கலாவதி தேவி சமையல் செய்து கொண்டிருந்தபோது குழந்தை சிரியான்ஸ் தவறி விழுந்துள்ளது. 



  • May 12, 2024 12:19 IST
    ஆந்திராவில் நாளை தேர்தல்

    ஆந்திராவில் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபடும் ஊழியர்கள். ஆந்திராவில் உள்ள 25 மக்களவை மற்றும் 175 தொகுதிகளுக்கும் நாளை ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.



  • May 12, 2024 12:10 IST
    நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக் கொள்ள வேண்டும்

    “கோவிஷீல்டு தடுப்பூசியால் தமிழ்நாட்டில் பக்கவிளைவுகள் இல்லை”

    எந்த தடுப்பூசியாக இருந்தாலும் அவரவர் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு திறனை பொறுத்து தான் பின் விளைவுகள் இருக்கும்

    கோவிஷீல்டு தடுப்பூசியால் தமிழ்நாட்டில் யாருக்கும் எவ்வித பக்கவிளைவுகளும் ஏற்படவில்லை. யாரும் பதற்றத்துடன் இருக்க வேண்டாம்

    நோய் எதிர்ப்பு சக்தி தங்கள் உடலில் குறைவாகாத வண்ணம் தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்

    காலையில் எழுந்து நடப்பது உள்ளிட்ட உடற்பயிற்சிகளை செய்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக் கொள்ள வேண்டும் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி  



  • May 12, 2024 12:10 IST
    நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக் கொள்ள வேண்டும்

    “கோவிஷீல்டு தடுப்பூசியால் தமிழ்நாட்டில் பக்கவிளைவுகள் இல்லை”

    எந்த தடுப்பூசியாக இருந்தாலும் அவரவர் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு திறனை பொறுத்து தான் பின் விளைவுகள் இருக்கும்

    கோவிஷீல்டு தடுப்பூசியால் தமிழ்நாட்டில் யாருக்கும் எவ்வித பக்கவிளைவுகளும் ஏற்படவில்லை. யாரும் பதற்றத்துடன் இருக்க வேண்டாம்

    நோய் எதிர்ப்பு சக்தி தங்கள் உடலில் குறைவாகாத வண்ணம் தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்

    காலையில் எழுந்து நடப்பது உள்ளிட்ட உடற்பயிற்சிகளை செய்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக் கொள்ள வேண்டும் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி  



  • May 12, 2024 12:09 IST
    இ.பி.எஸ் பிறந்தநாள்: விஜய் வாழ்த்து

    அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு தவெக தலைவர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து.



  • May 12, 2024 12:02 IST
    70 கி கேக் வெட்டி இ.பி.எஸ் பிறந்த நாள் கொண்டாட்டம்

    அ.தி.மு.க பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமிக்கு இன்று 70-வது பிறந்த நாள் சேலத்தில் 70 கிலோ எடை கொண்ட பிரம்மாண்ட கேக் வெட்டி கொண்டாட்டம்



  • May 12, 2024 11:35 IST
    இலங்கைக்கு கப்பல் போக்குவரத்து மீண்டும் தள்ளிவைப்பு

    நாகையில் இருந்து இலங்கைக்கு நாளை தொடங்கவிருந்த கப்பல் போக்குவரத்து மீண்டும் தள்ளிவைப்பு. நாகைக்கு வரவேண்டிய பயணியர் கப்பல் தாமதமானதால், வரும் 17ஆம் தேதிக்கு தள்ளிவைப்பு.

    யாழ்ப்பாணம் செல்லவிருந்த, சுற்றுலா பயணிகள் மற்றும் வர்த்தகர்கள் ஏமாற்றம். முன்பதிவு செய்த பயணிகள் பயண தேதியை மாற்றிக் கொள்ளலாம் அல்லது கட்டணத்தை திரும்ப பெற்று கொள்ளலாம் என அறிவிப்பு



  • May 12, 2024 11:34 IST
    கோவிஷீல்டு: பக்க விளைவுகள் ஏற்படவில்லை

    கோவிஷீல்டு தடுப்பூசியால் தமிழ்நாட்டில் யாருக்கும் பக்க விளைவுகள் ஏற்படவில்லை - கோயம்பேட்டி நீர் மோர் பந்தலை திறந்து வைத்த பின் அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேட்டி 



  • May 12, 2024 10:50 IST
    முதல்வர் ஸ்டாலின் அன்னையர் தின வாழ்த்து

    உயிராக உருவான நம்மை தன் வயிற்றுக்குள் சுமந்து, வாழ்நாளெல்லாம் பாசத்தோடு அரவணைக்கும் அன்பின் திருவுரு அம்மா" "தூய்மையான அன்பை மாரியெனப் பொழியும் தாய்மார்கள் அனைவருக்கும் அன்னையர் நாள் வாழ்த்துகள்!" "ஈன்றவள் நம்மைச் சான்றோன் எனக் கேட்க வாழ்ந்து அன்னையரைப் போற்றுவோம்!" - முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவு. 



  • May 12, 2024 10:18 IST
    7 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு

    செங்கல்பட்டு, மயிலாடுதுறை, நாகை, கடலூர், திருவாரூர், தஞ்சை, அரியலூர் ஆகிய 7 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு.



  • May 12, 2024 10:18 IST
    70 கிலோ கேக் பிறந்த நாளை கொண்டாடிய இ.பி.எஸ்

     70 கிலோ கேக் வெட்டி தனது பிறந்தநாளை கொண்டாடிய அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி. பழனிசாமி



  • May 12, 2024 10:18 IST
    அன்னையர் தின வாழ்த்துகளை பகிர்ந்த விஜய்


  • May 12, 2024 10:14 IST
    மதுரை வைகையாற்றில் 2வது நாளாக வெள்ளப்பெருக்கு

    வைகை ஆற்றின் இணைப்பு சாலைகளில் தண்ணீர் தேங்கி குளம்போல காட்சியளிக்கிறது வைகை அணையில் இருந்து 3000 கன அடி நீர் திறந்துள்ள நிலையில் மழை பெய்வதால் வெள்ளம் மதுரை, தேனி மாவட்டங்களில் 3 நாட்களாக கோடை மழை நீடிப்பதால் வைகையில் வெள்ளம்



  • May 12, 2024 09:53 IST
    ஜெயக்குமார் வழக்கு : எரிந்த நிலையில் டார்ச் லைட் மீட்பு

    நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் கடைசியாக வாங்கிய டார்ச் லைட் எரிந்த நிலையில் கண்டெடுப்பு.  ஜெயக்குமாரின் உடல் கண்டெடுக்கப்பட்ட பகுதியில் இருந்து டார்ச் லைட் மீட்பு.  முழுவதும் எரிந்த நிலையில் டார்ச் லைட் மீட்கப்பட்ட நிலையில் தடயவியல் ஆய்வுக்கு உட்படுத்த முடிவு.  ஜெயக்குமார் டார்ச் லைட் வாங்கிய சிசிடிவி காட்சிகள் 3 தினங்களுக்கு முன்பு வெளியானது ஜெயக்குமார் எந்த பதற்றமும் இன்றி டார்ச் லைட் வாங்கி சென்றதாக கடை உரிமையாளர் தெரிவித்திருந்தார். 



  • May 12, 2024 09:28 IST
    நாகை - இலங்கை காங்கேசன்துறை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து நாளை தொடக்கம்: இன்று சோதனை ஓட்டம்

    நாகை - இலங்கை காங்கேசன்துறை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து நாளை தொடங்கவுள்ள நிலையில், இன்று சோதனை ஓட்டம்; நாளை காலை 8 மணிக்கு முதல் பயணம்



  • May 12, 2024 08:50 IST
    பென்னாகரத்தில் பூர்வக்குடி மக்களை வெளியேற்றிய விவகாரத்தில் வனத்துறை விளக்கம்

    பென்னாகரத்தில் பூர்வக்குடி மக்களை வெளியேற்றிய விவகாரத்தில் வனத்துறை விளக்கம் மாவட்ட ஆட்சியர் மற்றும் நீதிமன்ற உத்தரவுப்படி ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது - வனத்துறை/யானை வழித்தடங்கள் மற்றும் யானை வாழ்விடங்களில் குடியிருப்பவர்களை அகற்ற உத்தரவு - வனத்துறை நீதிமன்ற உத்தரவுப்படியே பூர்வக்குடிமக்கள், மீனவர்கள் உள்ளிட்டோரின் வீடுகள் வனத்துறை சட்டத்திற்கு உட்பட்டு அகற்றம் - வனத்துறை தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் வனப்பகுதியில் ஏமனூர், சிங்காபுரம், மணல் திட்டு உள்ளிட்ட பகுதிகளில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது 5 தலைமுறைகளாக குடியிருந்து வரும் மக்களை வீட்டில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றியதாக குற்றச்சாட்டு



  • May 12, 2024 08:12 IST
    5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

    தமிழ்நாட்டில் அடுத்த மூன்று மணிநேரத்தில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு-  சென்னை வானிலை ஆய்வு மையம்



  • May 12, 2024 08:06 IST
    அரசுப் பேருந்து தடுப்புச் சுவரில் மோதியதில் 24 பேர் காயம்

    சென்னையில் இருந்து காரைக்கால் சென்ற அரசு பேருந்து கடலூர் ரெட்டிசாவடி அருகே சென்றபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் தடுப்பில் மோதி விபத்து. பின்னால் வந்த ஆம்னி பேருந்து அரசுப் பேருந்து மீது மோதியதில், 24 பயணிகள் லேசான காயத்துடன் கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதி. 



Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment